Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 30, 2012

சுய தொழில்கள்-16.1தேனீ வளர்ப்பு-பாகம்-1




உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது


தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல், மகசூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். தென்னந்தோப்புகளில், ஆறு அடிக்கு ஒரு பெட்டி வீதம் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். ஒரு தேனீ பெட்டியில் ஒரு ராணி தேனீ, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும்.தேனீக்கள், இந்திய தேனீ, மலைத்தேனீ, கொம்பு தேனீ, அடுக்கு தேனீ மற்றும் கொசு தேனீ என பல்வேறு வகைகளாக வளர்க்கப்படுகின்றன. ஒரு பெட்டியில், 750 மி.லி., முதல் ஆயிரத்து 250 மி.லி., வரை தேன் சேகரிக்கப்படுகிறது.தேனீ பெட்டிகள் தோட்டக்கலைத்துறையின் மூலமாக அரசு மானியத்துடன் கிடைக்கும். அனைத்து தரப்பு விவசாயிகளும், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். இதன்மூலம் நல்ல லாபம் பெறலாம்.
வேப்ப மரப்பூவிலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் உடையது. வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. ஒவ்வொரு பூக்களிடமிருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது. நச்சுக் கலக்காத இயற்க்கையாக கிடைக்கும் பொருட்களில் தேனும் ஒன்று. எனவே தேனீ வளர்ப்புக் கலையை நாம் கற்றுக்கொண்டால் மறைமுகமாக இயற்க்கை அன்னையை பாதுகாத்துக்கொள்கிறோம். எனவே துணிந்து தேனி வளர்ப்பு தொழிலைக் கற்றுக்கொண்டு உங்கள் பணத்தை அதில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது.
உற்பத்தி முறை
தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோ, பெட்டிகளில்வளர்க்கலாம்.
தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள்

கூடு : இது, ஒரு நீளமான சாதாரண பெட்டியாகும். இதன் மேல் வாட்டில்,பல அடுக்குகளை கொண்டுள்ளது. தோராயமாக 100 செ.மீ நீளம், 45 செ.மீஅகலம் மற்றும் 25 செ.மீ உயரத்தை உடையது. இந்த பெட்டியின் மொத்தம்2 செ.மீ ஆகும். தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடையஓட்டைகளை கொண்டுள்ளது. மேல் அடுக்குகள் அடர்ந்த தேன் கூட்டைஅமைப்பதற்கு தேவையான மொத்தத்தை பெற்று இருக்க வேண்டும். சுமார்1.5 செ.மீ மொத்தம் இதற்கு போதுமானது. தேனீக்கள் தேன் கூட்டை கட்டஏதுவாக, அடுக்குகளுக்கிடையேயான இடைவேளி 3.3 செ.மீ இருத்தல்நல்லது.

புகைப்பான் : இது தேனீ வளர்ப்பில், இரண்டாவது முக்கிய உபகரணம்ஆகும். இதை, சிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம். இதனைதேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல்இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.

துணி : நாம் வேலை செய்யும் பொழுது, நம் கண்கள் மற்றும் மூக்குகளைபாதுகாக்க உதவும்.

கத்தி : மேல் அடுக்குகளை தனிப்படுத்துவதற்கும் தேன் கூடுகளைபிரிக்கவும் பயன்படுத்தலாம்.

இறக்கை : தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறபடுத்துவதற்கு

இராணி தேனீ பிரிப்பான்
தீப்பெட்டி

தேன்கூடுகளை நிறுவும் முறை
· தேன் வளர்க்கும் இடமானது, நல்ல வடிகால் வசதியையுடைய திறந்தஇடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும், மேலும்நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும்இருக்க வேண்டும்.
· சூரிய ஒளியிலிந்து பாதுகாப்பு மிக அவசியமானதாகும். ஏனெனில்அப்பொழுதுதான், மிதமான வெப்பத்தை கொடுக்க இயலும்.
· தேன் கூட்டிற்குள் எறும்பு ஏறுவதை தடுக்க தேன் கூட்டின் கால்கள்தண்ணீருள்ள சிறு பாத்திரத்தில் நனையுமாறு இருத்தல் வேண்டும்.
· வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின்காலனிகளை, கிழக்கு திசை நோக்கி அமையுமாறு தேன் கூட்டை அமைக்கவேண்டும்.
· தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள், ஏனைய விலங்குகள் ,பரபரப்பான வீதிகள் மற்றும் தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில்அமைக்க வேண்டும்.

தேனீ காலனிகளை அமைக்கும் முறை
· தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களைமாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்யவேண்டும்.
· இதற்கு முன்பு, பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோஅல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானதுதேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும்.முடிந்தால், இராணீ தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால், இது ஏனையதேனீக்களை கவர்ந்து இழுக்கும்.
· சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்துதேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், வேகமாககூட்டினை கட்ட இயலும்.

காலனி நிர்வாகம்
· தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில், வாரம் ஓரு முறை அதிகாலைவேளையில், பெட்டிகளை கண்காணிப்பது அவசியம்.
· பெட்டியினை, கூரை, உற்பத்தி அறை, தளம் என்ற முறையில் சுத்தம்செய்ய வேண்டும்.
· வலிமையான ராணீ தேனீ, உற்பத்தி மேம்பாடு, தேன் மற்றும் மகரந்தசேகரிப்பு, ராணீ தேனீயின் அறை, தேனீக்களின் வலிமை, மற்றும் ஆண்தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க தேனீக்களின்காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம்.
· கீழே உள்ள, தேனீயின் எதிரிகளின் தாக்குதல் இருக்கிறதா, என்று சோதிக்கவேண்டும்.
மெழுகு மாத் : பெட்டியிலுள்ள புழு, பட்டு வலைகளை நீக்க வேண்டும்.
மெழுகு வண்டு : வளர்ந்த வண்டுகளை சாகடிக்க வேண்டும்.

மைட் : புதிதாக தயாரித்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில்நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை கொண்டு, பிரேம் மற்றும் தரைகளைசுத்தம் செய்ய வேண்டும்.


தேன்குறைவாக கிடைக்கும் காலத்தில் நிர்வாகம்.
· தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டை அகற்றி, இளம்வளமான தேனீக்களை உற்பத்தி அறையில் கூட்டாக வைக்கவும்
· தேவைப்பட்டால் தடுப்பு போர்டுகளை பயன்படுத்தவும்
· ராணி தேனீ மற்றும் ஆண் தேனீ செல்கள் தென்பட்டால் அழிக்கவும்
· ஒரு காலனிக்கு, 200 கிராம் என்ற விதத்தில் சர்க்கரை கரைசல் (1:1) இந்தியதேனீக்களுக்கு வாரம் ஒரு முறை அளிக்கவும்
· எல்லா காலனிகளுக்கும், ஒரே சமயத்தில் அளிப்பதன் மூலம் திருட்டைதவிர்க்கலாம்.

தேன் நிறைய கிடைக்கும் காலங்களில் நிர்வாகம்
· இக்காலத்திற்கு முன்னரே, காலனிகளை தகுந்த வலிமையுடன் வைத்துஇருக்க வேண்டும்
· தேன் கூடு அமைக்கத் தேவைப்படும் முதல் அடிப்படை தகடு மற்றும்இளம் தேனீக்கள் இருக்கும் அறைகளிடையே தகுந்த இடைவெளி அளிக்கவேண்டும்
· இளம் தேனீக்கள் இருக்கும் அறையிலேயே ராணி தேனீ இருக்குமாறு,தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு மற்றும் இளம்தேனீக்கள் இருக்கும் அறைக்கிடையே இராணி தேனீ பிரிப்பான் தாளைஇடவும்
· காலனி வாரம் ஒரு முறை சோதித்து, தேன் அதிகமுள்ள பிரேம்களை தேன்கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டின் பக்கவாட்டிற்கு, எடுத்துசெல்ல வேண்டும். எந்த ஒரு பிரேமில், 3\4 பாகம் தேன், 1\4 பாகம் மூடப்பட்டஅறைகள், இருக்கிறதோ அதனை உற்பத்தி அறையிலிருந்து வெளியேஎடுத்துவிட்டு அந்த இடங்களில் காலியான பிரேம்களை இட வேண்டும்
எந்த ஒரு கூடுகள் முழுவதுமாக மூடப்பட்டு அல்லது 2\3 மூடப்பட்டுஇருக்கிறதோ, அவைகளை தேன் எடுப்பதற்கு எடுத்து கொள்ளலாம்


தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் இணைய தளம் தரும் விபரங்களை கீழே காண்க!


