இறம்புட்டான்:- Rambutan.
ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்.
இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும்.
இப்பழத்தை மூன்று பாகமாக பிரிக்கலாம்.
அதாவது பழத்தின் மேல்தோல் பகுதி, பழத்தின் சதைப் பகுதி மற்றும் விதை பகுதி.
பழத்தின் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும்.
அதே போன்று பழத்தின் விதையும் மிகவும் கசப்பாக இருக்கும்.
இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதை பகுதியை மட்டுமே உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும்
.
ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும்.
ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது.
ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும்.
அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான கைகளைத் தரும்.
புதுதாக பறித்தப் பழங்களை கூடைகளில் போட்டு வைப்பது நல்லது.
பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது. ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . முள்கள் போன்று இருக்கும் .
உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும்.
அந்த சதையை சாப்பிட வேண்டும்
இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது.
No comments:
Post a Comment