ரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்த, 610 கிலோ எடை கொண்ட குண்டு மனிதர், பளு தூக்கும் இயந்திரம் மூலம் விமானத்தில் ஏற்றப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சவுதி அரேபியாவின் ஜிசன் நகரில் வசிப்பவர், காலீத் மோசீன் ஷைரி. இளைஞரான காலீத்தின் உடல் எடை, கணிசமாக கூடிக்கொண்டே சென்றது. தற்போது, 610 கிலோ எடையுள்ள காலீத், உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொள்ள முயன்றார். ஆனால் அவரது வீடு, இரண்டாவது மாடியில் இருந்தது. அங்கிருந்து அவரால் கீழே இறங்கி, மருத்துவமனைக்கு செல்ல வாய்ப்புஇல்லாமல் இருந்தது. இதையடுத்து அவர், அரசின் உதவியை நாடினார். சவுதி அரசு, இவருக்காக, அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட பளு தூக்கும் இயந்திரம், கட்டில் போன்றவற்றை அளித்தது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் உதவியுடன், பளு தூக்கும் இயந்திரத்தை கொண்டு, இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சரக்கு விமானத்தில் ஏற்றி, ரியாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு, உடல் எடையை குறைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment