சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார்.
மிசோரியில் ஏற்பட்ட சூறாவளிப்புயலால் விமான நிறுத்தம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பதிலாகத் தற்காலிகமாக ஓர் ஏற்பாட்டை இந்த விமானத்தை நிறுத்துவதற்காகச் செய்து வைத்துள்ளனர்.
சூரிய ஒளி சமயம் இல்லாத இரவு நேரங்களில் தேவையான எரிசக்தியை, சேகரித்து வைக்கும் தொழில்நுட்பத் திறன் இதற்கு உண்டு என்பதால் இந்த விமானத்தை பிகார்டு இரவில் பறக்க வைத்துக் காண்பித்தார்.
செயிண்ட் லூயிஸில், இந்த முதன் சூரிய சக்தி விமானத்தை ஆவி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர். இதனை சார்லஸ் லிண்ட்பெர்க் நியுயார்க் நகரில் இருந்து பாரிஸ் வரை இடையில் எங்கும் நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார்.
அமெரிக்காவில் இந்த விமானத்தை ஒவ்வொரு நிறுத்தத்தில் 10 நாட்கள் நிறுத்தி வைத்து இதன் தொழில் நுட்பத்தை விவரிக்கின்றனர். மேலும் விமானத்தின் புராப்பெல்லர்களிலுள்ள 12,000 சோலார் செல்கள் மூலமாக சூரியசக்தி சேகரிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment