Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 30, 2012

சுய தொழில்கள்-19 கயிறு தயார் செய்யும் பிஸினஸ்





தேங்காய் நாரிலிருந்து கயிறு தயார் செய்யும் பிஸினஸ்!


ஒரு தொழிலைத் தொடங்க முதலீடு முதல் மூலப்பொருள் வரை, உற்பத்தி முதல் விநியோகம் வரை, கடன் முதல் ரிஸ்க் வரை அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தரவே இந்த பகுதி. வாரம் ஒரு தொழில் வீதம் இதில் சொல்லப்படும் பல்வேறு தொழில்களைப் படித்து, உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து, பயனடைந்து வருங்கால அம்பானிகளாக வாழ்த்துகள். இந்த வாரம், உங்களுக் காக தேங்காய் நாரிலிருந்து கயிறு தயார் செய்யும் பிஸினஸ்!

இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே உலகள வில் இத்தொழிலில் இருக்கும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகள் நமக்கு போட்டியாக வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதும் இன்னொரு பிளஸ் பாயின்ட்.

தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ளவர்கள் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம்.



தேங்காய் நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது.
Coconut Dehusking Machine
யூனிட் அமைப்பு!

இந்தத் தொழிலை தொடங்க நான்கு மாதங்கள் ஆகும். ஆண்டுக்கு சுமார் 140 டன் தேங்காய் நார் கயிறு யூனிட் தொடங்க 20 சென்ட் நிலம் தேவை. சொந்தமாக இடமிருந்தால் நல்லது. அது இல்லாதவர்கள் குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். தொழிற்சாலை, அலுவலகம், ஸ்டோர் ரூம் போன்றவைகளுக்காக 1,200 சதுர அடி ஷெட் தேவைப்படும்.


தயாரிக்கும் முறை!

காட்டன் நூல் தயாரிப்பு போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப் படுகிறது. முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர்விட்டு ஊறவைத்து. இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து 'வில்லோயிங்’ எனப்படும் மரத்தினாலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் கிடைக்கும். அதன் பிறகு அந்த நாரை 'சில்வரிங்’ மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால், விற்பனைக்கு ரெடி!

இயந்திரங்கள்!

வில்லோயிங், சில்வரிங், ஸ்பின்னிங் மற்றும் உலர வைக்கும் இயந்திரம் போன்றவை தேவைப்படும். இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும் தமிழகத்திலேயே, குறிப்பாக பட்டுக்கோட்டையிலேயே கிடைக்கிறது.

மூலப்பொருள்!

தேங்காய் நார்தான் இதன் முக்கிய மூலப்பொருள். மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோவை மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து தேங்காய் மட்டையை வாங்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 1.30 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை ஓர் ஆண்டுக்கு கிடைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 1.90 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மூலப்பொருள் கிடைப் பதில் தட்டுப்பாடு இருக்காது.

புதிதாக யூனிட் வைக்க நினைப்பவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் 130 டன் தேங்காய் மட்டை வரை தேவைப்படும்.


மின்சாரம்!

இந்த தொழிலுக்கு 6.50 ஹெச்.பி(hp) மின்சாரம் தேவைப்படும். தேங்காய் நார் கயிறு தயாரிப்பு குடிசைத் தொழிலின் கீழ் வருவதால் மின்சாரத்தை அரசு சலுகைக் கட்டணத்தில் வழங்குகிறது.

வேலையாட்கள்!

ஒரு ஷிப்ட் வேலை பார்க்க ஒன்பது திறமையான தொழிலாளர்கள் தேவை. இரண்டு ஷிப்ட் என்று வரும்போது 18 வேலையாட்கள் தேவை. மேலும் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு சூப்பர்வைசர் தேவை. இதில் 90 சதவிகித வேலைகள் பெண் தொழிலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயக் கூலித் தொழிலா ளர்களை இந்தத் தொழிலில் பயன்படுத்திக் கொள்ளலாம். இயந்திரங்களை எப்படி இயக்குவது என்பதை இயந்திரங் களை சப்ளை செய்யும் நிறுவனமே தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்தில் கற்றுத் தந்துவிடும்.

தண்ணீர்!

தினமும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதற்கான தண்ணீரை ஆழ்குழாய் கிணற்றின் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே, நல்ல தண்ணீர் வசதி இருக்கும் இடமாகப் பார்த்து யூனிட்டை தொடங்குவது அவசியம். இந்தத் தொழில் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் தயாரித்த பொருளை எவ்வித பிரச்னையும் இல்லாமல் சப்ளை செய்யலாம்.


மூலதனம்

முதல் வருட செயல்பாட்டு மூலதனமாக 1.71 லட்ச ரூபாய் தேவைப்படும். இது 15 நாட்களுக்கான மூலப் பொருட்கள், ஏழு நாட்களுக்கான முடிக்கப்பட்ட ஸ்டாக்குகள் மற்றும் 15 நாட்கள் விற்ற சரக்குக் கான வரவேண்டிய தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய தொகையாகும்.

எதிர்பாராத செலவுகள்!

எவ்வளவுதான் பட்ஜெட் போட்டு செலவு செய்தாலும் துண்டு விழவே செய்யும். அதுபோல இந்த பிஸினஸில் திடீர் செலவுகளும் வரும். கட்டட வேலைகள், இயந்திரங்கள், மின்சாரம், அலுவலக உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர் போன்ற விதங்களில் 5 சதவிகிதம் அதாவது சுமார் 39 ஆயிரம் ரூபாய் வரை ஏற்படக்கூடும்.


ஆரம்ப கட்ட செலவுகள்!

மின் இணைப்பிற்கான டெபாசிட் தொகை, போக்கு வரத்து, கடன் வாங்குவதற்கு என ஆகும் செலவுகள் போன்ற வகையில் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும்.

பிரேக் ஈவன்!

மொத்த உற்பத்தி திறனில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடங்களில் முறையே 36%, 34% 31% என இருந்தால் இத்தொழிலில் பிரேக் ஈவன் ஏற்படும். அதற்கான உற்பத்தித்திறன் 35 டன், 34 டன் மற்றும் 33 டன் என்று இருக்க வேண்டும்.

ரிஸ்க்!

இத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளான தேங்காய் மட்டை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம். அப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வரும். அதனால் நம் லாபம் குறையலாம். போட்டி அதிகரித்து வருவதால், பொருட்களின் விலை குறையவும் வாய்ப்புண்டு.

மார்க்கெட்டிங்!

நாம் தயார் செய்யும் தேங்காய் நார் கயிறை கேரளாவில் இருக்கும் தேங்காய் நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம். தவிர, தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தேங்காய் நார் கயிறுகளை வாங்க நிறைய வியாபாரிகள் இருக்கின்றனர்.

ஏற்றுமதியிலும் கலக்கலாம்!

மண் அரிப்பைத் தடுக்கும் வலைகள் மற்றும் பழத் தோட்டங்களில் கொடிகள் படர்வதற்கும் பயன்படுகிறது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உலகளவில் 3,50,000 டன்கள் ஜியோ- டெக்ஸ்டைலுக்கான சந்தை இருக்கிறது. ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிப்பில் 98% சிந்தெடிக் மெட்டீரியல் மூலம் தயாரித்த பொருட்களுக்கு பதில் தேங்காய் நார் மூலம் தயாரிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் இந்த பொருளுக்கான தேவை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்தத் தொழில் கிடையாது என்பதோடு அங்கு ஆரம்பித்தால் அதிக செலவு ஏற்படும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பலம். எதிர்காலத்தில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளில் இந்தத் தொழில் தொடங்கப்பட்டாலும் நமக்கு அதிகம் பாதிப்பிருக்காது.

ஃபைனான்ஸ்!

மொத்த மூலதனத்தில் 5 சதவிகிதத்தை கையிலிருந்து போட வேண்டும். அந்த வகையில் இந்தத் தொழில் தொடங்குபவர் சுமார் 58,000 ரூபாய்வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். மூன்று லட்ச ரூபாய், அதாவது 30% வரை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (ரிக்ஷிமிசி) மூலம் மானியம் கிடைக்கும். 10 லட்சத்துக்கு மேல் 25 லட்சத்துக்குள் எனில் 10% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது வங்கியில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த மானியத் தொகை வங்கியில் வாங்கிய கடனுக்கு வரவாக டெபாசிட் செய்யப்படும். மானியத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் காலகட்டத்தில் அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி பிடிக்கப்பட மாட்டாது. 65% வரை அதாவது 6.50 லட்சத்துக்கு மட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க வேண்டியதிருக்கும்.

நிகர லாபம்

மொத்த விற்பனையில் 15-20% வரை லாபம் கிடைக்கும்

நன்றி:என் கண்கள்.blogspot
Engr.Sulthan

No comments:

Post a Comment