ஒர்க்ஷீட்டில் மறு நாளைய தேதி
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா =TODAY() + 1 என அமையும். இந்த பார்முலாவினைக் கவனித்தால் ஒன்று தெரியவரும். பார்முலா, முதலில் அன்றைய தேதியைக் கணக்கிடுகிறது. பின் அதனுடன் 1 ஐக் கூட்டுகிறது. இதனால் மறுநாளைய தேதி கிடைக்கிறது. இவ்வாறே இதில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாம் நமக்குத் தேவையான நாளுக்கான தேதியைக் கொண்டு வரலாம். எடுத்துக் காட்டாக, 14 நாட்களுக்குப் பின்னர் உள்ள நாளுக்கான தேதியைக் கொண்டுவர, +14 எனத் தரலாம்.

செல்களைக் கட்டமிட
எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + & அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift +_ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா!
எக்ஸெல் ஷார்ட்கட் கீகள்
காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.
No comments:
Post a Comment