தேனீ வளர்ப்பு
  • தேனீ வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் என்றால், முதலாவதாகத் தேனீக்களைப் பற்றிய அறிவு மிகவும் அவசியம்
  • தேனீக்களுக்கும் மற்ற வளர்ப்புப் பிராணிகளுக்கும், ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது
  • தேனீ வளர்க்க விரும்புவர்கள் தேனீக்களின் தன்மைகள், அவை வளரும் விதம், அவற்றின் வாழ்க்கை முறை, அவைகளைக் கையாளும் விதம், அவைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் சூழ்நிலைகள் மற்றும் அவைகளைத் தாக்கும் எதிரிகள், நோய்கள் ஆகியன பற்றி அவசியம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் தேனீக்களின் தேவையை அறிந்து உரிய நேரத்தில் தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள இயலும்
  • தேனீக்களைப் பயமின்றியும், தன்னம்பிக்கையுடனும் பொறுமையாகவும், நிதானத்துடன், கையாளும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டால், நாளடைவில் தேனீக்கள் கொட்டிவிடும் என்ற மன அச்சம் அகன்று விடும்
  • தேனீப் பெட்டிகளை முறைப்படி அச்சமின்றி, படபடப்பு இல்லாமல் ஆய்வு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கூட்டினுள் என்ன நடக்கின்றது என்பதைக் கண்டு அறிய முடியும்
  • தேனீக்களைப் பற்றி புத்தகங்கள் மற்றும் சமிஞ்கைகள் மூலம் படித்தும், இணைய தளங்களைப் பார்த்தும், பிறரிடமிருந்து கேட்டும் அறிந்து கொள்வதைவிட, நாமே வளர்த்துப் பார்த்துப் பெறும் அறிவு மிகச் சிறந்தது. இந்த அனுபவ அறிவே ஒருவரைத் தேனீ வளர்ப்புக் கலையில் சிறந்த வல்லுனராக்கும்
  • தேனீ வளர்க்க விரும்புவோருக்குக் கூரிய கண் பார்வை மிகவும் அவசியம். அப்பொழுதுதான் அடை அறைகளில் இருக்கும் முட்டைகள், வளரும் புழுக்கள், ராணித் தேனீ மற்றும் செவ்வுண்ணி போன்ற உருவில் சிறிய தேனீக்களின் எதிரிகளையும் காண இயலும். குறைபாடுள்ள கண்களை உடையவர்கள் அவசியம் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்
  • தேனீ வளர்ப்பு நுட்பங்களை அனுபவம் மிக்க தேனீ வளர்ப்போரிடமிருந்தோ அல்லது தேனீ வளர்ப்பு பயிற்சிகளில் கலந்து கொண்டோ நன்கு அறிந்து கொள்ள இயலும்.
இந்தியத் தேனீ - ஓர் அறிமுகம்
தமிழகத்தில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் அடுக்குத் தேனீ இனம் இந்தியத் தேனீ இனமாகும். இவை மலைகளிலும் சமவெளிகளிலும் வாழவல்லவை. மழைவாழ் ரகத் தேனீக்களின் குணாதிசயங்கள் சமவெளி ரகத்திலிருந்து சற்று வேறுபடுகின்றன.
Types of Honey
மழைவாழ் ரகம்
  • உருவில் சற்று பெரியவை
  • உடல் நிறம் சற்று கூடுதலான கருமையுடன் இருக்கும்
  • பொதுவாக இவை அடைகளை நுழைவு வழிக்கு இணையாகவும் சில நேரங்களில் குறுக்காவும் கட்டும்
  • கொட்டும் தன்மை சற்று கூடுதலாக இருக்கும்
  • கடுங்குளிரிலும் செயலாற்ற வல்லவை
  • தேன் சேகரிக்கும் ஆற்றல் சற்று கூடுதலாக இருக்கும்
Rock bee and its hives Rock bee and
 its hive Rock Bee and its hive
இந்தியத் தேனீயின் சிறப்பியல்புகள்
  • நாட்டுத் தேனீ இனம் என்பதனால் பலவிதச் சூழலிலும் வெற்றிகரமாக இயற்கையோடு இயைந்து வாழவல்லவை
  • இருட்டில் வாழ்பவை
  • பல அடைகளை அடுக்கடுக்காகவும் ஒன்றுக்கு ஒன்று இணையாகவும் கட்டுகின்றன
  • பொதுவாக சாந்த குணம் படைத்தவை
  • சினமுற்ற தேனீக்களைப் புகை கொண்டு எளிதாகக் கட்டுப்படுத்த இயலும்
  • Little bee and its hives Little bee and its hive Little Bee and its hive
  • கொட்டிய தேனீயில் கொடுக்கு முறிவு சில நேரங்களில் மட்டுமே ஏற்படும்
  • கொட்டினால் ஏற்படும் வலி சற்று குறைவாக இருக்கும்
  • கொடுக்கில் உள்ள முட்களின் எண்ணிக்கை குறைவாகவும் முட்கள் சிறுத்தும் இருப்பதால் கொடுக்கு ஏற்படாமல் தப்பித்து விடுகின்றன
  • கொட்டிய பின்னர் நேரடியாகப் பறக்காமல் சுற்றி வந்து உள் இறங்கிய கொடுக்கை விட்டு விடாமல் லாவகமாக விடுவித்துக் கொள்கின்றன
  • சட்டங்களை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்கள் சில நேரங்களில் அடையின் மேல் அங்குமிங்கும் ஓடும்
  • விசிறும் தேனீக்கள் இறக்கைகளைக் கொண்டு விசிறும் பொழுது வயிறு நுழைவு வழியைப் பார்த்த நிலையில் நின்று செயல்படுகின்றன
  • தேனீக் கூட்டத்தின் வளர்ச்சி சிறிய பெட்டிகளில் விரைவாக நடைபெறுகின்றது. புழு அறை பெரிதாக இருக்கும் தேன் அறைகளில் பணித் துவக்கம் தாமதமாகும்
  • கூட்டிற்குள் மகரந்த வரத்து வெகுவாகக் குறையும் பொழுது புழு வளர்ப்புப் பணி தடைப்பட்டுக் கூட்டம் ஓடி விடும்
  • Indian bee and its hive Indian bee
 and its hive
  • இவை பாதகமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வாழ அடிக்கடி கூட்டை விட்டு ஓடி விடுகின்றன
  • இன விருத்திக்காக இவை அடிக்கடி குடி பெயர்ந்து செல்கின்றன. ஒரு கூட்டில் ஆண்டுக்கு 5 முதல் 6 முறை கூட்டம் பிரிதல் நடைபெறுகின்றது. இதனால் கூட்டத்தின் வலு பெரிதும் குறைகின்றது
  • ராணியற்ற கூட்டத்தில் பணித் தேனீக்களின் உடல் நிறம் சற்று கருமையாக மாறுகின்றது
  • ராணி இழப்பு நேரிட்ட கூட்டத்தில் ஒரு வாரத்தில் பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்குகின்றன
  • மதுர வரத்து காலங்களில் பழைய கறுத்த அடைகளைக் கடித்து புதுப்பிக்கின்றன
  • இவ்வாறு அடையைப் புதுப்பிக்கும் பொழுது அப்பலகையில் விழும் அடைத் துகள்கள் நீக்கப்படாது இருப்பதால் மெழுகுப் பூச்சியின் தாக்குதல் கூடுதலாகக் காணப்படும்
  • கூட்டைத் தூய்மையாக ………………………………
  • ………………………..இரை பிடிக்க நுழையும் குளவியைக் கூடித் தாக்கிக் கொன்று விடுகின்றன
  • ‘வரோவா’ உண்ணிகளைத் தாக்கியும் நீக்கியும் தங்களைக் காத்துக் கொள்ள வல்லவை
  • பச்சைக் குருவி, கருங்குருவி போன்ற பறவைகளின் பிடியில் எளிதில் சிக்காமல் லாவகமாக, வளைந்து, விழுந்து, எழுந்து, பறந்து தப்பிக்கின்றன
  • கூட்டை நெருங்கும் எதிரிகளைக் கூட்டமாகச் சேர்ந்து ஒரு சீறும் ஒலி எழுப்பி விரட்டுகின்றன
  • புழுக்கள் வைரஸ் நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன
  • உணவுச் செடிகள் குறைவாகவும், பரவலாகவும் உள்ள இடங்களிலும் இவை வாழவல்லவை
  • உணவு வரத்து குறையும் பொழுது அதற்குத் தக்கபடி தேனீக்களின் உற்பத்தியைக் குறைக்கின்றன. மேலும் அத்தகைய தருணத்தில் இடப்படும் எல்லா முட்டைகளும் தேனீக்களாக வளர்க்கப்படுவதில்லை. புரதத் தட்டுப்பாடு தோன்றும் பொழுது முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களைத் தேனீக்களே உண்டு விடுகின்றன
  • குறைவான வெளிச்சம் இருக்கும் பொழுது வழி அறிந்து புலரும் பொழுதே வெளியில் சென்று உணவு திரட்டி வருகின்றன
  • European bee
  • விடியலுக்கு முன் துவங்கும் உணவு திரட்டும் பணி அந்தி சாயும் நேரம் வரையிலும் தொடர்கின்றது
  • பணித் தேனீக்கள் பிசின் சேகரிப்பது இல்லை
  • பயிரில் கூடுதலாக மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன
  • பணித் தேனீக்கள் மலரின்பால் கூடுதல் விசுவாசம் காட்டுகின்றன
  • வயல்வெளித் தேனீக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று உணவு திரட்டி வருகின்றன
  • வயல் வெளித் தேனீக்கள் ஒரு மணிக்கு 25 கிலோ மீட்டர் தூரம் பறக்க வல்லவை
Dammer Hive Dammer Bee and hive
தேனீ இனங்கள்

ஒவ்வொரு தேனீக் குடும்பத்திலும் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள் மற்றும் ஆயரக்கணக்கான பணித் தேனீக்கள் வாழ்கின்றன.
Bee
ராணித் தேனீ:
  • ராணித் தேனீ ஒரு பூரண வளர்ச்சியுற்ற பெண் தேனீ. இதனால் மட்டுமே ஆண் தேனீக்களுடன் புணர்ந்து இனவிருத்தி செய்ய இயலும். இத்தேனீ பணித் தேனீயை விட உருவில் பெரியது
  • மகரந்தம் சேகரிக்கும் அமைப்புகள் கால்களில் இல்லாததால் ராணித் தேனீயால் உணவு சேகரிக்க இயலாது. அதே போல் மெழுகுச் சுரப்பிகள் இல்லாததால் ராணித் தேனீயால் கூடு கட்டவும் இயலாது
  • நீண்டும் கூம்பியும் உள்ள வயிற்றின் நுனியினுள் இருக்கும் கொடுக்கை முட்டையிடவும், பிற ராணித் தேனீக்களையும் அவற்றின் வளர்ச்சிப் பருவங்களையும் கொட்டிக் கொல்லவும் பயன்படுத்துகின்றது
  • நன்கு வளர்ச்சி அடைந்த இரு சினைப் பைகள் முட்டைகளை உருவாக்கவும் விந்துப்பை புணர்ச்சியின் பொழுது ஆண் தேனீக்களிடமிருந்து பெறும் விந்தைச் சேமிக்கவும் உதவுகின்றன
  • தாடைச் சுரப்பிகள் இருவித அமிலங்களால் ஆன ராணிப் பொருள் எனப்படும். ஒரு விதக் கவர்ச்சிப் பொருளைச் சுரக்கின்றன. வாய் வழி உணவுப் பரிமாற்றம் மூலம் இப்பொருளை எல்லாப் பணித் தேனீக்களும் பெறுகின்றன
  • கூட்டினுள் பணித் தேனீக்களை ராணித் தேனீயின்பால் ஈர்த்து அதனைச் சுற்றி ஒரு பரிவாரம் அமைய இச்சுரப்பானது உதவுகின்றது. மேலும் இப்பொருள் புதிய ராணித் தேனீ உருவாவதையும் பணித் தேனீக்களின் சினைப் பைகளின் வளர்ச்சியையும் தடை செய்கின்றது. ராணிப் பொருள் பணித் தேனீக்கள் அடை கட்டுதல், புழு வளர்த்தல், உணவு சேகரித்தல் போன்ற பணிகளைச் செவ்வனே செய்ய ஊக்குவிக்கின்றது
  • புணர்ந்த நான்கு நாட்களுக்குப் பின் ராணித் தேனீ முட்டையிடத் தொடங்கும். ஆண் தேனீக்களை உருவாக்கக் கருவுற்ற முட்டைகளையும் இடும்
  • ராணித் தேனீயின் வாழ்க்கைக் காலம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்
பணிகள்:
  • ராணித் தேனீயானது தேனீக் கூட்டத்தின் அன்னையாகும்
  • ஒரு முட்டையிடும் இயந்திரம் போல அயராது முட்டைகள் இட்டு ராணித் தேனீக்களையும் பணித் தேனீக்களையும், ஆண் தேனீக்களையும் ஈன்று தருகின்றது
  • ராணித் தேனீயால் முட்டையிலிருந்து வரும் புழுக்களுக்கு உணவு தரவோ, அவற்றைப் பேணி வளர்க்கவோ இயலாது
  • ராணித் தேனீ புதிதாகக் கட்டப்பட்ட அடை அறைகளில் விரும்பி முட்டையிடும். கருத்த அடை அறைகளில் ராணித் தேனீ முட்டையிடுவதில்லை
  • துப்பரவு செய்யப்பட்ட புழு வளர்ப்பு அறைகளின் அடியில் ராணித் தேனீ தனித்து முட்டைகளை இடுகின்றது
  • நன்கு பணியாற்றும் ஒரு ராணித் தேனீ அனைத்து அடை அறைகளிலும் இடைவெளி இல்லாமல் சீராக நாளொன்றுக்கு சராசரியாக 500 முதல் 2000 முட்டைகள் வரை இடும்
  • முட்டையிடப் போதிய அறை வசதியில்லாத பொழுது சில நேரங்களில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை ஓர் அறையில் இடும்
  • உடல் ஊனமுற்ற ராணித் தேனீயால் சரிவர முட்டையிட இயலாது
  • புணர்ச்சியில் தோல்வியுற்ற மற்றும் வயது முதிர்ந்த ராணித் தேனீக்கள் கருவுறாத முட்டைகளை மட்டுமே இடும். அத்தகைய முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள் மட்டுமே உருவாக இயலும்
ராணித் தேனீ - வாழ்க்கைக் குறிப்புகள்
வளர்ச்சிப் பருவங்கள் (நாட்களில்)
முட்டை 3
புழு 5
கூட்டுப்புழு 7-8
வளர்ச்சிக் காலம் 15-16
வாழ்நாள் (ஆண்டுகளில்)
ஆயுட் காலம் 2-3
சிறப்பான பணிக் காலம் 1.5
பணித் தேனீ:
பணித் தேனீ பூரண வளர்ச்சியடையாத பெண் தேனீ ஆகும்
  • பணித் தேனீக்கள் ராணித் தேனீயை விட அளவில் சிறியவை
  • உடல் முழுவதும் கிளையுடன் கூடிய ரோமங்கள் இருக்கும்
  • வயிற்று நுனியின் மேற்பகுதியில் ஒரு வாசனை சுரப்பி உள்ளது. இச்சுரப்பி ஒவ்வொரு கூட்டிற்குமான தனித் தன்மை பொருந்திய வாசனையைத் தருகின்றது. இந்த வாசனையைக் கொண்டு பணித் தேனீக்கள் தங்களின் கூடுகளை அறிந்து கொள்கின்றன
  • கொடுக்கு வயிற்றின் நுனிப் பகுதியினுள் உள்ளது. தேனீ கொட்டும் பொழுது வெளிப்படும் விஷம் அமிலச் சுரப்பியில் சுரக்கின்றது. விஷத்துடன் வெளிப்படுத்தப்படும் ‘ஐசோபென்டைல் அஸ்டேட்’ என்ற எச்சரிக்கை வேதிப்பொருள் பிற தேனீக்களைக் கொட்டிய இடத்திற்கு ஈர்த்து கொட்டத் தூண்டுகின்றது. கொட்டிய தேனீ செலுத்தப்பட்ட கொடுக்கை எடுக்க இயலாமல் இறுதியில் அதிக நீர் இழப்பு காரணமாக இறக்கின்றது
பணிகள்:
முதல் மூன்று வாரங்கள் கூட்டினுள் இருந்து கொண்டு உட்புறப் பணிகளையும் அதன் பின்னர், வாழ்நாள் முடியும் வரை வயல் வெளித் தேனீயாகி வெளிப்புறப் பணிகளையும் சுறுசுறுப்புடன் செய்கின்றது. இத்தேனீக்களின் பணி அவற்றின் வயதிற்கேற்ப மாறுபடுகின்றது.
பணித் தேனீ ஆற்றும் பணிகள்
வயது (நாட்கள்) பணிகள்
1-3 அடை அறைகளைத் தூய்மை செய்தல், கூட்டின் வெப்ப நிலையைப் பராமரித்தல்
4-6 வளர்ந்த புழுக்களுக்கு மகரந்த உணவு ஊட்டுதல்
6-12 இளம் புழுக்களுக்கும், ராணித் தேனீக்கும் தேனீப்பால் கொடுத்தல்
13-18 தேனைப் பக்குவப்படுத்துதல், மகரந்தத் தூளை அடை அறைகளில் சேமித்தல், மெழுகு சுரத்தல், அடை கட்டுதல், அடை அறைகளுக்கு மூடி இடுதல்
18-21 கூட்டினுள் காற்றோட்டம் ஏற்படுத்துதல், கூட்டைக் காவல் காத்தல்
22-42 வெளிப்புறப் பணிகள்: மதுரம், மகரந்தம், தண்ணீர் ஆகியவற்றைக் கூட்டிற்குக் கொண்டு வருதல்
ஆண் தேனீ
ஆண் தேனீ பணித் தேனீயை விட அளவில் பெரியது. ஆனால் ராணித் தேனீயை விட அளவில் சிறியது.
புற உறுப்புகள்:
  • இரு பெரிய கூட்டுக் கண்கள் தலையின் மேல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்கும். இவை எப்புறத்திலிருந்தும் எதிர்ப்படும் பொருட்களைக் காண வல்லது
  • தலையில் உள்ள இரு உணர் கொம்புகள் சற்று நீளமாகவும், பல்லாயிரக்கணக்கான நுண்ணிய நுகரும் உறுப்புகளுடனும் இருக்கும்
  • கூரிய பார்வையும், நுகரும் ஆற்றலும் புணர்ச்சிப் பறப்பின் பொழுது ராணித் தேனீயைக் கண்டறிய உதவுகின்றன
  • ஆண் தேனீக்களுக்கு அதிக உணவு தேவைப்படுகின்றது. ஆண் தேனீக்கள் பணித் தேனீக்களினால் உணவு ஊட்டப்படுவதையே விரும்புகின்றன
வளரும் விதம்:
  • கருவுறாத முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள் உருவாகின்றன
