தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் – பல்வகைப்பட்ட நூல்களை.
பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதானகோசம், பல் வகைப் புராண நூல்கள் – வால்மீகி இராமாயணம், இதர இராமாயணங்கள் – பாகவதம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் – இலக்கியங்கள் முதற்கொண்டு பலவற்றைப் படிப்பதோடு – அடிக்கோடிட்டு, அதனைப்பற்றிய ஆய்வினையும், கட்டு ரைகளாகவும், சீரிய விமர்சனங்களாக வும்கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைகளைக் கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிட முடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்!