பல்லில் புழுக்கள் ! சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
உடல் பருமன் குறைய! வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
கணைச் சூடு குறைய! சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
படிகாரத்தைப் பொடித்து, நன்றாக வறுத்துக் கொள்ளவும், காவிக் கல்லை சிறிது நேரம் பாலில் ஊற வைத்து, பால் முழுவதையும் வடிகட்டி, வெயிலில் நன்றாகக் காய வைத்து இரண்டையும் ஒன்று கலந்து அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை: ஒருவேளைக்கு 1/2 டீஸ்பூன் அளவு, ஒருநாளைக்கு இரண்டு வேளை உருக்கிய நெய் அல்லது வெண்ணெயில் சாப்பிட்டு வந்தால் சீதக் கடுப்பு, இரத்தம் விழுதல் ஆகியவற்றால் ஏற்படும் குடற்புண்கள் குறையும்.
கடுக்காய் தோலை நன்றாகப் பொடி செய்து மெல்லிய சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொண்டு 2,3 சிட்டிகை அளவு வெண்ணெய் அல்லது நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதக் கழிச்சல் குறையும்
வாழைப் பூவை ஆய்ந்து பிட்டவியலாக வேகவைத்து பிழிந்த சாற்றை விட்டு கறிவேப்பிலையை மைப்போல அரைத்து அதில் பாக்களவு எடுத்து ஒரு குவைளை தயிரில் கலக்கி காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்துவர சீதபேதி குறையும்.
No comments:
Post a Comment