  • புணர்ச்சியுறாத மற்றும் வயது முதிர்ந்த ராணித் தேனீக்கள் இடும் எல்லா முட்டைகளும் கருவுறாது இருப்பதால், அவைகள் அனைத்திலிருந்தும் ஆண் தேனீக்கள் தோன்றுகின்றன
  • சில நேரங்களில், ராணித் தேனீக்கள் இல்லாத கூட்டங்களில் சில பணித் தேனீக்கள் ராணித் தேனீயைப் போல முட்டையிடும். இவற்றிலிருந்தும் உருவில் சிறிய ஆண் தேனீக்கள் உருவாகும்
  • முட்டையிலிருந்து புழுக்கள் மூன்று நாட்களில் வெளிப்படுகின்றன. இவை ஒரு வார காலத்தில் கூட்டுப் புழுவாக மாறுகின்றன. இப்புழுக்களுக்கு முதல் மூன்று நாள் தேனீப் பாலும் கடைசி நான்கு நாட்கள் தேனீ ரொட்டியும் உணவாக வழங்கப்படுகின்றது. புழுக்கள் முழு வளர்ச்சி அடைந்த பின்னர் வளர்ப்பு அறை குவிந்த மெழுகு மூடியால் மூடப்படும். கூட்டுப் புழுக்களின் வளர்ச்சி வேகம் குறைவு. இவை முழு வளர்ச்சி பெற்ற ஆண் தேனீக்களாக மாற இரு வாரங்களாகும்
  • ஆண் தேனீக்கள் வெளிவந்த 12 நாட்களுக்குப் பிறகு இவை ராணித் தேனீயுடன் புணர்ச்சிக்குத் தயாராகின்றன
fe_api_castesofhoneybee_clip_image004 Bee Bee
தேனீ வளர்ப்பு சாதனங்கள்.
  • தேனீபு் பொட்டிகள்
தேனீ வளர்ப்பிற்கு வேண்டிய மிக முக்கியமான சாதனம் தேனீப் பெட்டிகளாகும். அடுக்குத் தேனீக்களை மட்டுமே செயற்கை முறையில் மரச் சட்டங்களுள்ள பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். ஒவ்வொரு மரச்சட்டத்திலும், ஒரு மேல் கட்டை, ஒரு அடிக் கட்டையுடன் இரண்டு பக்கக் கட்டைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டியினுள் தரப்படும் இந்த மரச்சட்டங்களில் தேனீக்கள் அடுக்கடுக்காக அடைகளைக் கட்டுகின்றன. ஒவ்வொரு ஆடையும் மரச் சட்டத்துடன் தனித்து வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. மரச் சட்டங்களுக்கு இடையேயும் சுற்றிலும் போதிய இடைவெளி தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் தேனீக்கள் அடையில் அமர்ந்து வசதியாகத் தங்கள் பணிகளைச் செய்ய முடியும். இந்த இடைவெளி தேனீ இடைவெளி எனப்படும். இந்தச் சந்து மிகச் சிறிதாக இருப்பதால் தேனீக்கள் இதில் அடை கட்டுவதில்லை. பெரிதாக இருப்பதால் தேன் பிசின் கொண்டு மூடுவதுமில்லை.
Newton’s bee hive Bis hive Marthandam hive
தேனீப் பெட்டிகளை வடிவமைக்கும் பொழுது, சரியான தேனீ இடைவெளி கிடைக்கும் வண்ணம் பெட்டியும் மரச் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். பெட்டிகள் மற்றும் சட்டங்களின் அளவுகள் ஒரு நூல் அளவு கூடக் கூடவும் விடாது, குறையவும் விடாது. தேனீ இடைவெளி கூடுதலாக இருக்கும் பொழுது தேனீக்கள் அடைகளை ஒழுங்காகக் கட்டாது. தேவையற்ற உதிரி அடைகளையும் இணைப்பு அடைகளையும் கட்டும். மேலும் சட்டங்களைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும். அதனால் பெட்டியை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்களை கொட்ட நேரிடும். இத்தகைய அடைகளில் சேமிக்கப்பட்ட தேன் மெழுகும் வீணாகின்றது.
FLOOR BOARD BROOD CHAMBER WOODEN FRAMES
SUPER CHAMBER SUPER CHAMBER WITH WOODEN FRAMES top COVER
தேனீக்களின் இனத்திற்கு ஏற்பவும் தேனீக்கு உணவு கிடைக்கும் அளவைப் பொறுத்தும் தேனீப் பெட்டிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். பொதுவாக உருவில் சிறிய ……………………………………………சட்டங்கள் கொண்ட பி.ஐ.எ.ஸ் பெட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் நியூட்டன் பெட்டியை விடச் சிறிய பெட்டிகளில் இந்தியத் தேனீக்கள் சிறப்பாக வளர்க்கப்படுகின்றன. இப்பெட்டிகள் மார்த்தாண்டம் பெட்டிகள் எனப்படும். அளவில் சிறியதாக இருப்பதால் இப்பெட்டிகளைத் தேன் சேகரிப்பிற்காகப் பல இடங்களுக்கும் நெடுந்தொலைவு எளிதாக எடுத்துச் செய்ய இயலும். இப்பெட்டியில் புழு அறையில் ஆறு சட்டங்கள் இருக்கும். குறைவான மதுர வரத்துள்ள இடங்களுக்கும் ஏற்றது. இப்பெட்டி எளிய வடிவமைப்பும் குறைவான விலையும் உள்ளதால் தேனீ வளர்ப்பிற்கு அதிக அளவு தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றது.
தேனீப் பெட்டிகள் நன்கு விளைந்த மரப்பலகைகள் கொண்டு செய்யப்பட வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில் தான் தேனீக்களால் சீரான வெப்ப நிலையைப் பராமரிக்க இயலும். பச்சை மரப் பலகைகள் கொண்டு தேனீப் பெட்டிகள் செய்தால் நாளடைவில் பெட்டியின் பாகங்கள் வளையும். அதனால் பெட்டியில் தேனீக்களும் அவற்றின் எதிரிகளும் புகுந்து செல்லப் பல நுழைவு வழிகள் உண்டாக்கும். மேலும் மழைத் தண்ணீர் பெட்டிக்குள் புக நேரிடும். தேனீக்களால் தங்களைத் தங்கள் எதிரிகளிடமிருந்து சரிவரத் தற்காத்துக் கொள்ள இயலாது. பெட்டிகளில் வெடிப்புகள் பிறவுகள் இல்லாமல் இருத்தல் அவசியம். மரம் அல்லது இரும்பாலான தாங்கிகளைப் பயன்படுத்தலாம். தாங்கிகளின் கால்கள் எறும்புகள் ஏறாமல் தடுப்பதற்காக நீருள்ள கிண்ணத்துள் இருக்க வேண்டும்.
Floor board Brood chamber Wooden frames Top cover
தேனீபு் பெட்டியின் பாகங்கள்
அடிப் பலகை
அடிப் பலகை ஒரே பலகையால் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுப் பலகைகளை இணைத்து உருவாக்கும் பொழுது இடைவெளி சிறிதும் இல்லாமல் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும். பி.ஐ.எஸ் பெட்டியில் இப்பலகையின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு நுழைவு………………………………………………….. வழியை வலுவான கூட்டங்களுக்கும் சிறிய நுழைவு வழியை வலுக்குன்றிய கூட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும். அடிப்பலகை தேனீப் பெட்டியை விட்டுச் சற்று முன்பக்கம் நீட்டி வைக்கப்பட்டுள்ளது. நீண்டுள்ள இப்பகுதியைப் பறந்து வரும் தேனீக்கள் இறங்கும் தளமாகப் பயன்படுத்துகின்றன.
புழு அறை
புழு அறையை அடிப் பலகையின் மேல் வைக்க வேண்டும். இந்த அறையின் அகல வாட்டத்தில் இருப்புறத்திலும் உள்ள இரண்டு காடிகள், சட்டங்களைத் தொங்க விட ஏற்றதாயுள்ளது. இச்சட்டங்களில் கட்டப்படும் அடைகளில் புழு வளர்ப்பு நடைபெறுகின்றது. சட்டங்கள் உட்சுவரையும் அடிப் பலகையையும் உரசாத வண்ணம் தேனீ இடைவெளி கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் பெட்டியின் முன் புறச் சுவரின் அடியில் தேனீக்கள் வந்து செல்வதற்கான ஒரு நுழைவு வழி அமைக்கப்பட்டுள்ளது.
Comb foundation sheet
தேன் அறை
