Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, February 25, 2014

100 ஆண்டுகளை நிறைவு செய்த பாம்பன் ரயில் பாலம்!



ராமேசுவரம்-பாம்பன் பகுதியை இணைக்கும் வகையில் கடலில் அமைந்துள்ள மிக நீளமான ரயில் பாலம் திங்கள்கிழமையுடன் (பிப். 24) நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடாவை இணைக்கும் பகுதி பாம்பன் கடலாகும்.


மண்டபம் நிலப்பரப்பு பகுதியையும், பாம்பன் கடல் பகுதியையும் இணைக்கும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ள ரயில் பால கட்டுமானப் பணிகள் 1902 ஆம் ஆண்டு துவங்கின.

கடலில் ரசாயன கலவைகளோடு 144 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 மீட்டர் நீளத்தில் 1000 டன் இரும்பால் அமைந்துள்ள தூக்குப் பாலத்தை தாங்கும் அளவுக்கு கடலில் 124 அடி ஆழத்திலிருந்து இரண்டு பில்லர் தூண்கள் கட்டப்பட்டு, அதன் மேல் இரண்டு இரும்பு கிரில் லீப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பாலம் கட்டும் பணி 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டது. ஏறத்தாழ 10 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி

நடைபெற்றது. அனைத்து பணிகளும் முடிந்து 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மண்டபம் மற்றும் பாம்பன் பகுதி வழியாக தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

இந்த பாலம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே ஊழியர்களாகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 100 ஆண்டுகளை நிறைவு செய்த பாலத்தை சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment