தேவையான பொருட்கள் :
மாதுளை - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சிச்சாறு - 1 டீஸ்பூன்
வெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
சோள மாவு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• உருளைக்கிழங்கை வேகவைத்து மிக்ஸியில் அரைத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து வைக்கவும்.
• மாதுளை முத்துகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
• சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் உப்பு, வெள்ளை மிளகுத்தூள், இஞ்சிச்சாறு, உருளைக்கிழங்கு கலவை, மாதுளைச் சாறு சேர்த்துக் 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
• கடைசியாக இறக்கும் போது மேலே வெண்ணெய், கொத்தமல்லி, கொஞ்சம் மாதுளை முத்துக்களை தூவி இறக்கவும்.
No comments:
Post a Comment