வேர், கழுத்து, உச்சி (Root, Neck, Crown) எனப் பல்லில் மூன்று பகுதிகளை உண்டாக்கும் தனித்தன்மை கொண்ட உயிர்மங்களால் (Specialized Cells) பற்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேல் முகடின் மீதான வெளிப் பூச்சு, வலுவான எனாமலால் (Enamel) ஆனது. இது பல்லின் பெரும்பகுதியான காழ்க் கூறினால் (Dentine) மூடப் பெற்றுள்ளது. பற்களின் எலும்படங்கிய வரிவடிவமைப்பை அது தருகிறது. பற்காழில் உள்ள கால்வாய்கள், மிகவும் உள்ளேயுள்ள பல் பகுதியை அதாவது பல் அடிக்கூழப் பொருளையும் அவற்றை உண்டாக்கும் நரம்புகளையும் குருதிக் குழாய் களையும் கொண்டுள்ளன.
மனிதன் உட்பட உயர்தர விலங்குகள் பற்களில்லாமலேயே பிறக்கின்றன. பால்பற்கள், நிலையான பற்கள் என இரு இனங்களை வளர் நிலையில் கொள்கின்றன. (Milk teeth, Permanent teeth).
மனிதன் வாய் முப்பத்திரண்டு பற்கள் கொண்டது. அவற்றினுடைய செய்கடமைகள் வெட்டுவது, கிழிப்பது, உணவை அரைப்பது என்பவை ஆம். அவை இவற்றைச் செய்வதில் தனித்தன்மையுடையவை. ஆகவே ஒவ்வொரு தாடையிலும் (Jaw) நான்கு கடிப்பதற்கான உளிப்பற்கள் (Incisors), இரண்டு கிழிப்பதற்கோ பிடிப்பதற்கோ ஆன கோரைப் பற்கள் (Canines), வெட்டும் ஓரங்கள் கொண்ட மெல்லுவதற்கான ஆறு பின் கடைவாய்ப் பற்கள் (Molars) உள்ளன.
பின்கோடி கடைவாய்ப்பற்கள் (Wisdom) எல்லாவற்றிலும் பெரியவை. தாடையின் பின்புறத்தில் பொருந்தியுள்ளன. நாம் நல்ல வயது எட்டும் வரை பின் கடைவாய்ப் பற்கள் வளர்வதில்லை. இருபது வயதிற்கு மேல் தான் இப்பின்கோடிக்கடைவாய்ப் பல் தோன்றலாம்.
No comments:
Post a Comment