தேன் அறையைப் புழு அறையின் மேல் வைக்க வேண்டும். இதனுள் தொங்க விடப்பட்டுள்ள சட்டங்களில் கட்டப்படும் அடைகளில் உபரியாகக் கிடைக்கும் தேன் சேமிக்கப்படுகின்றது. அந்தச் சட்டங்களும் புழு அறைச் சட்டங்கள் உட்சுவர் மற்றும் உள் மூடியை உரசாத வண்ணம் உரிய தேனீ இடைவெளி தரப்பட்டு இரண்டு காடிகளில் தொங்க விடப்பட்டுள்ளன.
உள் மூடி அல்லது சிகைப் பலகை
உள் மூடி தேன் அறையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே ஒரு பெரிய துறை கம்பி வலை கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கூட்டினுள் காற்றோட்டத்திற்கு உதவுகின்றது. கம்பி வலையை சிறிது நெம்பி ஒரு தேனீ செல்லும் அளவிற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இதனால் உள் மூடிக்கும் இடையே அகப்பட்ட தேனீக்கள் கூட்டினுள் செல்ல இயலும். உள் மூடி பெட்டியினுள் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் வெளி மூடியினுள் தேனீக்களை அடை கட்டுவதைத் தவிர்க்கவும் உதவுகின்றது.
மேல் மூடி அல்லது கூரை
கூரை தட்டையாகவோ அல்லது இருபுறமும் சரிந்தோ இருக்கும். நியூட்டன் தேனீப் பெட்டியில் கூரையும் உள் மூடியும் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும். தட்டையாக உள்ள மேல் மூடியின் மேல் தகரத் தகட்டைப் பொருத்துவதால் மரத்தாலான மூடி மழையினால் பாதிப்படையாது. மார்த்தாண்டம் பெட்டியில் மேல் மூடி மட்டுமே இருக்கும் உள் மூடி இருக்காது.
  • அடை அஸ்திவாரத் தாள்
  • அடை அஸ்திவாரத் தாள் தேன் மெழுகிலாலான அறுகோணப் பதிவுகளுடன் கூடிய மெழுகுத் தாள் ஆகும். அப்பதிவுகளின் மேல் தேனீக்கள் பணித் தேனீ வளர்ப்பு அறைச் சுவர்களை இருபுறமும் கட்டுகின்றன. இந்த அடை அஸ்திவாரத் தாளை சட்டங்களின் மேல் கட்டையின் உட் பகுதியில் பொருத்த வேண்டும். அடை அஸ்திவாரத் தாள் மீது அடை கட்டப்படும் பொழுது
    • அடைகள் செங்குத்தாகவும் சீராகவும் கட்டப்படும்
    • கட்டப்படும் அடை அறைகள் ஒரே வடிவில் சீராக இருக்கும்
    • அடை கட்டப்படும் பணி சுலபமாகவும் விரைவாகவும் நடைபெறும்
    • அடைகள் உறுதியானதாக இருப்பதால் அவற்றைத் தேன் எடுக்கும் கருவியில் வைத்து சுற்றும் பொழுது சேதமாவதில்லை
    • தேனீக்கள் தேன் வரத்து மிகும் காலங்களில் குறுகிய காலத்திற்குள் அடைகளைக் கட்டித் தேனைச் சேமிக்க இயலும்
    • குறைந்த மெழுகுச் செலவில் அடைகள் கட்டப்படும்
    • தேனீக்கள் அடை கட்டுவதற்காக தேன், காலம், சக்தி ஆகியவற்றை விரயம் செய்வது குறைக்கப்படும்
  • தடுப்புப் பலகை
  • தடுப்புப் பலகை மரத்தினாலான பலகை. இதனை அடைச்சட்டங்களுடன் புழு வளர்ப்பு அறையில் தொங்க விடலாம். வலுக் குன்றிய கூட்டங்களில் உள்ள காலி அடைகளை நீக்கிய பின்னர், இறுதி அடையை ஒட்டி இத்தடுப்புப் பலகையை வைக்க வேண்டும். இதனால் தேனீக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புழு அறையில் கொள்ளளவு குறைக்கப்படுகின்றது. அவ்வாறு இப்பலகையை ஒரு நகரும் சுவராகப் பயன்படுத்தலாம். மேலும் கூட்டின் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் தேனீக் கூட்டங்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கவும் இப்பலகை உதவுகிறது.
  • பணித் தேனீ நீக்கும் பலகை
  • பணித் தேனீ நீக்கும் பலகை மரத்தாலான ஒரு பலகை. அதன் நடுவே ஒரு வழிப்பாதை ஒன்று உள்ளது. இதனைப் புழு அறைக்கும் தேன் அறைக்கும் நடுவே வைக்க வேண்டும். இரவு வேளையில் தேன் அறையில் உள்ள பணித் தேனீக்கள் இப்பலகையில் உள்ள ஒரு வழிப்பாதை மூலம் புழு அறைக்கு வந்து விடும். அவ்வாறு வந்த பணித் தேனீக்கள் மீண்டும் தேன் அறைக்குள் செல்ல இயலாது. எனவே இப்பலகை தேன் அறையிலிருந்து பணித் தேனீக்களை விரட்டப் பயன்படுகின்றது.
  • ராணித் தேனீ நீக்கி
  • ராணித் தேனீ நீக்கி சீராகத் துளையிடப்பட்ட நாகத் தகட்டால் ஆனது. ராணித் தேனீ பணித் தேனீக்களை விட உருவில் பெரிதாக இருப்பதால் இந்நீக்கியில் உள்ள வழியே ராணித் தேனீயால் நுழைய இயலாது. இந்நீக்கியை புழு அறைக்கும் தேன் அறைக்கும் இடையில் வைக்க வேண்டும். இதனால் ராணித் தேனீ தேன் அறைக்குச் சென்று முட்டை வைப்பது தவிர்க்கப்படுகின்றது. ஆகவே தூய்மையான தேன் பெறவும் வழி பிறக்கின்றது.
  • வாயில் தகடு
  • வாயில் தகடு சீராகத் துறையிடப்பட்ட ஒரு நாகத் தகடு ஆகும். இத்தகட்டை நுழைவு வழி முன் வைக்க வேண்டும். இந்த தகட்டில் உள்ள துறை அளவு சிறியதாக இருப்பதால் ராணித் தேனீயால் கூட்டை விட்டு வெளியேற முடியாது. இத்தகடு புதிதாகப் பிடித்த தேனீக் கூட்டத்திலிருந்து ராணி தப்பிச் செல்வதைச் தடுக்கவும் கூட்டம் பிரிவதைத் தடுக்கவும் உதவுகின்றது.
  • ஆண் தேனீப் பொறி
  • ஆண் தேனீப் பொறி ஒரு மரத்தாலான காடியுடன் கூடிய கட்டை ஆகும். இப்பொறியை நுழைவு வழி முன் வைக்கும் பொழுது நுழைவுப் பாதையின் அளவு குறைக்கப்படுகின்றது. இதனால் பெட்டியை விட்டு வெளியே பறந்து சென்ற ஆண் தேனீக்கள் மீண்டும் உள்ளே வர இயலாது. ஆனால் பணித் தேனீக்கள் எளிதாக இப்பொறி வழியே சென்று வந்து தங்களின் பணிகளைச் செய்ய முடியும்.
  • முகவலை
  • முகவலை கருப்பு நிற நைலான் கொசு வலையினால் ஆனது. தொப்பியுடன் கூடிய இதனைத் தலையில் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணியும் பொழுது முகத்திற்கும் திரைக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும். இதனை அணிவதால் தேனீக்கள் முகத்தில் கொட்டுவதும் தவிர்க்கப்படுகின்றது.
  • கையுறை
  • கையுறை காடாத் துணி அல்லது மெல்லிய ரப்பர் அல்லது தோலினாலானது. புதிதாகத் தேனீ வளர்ப்பைத் துவக்கியவர்கள் தேனீக்களை முறையாக கையாள தெரிந்து கொள்ளும் வரை, கைகளில் தேனீக்கள் கொட்டி விடாமல் இருப்பதற்காக இதனை அணிந்து கொள்ளலாம்.
  • புகைக் குழல்
  • புகைக் குழல் மிகவும் அவசியமான ஒரு கருவி. புனல் வடிவிலான மூடியுடன் கூடிய ஒரு டப்பாவினுள் சாக்குத்தூள், காகிதச் சுருள், மரப்பட்டைத் துண்டுகள், தேங்காய் நார், காய்ந்த இலை போன்றவற்றை இட்டு எடுக்கும் புகை உண்டாகின்றது. இப்புகை டப்பாவின் அடியில் இணைக்கப்பட்டுள்ள துருத்தியை அழுத்தும்பொழுது மூடியில் உள்ள துவாரம் வழியே வெளிப்படுகின்றது. புகை தேனீக்களிடம் ஒரு வித பய உணர்வை ஏற்படுத்துகின்றது. புகையால் பயந்த தேனீக்கள் சிறிது தேனைக் குடித்தவுடன் அமைதியாகி விடுகின்றன. இதனால் தேனீக்களில் கொட்டும் தன்மை வெகுவாகக் குறைகின்றது.
    தேனீப் பெட்டிகளை ஆய்வு செய்து முடிக்கும் வரை புகைக் குழலில் புகை இருத்தல் வேண்டும். புகை வெண்மையாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். தேனீக் கூட்டங்களை ஆய்வு செய்யும் பொழுது புகையைத் தேவைப்படும் பொழுது மட்டும் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
    Smoker Smoker
  • மெழுகு மூடி சீவும் கத்தி
  • மெழுகு மூடி சீவும் கத்தி நீளமானது. இரு புறமும் கூர்மையானது. மரக் கைப்பிடி உடையாது. இக்கத்தி கொண்டு தேனடைகளின் மெழுகு மூடிகளைச் சீராகச் சீவலாம்.
  • தேனீ புருசு
  • தேனீக்களைத் தேன் அடைகளிலிருந்து அப்புறப்படுத்தவும் தேனீக் கூட்டங்களைப் பிரிக்கும் சமயத்தில் தேனீக்களை புழு அடைகளிலிருந்து நீக்கவும் தேனீ புருசு உதவுகின்றது. இதன் கைப்பிடி மரத்தால் ஆனது. இதன் குச்சங்கள் மிருதுவானவை.
  • தேன் எடுக்கும் கருவி
  • தேன் எடுக்கும் கருவி உருளை வடிவினாலான ஒரு பாத்திரமாகும். இப்பாத்திரம் பித்தளை, நாகத்தகடு அல்லது எவர்சில்வரால் ஆனது. இதனுள் ஒரு வலைப் பெட்டியுள்ளது. அவ்வலைப் பெட்டியினுள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட தேனடைச் சட்டங்களைச் செங்குத்தாகச் செருகி வைக்கலாம். மேலும் இவ்வலைப் பெட்டி இரண்டு பல்சக்கரங்கள் மூலம் ஒரு கைப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியைச் சுற்றும் பொழுது மைய விலக்கு விசை காரணமாக அடையிலிருந்து தேன் துளிகள் சிதறி விழுகின்றன. பிரித்து எடுக்கப்பட்ட தேன் இக்கருவியின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு சிறு குழாய் மூலம் வெளிவரும். இக்கருவியைப் பயன்படுத்துவதால்
    Honey extractor Honey extractor
  • தேன் அடைகள் சேதமாவது இல்லை
  • தேன் அடைகளை மீண்டும் பயன்படுத்தலாம்
  • தூய்மையான தேன் பெறலாம்
Accessories workshop Honey packing unit
இயற்கை தேனீக் கூட்டங்களைப் பிடித்தல்
சாதனங்கள்
வெற்றுத் தேனீப்பெட்டிகள், புகைக் குழல், ரப்பர் குழாய், வாழை நார், தேங்காய் நார், காலித் தீப்பெட்டி, அல்லது ராணித் தேனீக் கூண்டு, தண்ணீர், அரிவாள், உளி, சுத்தியல், கத்தி மற்றும் கயிறு.
தேனீக் கூட்டத்தைப் பிடிக்க குறைந்தது இருவராவது வேண்டும்.
கூடு கட்டும் இடங்கள்
இந்தியத் தேனீக்கள் பல இடங்களில் கூடு கட்டுகின்றன. குறிப்பாக இவை மரப் பொந்துகள், கிணறு மற்றும் பாழடைந்த கட்டிடச் சுவர்களில் உள்ள பொந்துகள், கல் கட்டுச் சுவர்கள், கற்குவியல்கள், பாறை இடுக்குகள், கற்றாழைப் புதர்கள், காலி மரப்பெட்டிகள், காலித் தெளிவுப் பானைகள், எலி வங்குகள், சிமெண்ட் குழாய்கள் மற்றும் கரையான் புற்றுகளில் அடுக்கடுக்காக அடைகள் கட்டுகின்றன.
how to acquire how to acquire
பிடிக்க ஏற்ற கூட்டம்
வலுவான கூட்டங்களை மட்டுமே பிடிக்க வேண்டும். இத்தகைய கூட்டங்களில் தேனீக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து போய்க் கொண்டு இருக்கும். கூட்டிற்குள் நுழையும் தேனீக்களில் பாதிக்கு மேல் மகரந்தச் சுமையுடன் வரும் கூட்டங்களே பிடிக்க ஏற்ற கூட்டங்களாகும்.
பிடிக்க ஏற்ற காலம்
மதுர வரத்து காலங்களே கூட்டங்களைப் பிடிக்க ஏற்ற காலம் ஆகும். கூட்டிற்கு உணவு வரத்து கூடுதலாக இருப்பதால் இத்தருணத்தில் அடை கட்டுதல் மற்றும் புழு வளர்ச்சி துரிதமாக நடைபெறுகின்றது. எனவே, தேனீக்கள் இத்தகைய தருணத்தில் அவைகளுக்கு ஏற்படும் தொந்தரவையும், இடமாறுதல்களையும் பொறுத்துக் கொள்கின்றன.
அடைகளை நீக்குதல்
  • மரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துவாரங்கள் இருந்தால் தேனீக்கள் வந்து செல்லும் ஒரு வழி நீங்கலாக, மற்ற துவாரங்களை அடைத்து விட வேண்டும்
ராணித் தேனீயைத் தேடுதல்
  • பொதுவாகப் பொந்தினுள் இருக்கும் ஓர அடைகளில் தேனும் மகரந்தமும் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும். நடு அடைகளில் புழு வளர்ப்பு நடைபெறும் பெரும் பொழுது ராணி இந்தப் புழு அடைகளில் தான் இருக்கும்.
  • பொந்தினுள் கையை விட்டு அடைகளை ஒவ்வொன்றாகத் தேனீக்களுடன் பக்கவாட்டில் அசைத்துப் பெயர்த்து எடுக்க வேண்டும். இவ்வாறு முழுமையாக எடுக்கப்பட்ட ஒவ்வொரு அடையிலும் ராணித் தேனீ உள்ளதா எனக் கவனமாக அடையின் இருபுறமும் பார்க்க வேண்டும்
  • ஒரு வேளை ராணித் தேனீ தென்பட்டால் உடனே ராணித் தேனீயை ஒரு ராணித் தேனீ கூண்டிற்குள் அடைக்கலாம். இல்லையெனில் ஒரு காலி நெருப்புப் பெட்டியில் இட்டுத் தப்பிச் செல்ல இயலாத அளவு சிறு இடைவெளி விட்டு அடைக்க வேண்டும்
அடைகளைக் கட்டுதல்
  • பெயர்த்து எடுக்கப்பட்ட அடைகளைச் சட்டத்தில் பொருந்துவதற்கு ஏற்றபடி ஒரு கத்தி கொண்டு முதலில் தேன் பகுதியை நீக்கி விட்டுப் பின்னர் ஓரங்களை அளவாக அறுத்துச் சீர்படுத்த வேண்டும்
  • அறுக்கப்பட்ட பகுதியில் இருக்கும் புழுக்களை நீக்கி விட வேண்டும்
  • அறுத்துச் சீர் செய்யப்பட்ட அடைகளை எடுத்தவாறே சட்டத்தில் சரியாகப் பதப்படுத்தப்பட்ட போதுமான அளவு நீளமுள்ள வலுவான வாழை நார்களைக் கட்டபட பயன்படுத்த வேண்டும். இதற்கு முதலில் சட்டத்தின் மேல் கட்டை அடியில் வரும்படி, சட்டத்தைத் தலை கீழாகத் திருப்பி வைத்துக் கொள்ள வேண்டும். வெட்டிச் சீராக்கப்பட்ட அடைப்பகுதியை மேல் கட்டையின் உட்புறத்தில் பொருந்தும்படி வைத்து ஒருவர் சட்டத்தை அடையுடன் சேர்த்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். மற்றொருவர் வாழை நார் கொண்டு அடையை மேல் கட்டையுடன் இணைத்துக் கட்டி அடைவிளிம்பில் முதல் முடிச்சு போட வேண்டும். கட்ட பயன்படுத்தியது போக மிஞ்சியுள்ள நாரைக் கத்தரித்து விட வேண்டும். இவ்வாறு எட்டு வடிவில் முடிச்சு போடுவதால் அடை வலுவாகச் சட்டத்துடன் இணைக்கப்படுகின்றது
  • அடையின் மேல் விளிம்பிற்குச் சற்று கீழ் இரு துளையிட்டு அடைகளைச் சட்டத்தின் மேல் கட்டையுடன் இணைத்தும் கட்டலாம். மேலும், தேனீக்கள் அடையை மெழுகு கொண்டு சட்டத்துடன் இணைத்த பின்னர் அவை வாழை நாரைக் கடித்து எடுத்து நீக்கிவிடுகின்றன
  • அடைகள் கட்டப்பட்ட சட்டங்களைத் தேனீப் பெட்டியின் புழு அறையில் வரிசையாகத் தொங்க விட வேண்டும்
தேனீக்களை வெளியேற்றல்
  • அடைகளைப் பெயர்த்து ஒவ்வொன்றாக எடுக்கும் பொழுதே அதிர்ஷ்டவசமாக ராணித் தேனீ கிடைத்துவிட்டால் அதனைத் தேடும் சிரமமான வேலை முடிவு பெறுகின்றது
  • பிடித்து அடைக்கப்பட்ட ராணித் தேனீயைத் தேனீப் பெட்டியினுள் அடை கட்டித் தொங்க விடப்பட்டுள்ள சட்டங்களின் மீது வைத்துப் பெட்டியைப் பொந்தின் அருகே வைக்க வேண்டும். இதனால் பொந்திலிருக்கும் பெரும்பாலான தேனீக்கள், புழு அடைகளும் ராணித் தேனீயும் இருக்கும் இடத்தை நாடித் தாமகவே பெட்டிக்குள் வந்து புகுந்து கொள்கின்றன
  • தேனீப் பெட்டியை ஒரு சிறிய இடைவெளி விட்டு மூடி கொண்டு மூட வேண்டும். இந்த இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று அடைத் துண்டுகளை வைத்தும் தேனீக்கள் பெட்டியை நாடி வரும்படி செய்யலாம்
  • பொந்தும் பெரியதாக இருந்தால் புழு அடைக்கப்பட்ட சட்டத்தை பொந்தினுள் வைத்தும் தேனீக்கள் ஈர்க்கலாம்
  • ராணித் தேனீயை முதலில் கண்டு பிடிக்கும் பணித் தேணீக்கள் தங்கள் அடி வயிற்றிலிருக்கும் வாசனைச் சுரப்பியிலிருந்து ஒருவித வாசனையை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய வழிகாட்டம் தேனீக்கள் தங்களின் வயிற்றை உயர்த்திய நிலையில் வைத்துக் கொண்டு, இறக்கைகளை விசிறுவதன் மூலம் இந்த வாசனையை விரைவாகப் பரப்புகின்றன. இந்த வாசனையினால் ஈர்க்கப்பட்ட பிற தேனீக்கள், ராணித் தேனீ இருக்கும் இடத்தை நாடி வருகின்றன
  • பொந்தில் எஞ்சியிருக்கும் தேனீக்களைத் துணிவுடன் கையினால் சில முறை வழித்துப் பெட்டியினுள் விட்டு விடலாம். இவ்வாறு தேனீக்களைக் கையினால் அள்ளும் பொழுது சில சமயம் கொட்டும். அச்சமயங்களில் புகையைப் பயன்படுத்தித் தேனீக்களை வெளியேற்ற வேண்டும்
  • வராது தங்கியுள்ள சில தேனீக்களை வரவழைக்க சிறிது புகையைப் பொந்தினுள் செலுத்தலாம். இதனால் மீதமுள்ள அனைத்துத் தேனீக்களும் பெட்டிக்குள் வந்து விடும்
  • ஆடைகளை இவ்வாறு எடுக்கும் பொழுது ராணித் தேனீ கிடைக்காவிட்டால் அது பொந்தினுள் பிற தேனீக்களுடன் ஓரிடத்தில் கூடி இருக்கும். ஆகவே பொந்தினுள் கையை விட்டு திரளாகத் தொங்கும். தேனீக்களை கையால் தடவிக் கண்டு பிடித்துப் பல முறை பொறுமையாகவும் நிதானமாகவும் கையால் வழித்துத் தேனீப் பெட்டிக்குள் விட வேண்டும்
  • ஒவ்வொரு முறையும் வழித்துத் தேனீக்களை விடும் பொழுது ராணித் தேனீ உள்ளதா எனக் கவனமாகப் பார்க்க வேண்டும்
  • ராணித் தேனீ தென்பட்டால் சிறிது காலம் தாழ்த்தாது உடனே பிடித்து விட வேண்டும்
  • ஒரு சில நேரங்களில் ராணித் தேனீ சில பணித் தேனீக்களுடன் பொந்தின் உட்புறம் தங்கி விடும். அத்தகைய தருணத்தில் போதிய அளவு புகையைப் பொந்தினுள் செலுத்தி ராணித் தேனீயை வெளியேற்ற வேண்டும்
  • பொந்து ஆழமாக இருந்தால் புகைக் குழலுடன் ஒரு நீளமான ரப்பர் குழாயை இணைத்துப் புகையைப் பொந்தினுள் செலுத்தித் தேனீக்களை வெளியேற்ற வேண்டும்
  • எல்லாத் தேனீக்களும் பெட்டிக்குள் வந்தவுடன் தீப்பெட்டி அல்லது கூண்டிற்குள் அடைத்து வைத்துள்ள ராணித் தேனீயை விடுவித்து விட வேண்டும். அவ்வாறு விடுவிக்கும் பொழுது ராணித் தேனீயின் ஒரு சொட்டுத் தேனை விடுவதால் ராணித் தேனீ பறந்து தப்பிக்காது தடுக்கலாம்
  • இயற்கைக் கூட்டங்களைப் பிடிக்கும் பொழுது எல்லாக் கூட்டங்களிலும் ராணித் தேனீ அடையின் மீது கிடைக்காது. தேனீக்களைப் பொந்திலிருந்து வெளியேற்றுவதற்காகப் புகை கொடுக்கும் பொழுது ராணித் தேனியும் பிற தேனீக்களுடன் பெட்டியினுள் வந்து புகுந்துவிடும். சில சமயம் ராணித் தேனீ புகையால் சற்று மயங்கி பொந்தின் வெளிப்புறம் வந்து நிற்கும்
  • அப்பொழுது ராணித் தேனீயினை லாவகமாகப் பிடித்து விட வேண்டும். ஒரு சில சமயம் ராணித் தேனீ, பணித் தேனீக்களுடன் தப்பிப் பறந்து மரக் கிளைகளில் தங்கும். இத்தகைய கூட்டங்களைப் பிடிக்கும் முறையைப் பின்பற்றியே பிடித்துவிடலாம்
  • கூட்டம் பிடித்த இடத்திலேயே பிடித்த கூட்டம் நிலைபெறும் வரை பெட்டியை வைத்திருக்கலாம். ஒரு வேளை அந்த இடத்தில் போதிய பாதுகாப்பு இல்லையெனில் பெட்டியை விரும்பும் இடத்திற்கு எடுத்துச் செல்லாம்
  • கூட்டமாக பிடிக்கும் பொழுது ராணித் தேனீ சில சமயம் நசுங்கி இறக்க நேரிடலாம். இத்தகைய சமயங்களில் தேனீக்கள் தேனீப் பெட்டியினுள் வந்து சேருவது சிரமம். எனவே இத்தகைய கூட்டங்களை வெற்றிகரமாகப் பிடிக்க இயலாது
எடுத்துச் செல்லும் முறை:
  • அடை கட்டப்பட்ட சட்டங்களுடன் மீதமுள்ள காலிச் சட்டங்களை புழு வளர்ப்பு அறையில் தொங்க விட வேண்டும்
  • பெட்டியினை எடுத்துச் செல்லும் பொழுது சட்டங்கள் அசைவதை் தடுக்கக் கடைசி சட்டத்திற்கும் பெட்டிச் சுவருக்கும் இடையே ஒரு சிறு மரத்துண்டு அல்லது குச்சியைச் செருகி வைக்க வேண்டும்
  • பெட்டியை மூடிய பின்னர் ஒரு கயிறு கொண்டு பெட்டியின் பாகங்கள் அசையாதபடி இறுக்கமாகக் கட்ட வேண்டும். இறுதியாக நுழைவு வழியைத் துணி கொண்டு அடைக்க வேண்டும்
  • தேனீப் பெட்டியை இரவு நேரத்தில் வைக்கப்பட வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்லலாம்
  • பெட்டியை அவ்வாறு எடுத்துச் செல்லும் பொழுது அதிக அதிர்வுகளுக்கு உள்ளாகாமல் எடுத்துச் செல்ல வேண்டும்
பராமரிப்பு யுக்திகள்:
  • கடைசி அடைச் சட்டத்தை ஒட்டித் தடுப்புப் பலகையைத் தொங்க விட வேண்டும். ராணித் தேனீ தப்பிச் செல்வதைத் தடுக்க வாயில் தகட்டை நுழைவு வழி முன் பொருத்த வேண்டும். இதனால் பிடித்து அடைக்கப்பட்ட கூட்டங்கள் பெட்டியை விட்டு ஓடுவதைப் பெருமளவு தடுக்கலாம்
  • பிடித்த கூட்டத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது அவசியம் சர்க்கரைப் பாகு கொடுக்க வேண்டும்
  • அடிப்பலகையை மட்டும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும்
  • கூட்டங்களுக்கு வேறு எவ்விதத் தொந்தரவும் தரக்கூடாது
  • எறும்புகளுக்கு பெட்டிக்குள் ஏறாதவாறு அவசியம் தடுக்க வேண்டும்
  • சில இடங்களில் சில கூட்டங்களைப் பிடிக்கும் பொழுது ஒரு நல்ல புழு அடை கூடக் கிடைக்காது. இத்தருணத்தில் வேறு ஒரு தேனீப் பெட்டியிலிருக்கும் ஒரு நல்ல புழு அடை எடுத்துக் கொடுத்து சர்க்கரைப் பாகு கொடுத்தால் கூட்டம் நிலைபெற்று விடும்
கூட்டம் நிலைபெற்றதற்கான அறிகுறிகள்:
