என்னென்ன தேவை?
கேரட் - 2 (துருவியது),
பனீர் - 50 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
வடித்த சாதம் - ஒரு கப், உப்பு,
கொத்தமல்லி - தேவைக்கேற்ப,
கடுகு - தாளிக்க.
எப்படிச் செய்வது?
முதலில் பனீரை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு ஃபிரை செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கி பனீர் சேர்க்கவும். கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். தேவைப்பட்டால் தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இந்தக் கலவையை வடித்த சாதத்தில் கலந்து கிளறவும். மணமான கேரட் - பனீர் ரைஸ் ரெடி!
* பனீரில் உள்ள புரதமும் கேரட்டில் உள்ள வைட்டமின் ஏவும் கண்களைப் பாதுகாக்கும். பளீர் பார்வையைத் தரும்.
No comments:
Post a Comment