  • பணித் தேனீக்கள் அடைகள் கட்டப் பயன்படுத்திய வாழை நாரைக் கடித்துத் துண்டுகளாக்கி வெளியே கொண்டு வந்து போடும்
  • ஓரிரு நாட்களில் பணித் தேனீக்கள் இறந்த புழுக்களை எடுத்து வந்து வெளியில் போடும்
  • வயல்வெளித் தேனீக்கள் கூட்டிற்குள் மகரந்தம் கொண்டு வரும் இவையனைத்தும் தேனீக் கூட்டம் புதிய இடத்தில் நிலை பெற்று விட்டதற்கான அறிகுறிகள் ஆகும். தேனீப் பெட்டிக்குள் நுழையும் வயல் வெளித் தேனீக்களில் பாதியாவது மகரந்தம் கொண்டு வருமேயானால் அத்தகைய கூட்டங்கள் நிச்சியமாக ஓடாத கூட்டம் நிலை பெற்ற பின்னரே தேனீபு் பெட்டியை மாலை நேரங்களில் ஆய்வு செய்வதற்குத் திறந்து பார்க்க வேண்டும்
பிடித்து வைத்த கூட்டம் ஓடுவது ஏன்?
பிடித்த கூட்டம் ஓடுவதற்கான முக்கியகாரணிகள்
பிடிக்கும் போது நடக்கும் நிகழ்வுகள்:
  • வைரஸ் நோயுற்ற இயற்கைக் கூட்டங்களையும் மெழுகுப் பூச்சி தாக்கிய கூட்டங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்பட்ட கூட்டங்களையும் பிடித்து வைத்தல் பெட்டியில் தங்காது ஓடி விடும்
  • புழு அடைகளினுள் அதிக அளவு தூசி மண் விழுந்து விடுதல்
  • கூடுதலாக புகை கொடுத்தல்
  • அறுத்த அடைகளைச் சட்டத்தில் அதிக அளவு வாழை நார்
  • கூட்டம் பெட்டியினுள் வந்து சேரக் காலதாமதம் ஆகுதல்
  • அடைகளைப் பெயர்த்து எடுக்கும்பொழுது ராணித் தேனீ நசுங்கி இறத்தல்
  • பெட்டிகள் எடுத்து வரும் பொழுது அதிக அதிர்ச்சிக்கு ஆளாகுதல்
பிடித்த பின்னர் நடக்கும் நிகழ்வுகள்:
  • உணவு வரத்து குறைவான காலங்களில் கூட்டங்களைப் பிடித்தல்
  • வெயில் கீழே விழுதல்
  • அடிக்கடி பெட்டியைத் திறந்து பார்த்தல்
  • போதிய அளவு தேன் இல்லாத பொழுது சர்க்கரைப் பாகு கொடுக்காது இறத்தல்
  • அடிப்பலகையை அடிக்கடி சுத்தம் செய்யாது இருத்தல்
  • எறும்பு தாக்குதலுக்கு இலக்காகுதல்
பிரிந்து செல்லும் கூட்டங்களைப் பிடித்தல்:
கூட்டம் பிரியும் காலங்களில் பிரிந்து வரும் கூட்டங்கள் குறிப்பாக உயரம் குறைவான மரக் கிளைகளிலிருந்து வேலியிலும் காலி மண் பானை, பழைய பெட்டி, கல் இடுக்கு, மரப்பொந்து, மற்றும் கரையான் புற்றினுள்ளும் தங்கும். இத்தகைய கூட்டங்களை எளிதாகப் பிடிக்கலாம். பறந்து செல்லும் பிரிந்த தேனீக் கூட்டத்தின் மீது மணலை வீசுவதாலோ அல்லது நீர் தெளிப்பதாலோ பறப்பதை நிறுத்தி அருகிலுள்ள ஏதாவது ஒரு இடத்தில் தங்கவைக்க இயலும். முதன்மைக் கூட்டங்களே பிடித்த அடைக்க ஏற்றவை. இத்தகைய கூட்டங்களைப் பிடித்து வைக்கும் பொழுது அவை ஓடாது ஓரிடத்தில் தங்கி விரைந்து பெருகித் தேன் கொடுக்கின்றன.
  • கூட்டத்திற்கு சற்று மேலாக ஒரு தேனீப் பெட்டியின் புழு அறையில் வேறு ஒரு தேனீப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட ஓரிரு புழு அடைகளை வைத்துக் கூட்டங்களை ஈர்த்துப் பிடிக்கலாம்
  • புழு அடை இல்லாத பொழுது சர்க்கரைக் கரைவலைப் பெட்டியின் உட்புறமும் தேனீக் கூட்டத்தின் மீதும் தெளிப்பதால் கூட்டங்களை எளிதாக ஈர்த்துப் பிடிக்கலாம்
  • கூட்டத்தில் இருக்கும் தேனீக்கள் அனைத்தும் பெட்டியில் நுழைந்த பின்னர் புழு அறையை மூடி விட்டுப் பின்னர் நுழைவு வழியை அடைத்து விட்டு உடனே எடுத்துச் செல்லலாம்
  • பெட்டியினுள் அடை அஸ்திவாரத் தாள் ஒட்டப்பட்ட காலிச் சட்டங்களை வைக்க வேண்டும்
  • சர்க்கரைப்பாகு கொடுத்துத் தேனீக்களை அடைகள் கட்டச் செய்ய வேண்டும்
  • கூட்டம் நிலை பெற்ற பின்னர் ராணியை மாற்றி விட வேண்டும்
பிரிந்த கூட்டத்தைப் பிடிக்கும் முறைகள்:
எட்டும் இடம்:
  • மரத்தின் மீது ஏறிக் கிளையோடு அறுத்து எடுத்துப் பெட்டியில் வைத்தல்
  • கை கொண்டு பெட்டியினுள் தேனீக்களை வழித்துப் போடுதல்
  • ஓரிரு புழு அடைகள் கொண்டு ஈர்த்துப் பிடித்தல்
எட்டாத இடம்:
  • கூடுதல் விசையுடன் மரத் தெளிப்பான் கொண்டு நீர் தெளித்தால் தேனீக்களின் இறக்கைகள் நனைத்து தரையில் விழும், இவற்றை வலை கொண்டு பிடித்து விடலாம்
  • ஒரு நீளமான குச்சியின் நுனியில் ஒரு புழு அடையைக் கட்டி தேனீத் திரளிற்கு அருகே சென்றால் தேனீக் கூட்டம் புழு அடையில் ஏறிவிடும்
  • புகை கொண்டு தேனீக் கூட்டத்தை எட்டும் இடத்திற்கு விரட்டிப் பின்னர் பிடிக்கலாம்
பிடித்த கூட்டம் தங்கச் சில யுக்திகள்:
  • முதன்மை கூட்டத்தை மட்டுமே பிடிக்க வேண்டும்
  • தேனீ இருந்த பெட்டியில் கூட்டம் பிடிக்க வேண்டும்
  • ராணித் தேனீயைக் கை கொண்டு பிடிக்கக் கூடாது
  • கூட்டம் நிலை பெற வேறு ஒரு தேனீபு் பெட்டியிலிருந்து திறந்த நிலையில் உள்ள புழு அடை எடுத்துக் கொடுத்தல் வேண்டும்
  • பிடித்த கூட்டம் முனைப்புடன் பணியாற்றச் சர்க்கரைப் பாகு கொடுக்க வேண்டும்
  • ராணியின் ஒரு பக்க இறக்கைகளைப் பாதியளவிற்கு வெட்டுவதால் பிடித்த கூட்டம் ஓடாது
  • ராணி தப்பித்து ஓடாது தடுக்க நுழைவு வழியைச் சிறிதாக்க வேண்டும்
  • நுழைவு வழியின் முன் வாயில் தகட்டைப் பொருத்துவதால் ராணித் தேனீ வெளி வர இயலாது
  • புணராத ராணியெனில் நுழைவு வழியைச் சிறிதாக்கக் கூடாது
சில குறிப்புகள்:
  • சிறு சிறு பிரிவாய் கலைந்து ஒட்டும் கூட்டத்தைப் பிடிக்கக் கூடாது
  • ராணி இல்லாத கூட்டத்தைப் பிடித்தால் கூட்டம் தங்காது
  • நோயுற்றதால் ஓடிய கூட்டத்தை அடை கொடுத்து ஈர்த்தும் பிடித்தல் இயலாது. அவ்வாறு பிடித்தாலும் அத்தகைய கூட்டத்திலிருந்து பிற கூட்டங்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது
  • பொதுவாகப் பிரிந்து வந்த கூட்டத்தில் உள்ள தேனீக்கள் அதிகம் கொட்டாது
  • ஓடி வந்த கூட்டத்தில் உள்ள தேனீக்கள் கூடுதலாகக் கொட்டும்
பிரிந்து வரும் கூட்டங்களை ஈர்த்துப் பிடித்தல்:
  • கூட்டம் பிரிந்து செல்லும் காலங்களில் காலித் தேனீப் பெட்டிகளின் உட்புறம் தேன் மெழுகை உருக்கித் தடவி வைத்தால் பிரிந்து வரும் கூட்டங்களும் சில நேரங்களில் கூட்டை விட்டு வேறு இடம் தேடி ஓடிச் செல்லும் கூட்டங்களும் நாடி வந்து தானே பெட்டிகளில் புகுந்து கொள்ளும்
how to acquire how to acquire
தொடரும்...
Engr.Sulthan

3 comments:

  1. Thank u sir.... 7845544181.... Ungaludaiya No Vaendum sir...

    ReplyDelete
  2. கட்டுரைக்கு மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  3. கட்டுரைக்கு மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete