ஈமு கோழி வளர்ப்பு பகுதி-2
ஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. இது ஆஸ்திரேலியாவில் இரண்டாவது மிகப்பெரிய பறவை அதே போல் ஆஸ்ட்ரிச், கெசாவெரி போன்ற பறவைகளுக்கு அடுத்து உலகின் மூன்றாவது பறவையும் இதுவே ஆகும்.
ஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்
தோற்றம்
|
ஆஸ்திரேலியா
|
குடும்பம்
|
ராட்டைட்
|
பயன்கள்
|
எண்ணெய்,
இறைச்சி, தோல் மற்றும்
இறகுகள்
|
வாழ்நாள்
|
30
வருடங்கள்
|
பொரிக்கும்
போது
குஞ்சின் எடை
|
400-450
கி
|
முதிர்ந்த
கோழியின் உடல் எடை
|
50-70
கிகி
|
உயரம்
|
5-6
அடி
|
பருவமடையும் வயது
|
18-24
மாதங்கள்
|
விற்பனை வயது
|
15-18
மாதங்கள்
|
பாலின விகிதம்
|
1:1
|
ஓடும் வேகம்
|
60
கிமீ /
மணிக்கு
|
ஆண்டொன்றிற்கு
ஒரு
கோழி
இடும் முட்டைகள்
|
50
முட்டைகள்
|
இனச்சேர்க்கை வயது
|
2-40
வருடங்கள்
|
அடைகாக்கும்
காலம்
|
50-54
நாட்கள்
|
முட்டையின்
எடை
|
680
கிராம்
|
இடஅளவு
|
ஒரு இனச்சேர்க்கை
ஜோடிக்கு 100×25அடி
|
ஈமு கோழியைப்
பிடிப்பதற்கு
|
தோலினால்
ஆன
கையுறை
|
இன வேறுபாடு கண்டறிதல்
1.
பெட்டைக் கோழிகளை விட ஆண் கோழிகளின் கால்கள் சிறியதாக இருக்கும்.
1.
எச்சத்துவாரத்தில் ஆணுறுப்பு காணப்படும்.
1.
பெண் பறவைகள் முரசின் ஒலி போன்ற ஒரு முழக்கச் சத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆண் பறவைகள் பன்றியினைப் போல் உறுமும்.
போக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்
ஈமு பறவைகளைப் பிடித்துக் கையாள்வதற்கு முறையான பயிற்சி தேவை. இல்லையெனில் பறவைக்கோ அல்லது கையாள்பவருக்கோ காயங்கள் ஏற்படும். முதல் இரண்டு மாத வயதுடைய 8 கிலோ எடைக் கொண்ட குஞ்சுகள் சிறியனவாக இருந்தாலும் அவற்றின் கால்கள் வலுவானவை. எனவே அதைப் பிடிப்பவர் காலில் பூட்ஸ், ஜீன்ஸ் போன்ற முறையான கவசங்களுடன் நெருங்குதல் வேண்டும். 7 மாதங்களில் இப்பறவை 2 மீ உயரமும் 18 கிலோ எடையும் கொண்டிருக்கும். எனவே இவ்வயதிலும் 45+ கிலோ எடைக் கொண்ட பறவைகளைக் கையாளும் போது மிகுந்த கவனம் தேவை.
அதற்கு
1.
A.
ஈமு பறவை வளர்ப்பாளரிடம் சென்று அதைக் கையாளும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
B.
அவருடன் கூடவே இருந்து சற்று பயிற்சி பெற்று வருதல் நலம்.
ஈமுக்கள் கொட்டிலில் வளர்க்கப்படும்போது அதிக வெயிலினால் கன அழுத்தத்திற்கு உட்பட நேரிடலாம். எனவே முடிந்தவரை குளிர்ந்த இரவு நேரங்களிலேயே இவற்றைப் பிடிக்கவேண்டும். அடிக்கடி துரத்திப் பிடித்தல் கூடாது. சரியாகத் திட்டமிட்டுப் பிடிக்கவேண்டும். ஈமுக்கள் அமைதியற்றுக் காணப்பட்டால் சிறிது ஓய்வு கொடுத்துப் பின் மறுநாள் பிடித்தல் வேண்டும்.ஈமு பறவைகள் சாதுவானவை. எனினும் அவற்றை கால்நடைகளைப் போல கையாள்வது எளிதல்ல. அதிலும் சற்று வயது முதிர்ந்த பறவைகளை கையாளுதல் மிகவும் கடினம்.
ஈமு பறவைகளைப் பழக்கப்படுத்தி அவற்றுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இவற்றக்கு மனிதத் தொடர்புகள் குறைவு. எனவே அவற்றுடன் அதிக நேரம் செலவிட்டு முறையாகக் கையாண்டால் இவற்றை வளர்ப்பது மிகவும் எளிதே.
ஈமுக்களைப் பிடிக்கும்
முறைகள்
பெரிய ஈமுக்களைப் பிடிக்கும் பொது அவற்றின் பின்னால் அல்லது
பக்கங்களிலிருந்தே பிடிக்கவேண்டும். ஏனெனில் இப்பறவைகள் முன்பக்கம் நோக்கியே
உதைக்கக் கூடியவை. மேலும் பிடிக்கும் போது இறக்கைகளை சேர்த்து நெருக்கமாக இறுக்கிப்
பிடித்துக் கொள்ளுதல் வேண்டும். ஈமுவின் பின்னங்கால்களில் கூர்மையான அமைப்புகள்
இருப்பதால் அவை காயமேற்படுத்தி விடாமல் கையாள்பவர் கவனமாக இருக்கவேண்டும்.
பிடித்திருக்கும்போது ஈமுக்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் போது
காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பின்
பக்கமாக வந்து பிடித்தல் வேறொரு முறையில் ஈமு
பறவையின் பின்பக்கமாக வந்து ஒரு கையை பறவையின் பின்பகுதியில் அழுத்திக் கொண்டு
மற்றொரு கையால் அதன் நெஞ்சுத் துட்டில் உள்ள மென்மையான தோலை கெட்டியாகப் பிடித்துக்
கொள்ளவேண்டும். அதன் பின்பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் ஈமுவால்
நகரமுடியாமல் அடங்கிவிடும்.
முதலில் பிடிக்கும் போது ஈமு அதிகமாகத் துள்ளும். ஒரு நபர் அதைப்
பிடித்தவுடன் மற்றொரு நபர் உடனே அதை வாங்கி கூண்டில் / அறையில் அடைத்து
விடவேண்டும். பிடிபட்ட ஓரிரு நிமிடங்களில் ஈமு அடங்கிவிடவேண்டும். அது துள்ள
ஆரம்பித்தால் பின்பு அதைப் பிடித்துக் கொண்டு இருப்பது கடினம்.
பிடித்தபின் பிடி தளர்ந்தாலோ, விலகிவிட்டாலோ, உடனே பறவையைக் கீழே விட்டு
விட்டு ஓடிவிடவேண்டும். பிடிபட்ட பிறகு தொடர்ந்து பறவையானது அடங்காமல்
துள்ளிக்கொண்டே இருந்தால், அதன் மேல்கழுத்தையும், பின் தலையையும் பிடித்து மேலும்
கீழும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் இழுக்கவேண்டும். இது பறவையை ஓரளவு
பலத்தைக் குறைத்து அது முன்னோக்கி உதைப்பதைக் குறைக்கும்.
கைக்கடிகாரம் போன்ற பொருட்களை கழற்நி விடுதல் நலம். ஈமு பறவைகளை முறையாகக்
கையாண்டால் நல்ல முறையில் வளர்க்கலாம்.
உணவு மற்றும் நீர் தேவை
தீவன
ஊட்டம்
நீர்த்
தொட்டி 10
பறவைகளுக்கு 1 நீர்த்தொட்டி மற்றும் 2 தீவனத்தொட்டி பயன்படுத்தப்படவேண்டும்.
குடிநீருக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு வாளிகள் உபயோகிக்கலாம். நீர்
சுத்தமானதாகவும், பாக்டீரியாக்கள் அற்றதாக இருக்கவேண்டும். நீரை முன்பே அதன்
தன்மையை சோதித்து பொட்டாசியம் பர்மாங்கனேட் போன்ற தீவன ஊக்கிகள் பயன்படுத்துதல்
நன்று. நீரின் கலங்கல் தன்மையை நீக்க ஆலம் பயன்படுத்தலாம். ஒரு வளர்ந்த ஈமுவிற்கு
6-7 லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. நீர்த்தொட்டிகள் இரவிலும் கூட
நீர்த் தேவைப்படும் அளவு தூய்மையாக இருக்குமாறு பராமரிக்கவேண்டும். தீவனமானது காலை
7.00 மணியிலிருந்து 11.30 மணி வரையிலும் பிற்பகல் 3லிருந்து மாலை 6.30 மயி
வரையிலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கொடுத்தல் வேண்டும். காய்கள், இலை தழைகள்
போன்றவற்றையும் நன்கு நறுக்கிக் கொடுக்கலாம்.
நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான
தீவன அளவு
ஈமுக்கோழியின்
வயது (மாதங்களில்) |
நாளொன்றுக்கு
ஒரு பறவைக்கு தேவையான அளவு (கிராமில்) |
3 |
200 |
4 |
300 |
5 |
350 |
6 |
400 |
7 |
500 |
8 |
600 |
9 |
700 |
10 |
800 |
11 |
800 |
12 |
900 |
13 |
900 |
14 |
900 |
15 |
900 |
16 |
900 |
17 |
900 |
18 |
900 |
தீவனத்துடன் கொடுக்கும்
உபபொருட்கள்
கால்சியம் நீர்ம
வடிவில் இருக்கும் கால்சியத்தைக் குடிதண்ணீரில் கலந்து கொடுத்தல் வேண்டும்.
கீழ்க்கண்ட மருந்துகள் சந்தையில் எளிதில் கிடைப்பவை. இப்பரிந்துரைக்கப்பட்ட
மருந்துகளை பறவையின் வயதிற்கேற்ற அளவில் அளிக்கலாம்.
வயது |
பறவை
ஒன்றுக்குத் தேவையான அளவு (மி.லிட்டரில்) |
3-5 மாதங்கள் |
1.0 |
5-8 மாதங்கள் |
2.0 |
8 மாதங்களுக்கு மேல் |
3.0 |
வைட்டமின்
ஏ, டி3 நீர்மநிலையில் கீழ்க்கண்ட விட்டமின்களை குடிநீரில் கலந்து
கொடுக்கலாம். அளவுகள் வயதிற்கேற்ப அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
வயது
|
நாளொன்றுக்கு
ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி) |
3-9 மாதங்கள் |
0.5 |
9 மாதங்களுக்கு மேல் |
1.0 |
விட்டமின்
பி காம்ப்ளக்ஸ் குரோவிபிளக்ஸ் பி பிளக்ஸ் போன்ற விட்டமின்
காம்பளக்ஸ்களை நீரில் கலந்து அளிக்கவேண்டும்.
வயது
|
நாளொன்றுக்கு
ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி) |
3-5 மாதங்கள் |
1.0 |
5-8 மாதங்கள் |
2.0 |
8 மாதங்களுக்கு மேல் |
3.0
|
ஈமு பறவைகளுக்கான உணவூட்ட
அட்டவணை
ஊட்டச்சத்துக்கள்
|
ஆரம்பத்தில் |
வளரும்
பருவத்தில் |
இறுதியில் |
கிரகிக்கப்பட்ட ஆற்றல் / கிலோ கலோரி /
கிகி |
2685 |
2640 |
2860 |
பண்படா புரதம் % |
22 |
20 |
17 |
மெத்தியோனைன் % |
0.48 |
0.44 |
0.38 |
லைசின் % |
1.10 |
0.94 |
0.78 |
பண்படா நார்ப்பொருள் |
6-8 |
6-8 |
6-7 |
கால்சியம் |
1.5 |
1.3 |
1.2 |
வளரும் ஈமுக்களுக்குத் தேவையான
ஊட்டச்சத்துக்களின் தேவை.
அட்டவணை
1 லெசின், மெத்தியோனைன் ஃசிஸ்டைன் மற்றும் வெவ்வேறு நிலைகளில்
ஈமுவுக்குத் தேவையான ஆற்றல்.
தேவையான
சத்துக்கள்
|
ஆரம்பத்தில் |
வளரும்
பருவம் |
முடிவில் |
கிரகிக்கக் கூடிய ஆற்றல் எம்இ / கி. ஜீல் /
கி.கி |
11.2 |
10.2 |
10.2 |
லைசின் (%) |
0.9 |
0.8 |
0.7 |
மெத்தியோனைன் + (%) சிஸ்டைன் |
0.7 |
0.7 |
0.6 |
கால்சியம் (%) |
1.6 |
1.6 |
1.6 |
கிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%) |
0.6 |
0.6 |
0.6 |
சோடியம் (%) |
0.2 |
0.2 |
0.2 |
அட்டவணை
2
தேவையான
ஊட்டச் சத்துக்கள்
|
ஆரம்பத்தில் |
வளரும்
போது |
இறுதியில் |
கிரகிக்கக் கூடிய ஆற்றல் (மெகா. ஜீல் /
கி.கி) |
11.2 |
11.0 |
11.0 |
லைசின் (கிராம் / மெகா ஜீல் ) |
0.80 |
0.75 |
0.70 |
மெத்தியோனைன் |
0.50 |
0.50 |
0.50 |
மெத்தியோனைன் + சிஸ்டைன் |
0.80 |
0.80 |
0.80 |
டிரைப்டோபன் |
0.19 |
0.19 |
0.19 |
ஐசோலியூசின் |
0.65 |
0.65 |
0.65 |
திரியோனைன் |
0.60 |
0.60 |
0.60 |
கால்சியம் (%) |
1.6 |
1.6 |
1.6 |
கிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%) |
0.6 |
0.6 |
0.6 |
சோடியம் (%) |
0.2 |
0.2 |
0.2 |
ஈமுக்களுக்கு பொதுவாகவே அதிக அளவு ஆற்றல் தேவைப்படும். ஆதலால் ஆற்றல் அதிகம்
கொண்ட அதே சமயம் விலைக் குறைந்த தீவனங்களை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதனால்
மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். தீவனத்தில் தேவையான அமினோ அமிலங்கள்
அனைத்தும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 11.2 மெகா ஜீல் /
கிகி அளவு கிரகிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட தீவனங்கள் அளிப்பதே சிறந்தது.
காலில் ஏற்படும் கோளாறுகள்
ஈமுக் கோழிகளில் அவற்றின் காலில் ஏற்படும் கோளாறுகள் ஒரு பிரச்சினை ஆகும்.
இது கால்சியம் / பாஸ்பரஸ் சீரற்ற நிலையில் இருப்பதாலோ, மெத்தியோனைன் பற்றாக்
குறையினாலோ ஏற்படும். தாய்வழி ஊட்டச்சத்து மூலமாகக் கூட ஏற்படலாம். ஓ மெல்லி
என்பவர் கலவைத் தீவனத்தை இரு வேளையாகப் பிரித்து மொத்தம் 4 மணி நேரத்தில்
கொடுக்கும் போது இவ்வகைப் பிரச்சனைகளைக் குறைக்க முடியும் என்று கூறியுள்ளனர். பல
ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருப்பினும் இந்நோயைத் தடுக்க சிறந்த முறைகள் எதுவும்
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கலவைப்
பொருட்கள் (%)
|
ஆரம்பம் |
வளரும்
போது |
இறுதியில் |
வெள்ளைச் சோளம் |
34.7 |
30.9 |
31.6 |
கோதுமை |
36.0 |
30.0 |
30.0 |
இறைச்சி மற்றும் எலும்புத் துகள்
(55%) |
10.3 |
10.0 |
10.1 |
சோயாபீன் தூள் (45%) |
3.2 |
- |
- |
சூரியகாந்தித் தூள் (32 %) |
9.9 |
8.6 |
6.7 |
பருத்தி விதைகள் |
2.9 |
- |
- |
மில்ரன் |
- |
15.0 |
15.0 |
லியூசர்ன் தூள் |
- |
2.9 |
1.1 |
சுண்ணாம்புக்கல் |
1.8 |
1.5 |
1.5 |
உப்பு |
0.28 |
0.21 |
0.20 |
டிஎல் மெத்தியோனைன் |
0.23 |
0.19 |
0.17 |
எல் லைசின் ஹெச்சிஎல் |
0.23 |
0.17 |
0.11 |
விட்டமின் மற்றும் தாதுக் கலவை |
0.50 |
0.50 |
முட்டை உற்பத்தி மேலாண்மை
ஈமு பறவை 20-24வது மாத வயதில் இனப்பெருக்கம் செ்யய ஆரம்பிக்கும்.
பருவத்திற்க வந்த ஜோடியற்ற பறவைகளனைத்தையும் ஒரு கொட்டிலுக்குள் விட்டுவிடவேண்டும்.
பொதுவாக அவைகளே தங்களுக்கேற்ற ஜோடியைத் தோந்தெடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு வருடமும்
டிசம்பர் / ஜனவரி மாதங்களில் இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும். ஜோடியற்ற பறவைகள் ஒரு
ஜோடியை மட்டும் கூண்டுக்குள் விட்டால் அவைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அல்லது
சரியாக இனச்சேர்க்கை செய்யாது. இது முட்டை உற்பத்தியைக் குறைப்பதோடு பறவைகளும்
ஒன்றையொன்று காயப்படுத்திக் கொள்ள நேரிடும்.
இவ்வாறு அவை ஜோடி சேர்ந்த பிறகு ஒவ்வொரு ஜோடியையும் தனித்தனிக்
கொட்டிலுக்குள் அடைத்துவிடவேண்டும். இனச்சேர்க்கை முடிந்த பின் வேண்டுமெனில்
அப்படியே விட்டு விடலாம் அல்லது அந்த ஜோடியைப் பிரிக்க விரும்பினால் பல பறவைகளைச்
சேர்த்து ஒரே கொட்டிலுக்குள் அடைத்தால் பிரிந்து விடும்.
ஜோடிகள் தனித்தனியாக இல்லாமல் ஒரே கொட்டகைக்குள் பல ஜோடிகள் இனச்சோ்க்கைக்கு
விடப்படும் வோது போதுமான இடவசதி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இது பறவைகள்
ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும். மேலும் ஆண், பெண் பறவைகளின்
விகிதம் சமமாக இருப்பது அவசியம்.
பெட்டைக் கோழிகள் ஏப்ரலில் முட்டையிட ஆரம்பித்து அக்டோபர் / நவம்பர் வரை
இடும். பெரும்பாலான கோழிகள் முட்டை சேகரிக்கும் போது அமைதியாகவே இருக்கும். எனினும்
சில கோழிகள் முட்டையை எடுக்க அனுமதிக்காது. அவை ஒன்றொடொன்று ஒட்டிக் கொண்டு தாக்க
வரலாம். எனவே அவைகளுக்குத் தெரியாமல் பின்பகுதி வழியே சென்று முட்டையை சேகரித்துக்
கொள்ளுவதே சிறந்தது.
எப்போதும் ஈமுக்களை முன்பகுதி வழியே அணுகுவது சிறந்ததல்ல. ஏனெனில் அவை
பயந்தால் உதைக்கவோ, அலகினால் கொத்தவோ செய்யும். பறவையிடமிருந்து 1 மீட்டர்
தொலைவிலேயே நின்று கொள்ளவேண்டும்.
அடைகாத்தல்
இயற்கையாகவே அல்லது செயற்கை முறையிலோ அடைகாக்கலாம். எனினும் இப்போது பரவலாக
செயற்கை முறையே பின்பற்றப்படுகிறது.
இயற்கை முறை அடைகாப்பு
இயற்கை முறையில் பெட்டைக் கோழிகள் முட்டையிட ஆரம்பித்த பிறகு ஆண் கோழிகள்
முட்டை மீதமர்ந்து அடைகாக்கின்றன. முட்டைகள் கொட்டகை முழுவதும் ஆங்காங்கு இடப்பட்டு
இறுதியில் முட்டையிடும் காலம் முடிந்த பிறகு, கூடு போன்ற அமைப்பு தயாரிக்கப்பட்டு
அதில் அடைகாக்கப்படுகிறது. சிதறிக் கிடக்கும் முட்டைகளை புற்கள், இலைகள், குச்சிகள்
மூலம் ஆண் கோழ எதிரிகளின் பார்வையிலிருந்து மறைத்துக் கூட்டிற்கு எடுத்து வந்து அடை
காக்கும்.
அடைகாக்கும்
கோழி
ஈமு பறவைகளில் ஒரு முட்டைக்குப் பின் அதிக நாள் இடைவெளி விட்டு மெதுவாகவே
முட்டையிடுகின்றன. இரண்டு நாளுக்கு ஒரு முறை முட்டை அதிகமாக இடும். 6-10 முட்டைகள்
வரை இட்டபின் ஆண் கோழிகள் அதன் மீதமர்ந்து அடைகாக்க ஆரம்பிக்கும். பின்பு இடப்படும்
முட்டைகளையும் உருட்டி வந்து இந்த அடைகாக்கும் முட்டைகளோடு சேர்த்துவிடும். அனைத்து
முட்டைகளையும் சேர்த்த பிறகு, ஆண் கோழி எங்கும் செல்லாமல், நீர், தீவனம்
எதுவுமின்றி நீண்ட நேரம் முட்டை மீதே அமர்ந்து இருக்கும். மற்ற பறவைகளை கொட்டிலை
விட்டு நீக்கி விடுதல் அவைகள் ஒன்றொடொன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும்.
முட்டை பாதுகாப்பாகவும் இருக்கும்.
ஆண் கோழி அடைகாக்க ஆரம்பித்த 56வது நாளில் குஞ்சுகள் பொரிக்கும். எனினும்
50ம் நாளிலிருந்தே ஏதேனும் குஞ்சுகள் பொரித்திருக்கிறதா என்று தினமும் பார்த்துக்
கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கும் போது ஆண் கோழிய மெதுவாக சிறிது உயர்த்தி
முட்டைகளின் நிலையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குஞ்சுகளை குஞ்சு வளர்ப்பகத்தில் வளர்ப்பதாக இருந்தால் குஞ்சுகள்
பொரித்தவுடன் அவற்றை வளர்ப்பதற்திற்கு எடுத்துச் சென்று விடவேண்டும் அல்லது ஆண்
கோழியுடன் சேர்த்து விட்டு விடுவதாலக இருந்தால் பொரிக்காத முட்டைகளை
அகற்றவிடவேண்டும். குஞ்சுகள் சிறிது வளரும் வஐர வளர்ப்பகத்தில் வைத்து கழுகு,
காகம், நரி போன்றவற்றிடமிருந்து பாதுகாப்பாக வளர்ப்பதே சிறந்தது.
இயற்கை முறை குஞ்சு பொரிப்பில் அதிக அளவு இடம் தேவைப்படுகிறது. மேலும்
இவ்வாறு செய்வதற்கு முன் இதைப்பற்றி போதிய விவரங்களை வளர்ப்பாளர்
அறிந்திருக்கவேண்டும்.
மேலும் இயற்கை முறையில் ஈரமான சூழ்நிலைகளில் பாக்டீரிய தொற்று ஏற்பட
வாய்ப்புள்ளது. அதோடு ஆரம்பத்தில் இடப்பட்ட முட்டைகள் நான்கைந்து வாரங்கள்
வெப்பநிலை மாற்றத்திற்கு உட்பட்டு இரவின் குளிர்ந்த வெப்பநிலையால் கரு இறந்து விட
நேரிடலாம். இது போன்ற காரணங்களால் இயற்கை முறையில் குறிப்பிட்ட அளவு இழப்பு
ஏற்படும்.
செயற்கை முறையில்
அடைகாத்தல்
செயற்கை முறையில் ஒரு நாளின் காலை, மாலை இரண்டு முறை முட்டையை சேகரித்து
அடைகாப்பானில் வைக்கப்படுகிறது. சேகரித்த முட்டைகளை தொற்று நீக்கிக் கொண்டு சுத்தம்
செய்து குளிர்ந்த அறை வெப்பநிலையில் அதாவது 10-16 டிகிரி செ 10 நாட்கள் வரை
வைக்கவேண்டும். ஒவ்வொரு குழு முட்டைகளாக குறிப்பிட்ட இடைவெளியில் (10 நாட்கள்
இடைவெளி) அடைகாத்தல் வேண்டும்.
ஈமு கோழியின் முட்டைகளுக்கென தனி அடைகாப்பான்கள் உள்ளன. மேலும் கோழியின்
அடைகாப்பானையே சிறிது பெரியதாக மாற்றியும் ஈமு முட்டைகளைப் பயன்படுத்தலாம். குளிர்
வெப்பநிலையிலிருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு எடுத்து வந்து 12-18 மணி நேரம்
வைத்துப் பின்பு தான் அடைகாப்பானுக்கு மாற்றுதல் வேண்டும். அடைகாப்பானில்
35.25-35.5 டிகிரி செ (ஒளிர் விளக்கு) ஈரப்பதம் 45-50 % (குளிர் / ஈர விளக்கு)
இருக்குமாறு 50 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
செயற்கை முறையில் அடைகாக்கப்படும் முட்டைகள்
நாளொன்றுக்கு 3 முறை முட்டையைத் திருப்பி விடுதல் வேண்டும். இதை நாமாகவோ
அல்லது அடைக்காப்பானின் தானியக்கித் திருப்பி மூலமாகவோ செய்யலாம். இவ்வாறு செய்வதன்
மூலம் கரு ஓரிடத்தில் தங்கி ஓட்டுடன் ஒட்டிக் கொள்வதைத் தடுக்கலாம்.
50வது நாள் முட்டைகள் சுத்தமான தனித்த குஞ்சு பொரிக்கும் தளத்திற்கு
மாற்றப்படுகின்றன. அங்கு 35 டிகிரி செ வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்
பின்பற்றப்படுகிறது.
இந்த ஈரப்பதம் உள்ளே உள்ள சவ்வு ஈரமடைந்து முட்டையின் ஓட்டை இளக்குவதால்
முட்டை பொரிப்பதற்கு ஏதுவாகிறது. இந்த சமயத்தில் முட்டையைத் திருப்பி
வைக்கக்கூடாது.
ஈமு முட்டைகளும் பிற பறவைகளின் முட்டைகளைப் போல் பாக்டீரியத் தொற்றால்
பாதிக்கப்படும். எனவே தகுந்த தொற்று நீக்கும் புகையூட்டிகளைப் பயன்படுத்தி
முட்டைகளை சேகரித்த உடனே சுத்தம் செய்யவேண்டும். காலியான உள்ள அடைகாப்பான்,
பொரிப்பகம் போன்றவைகளயும் அந்த புகையூட்டி மூலம் தொற்று நீக்கம்
செய்யலாம்.
செயற்கை முறை அடைகாப்பான்கள் இதற்காகவே தயாரிக்கப்பட்டவை. கீழ்க்கண்ட
தவறுகளால் மட்டுமே அதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. அவை
- முட்டைகள் சரியாக சேகரிக்கப்படாமலோ, தொற்று நீக்கம் செய்யப்படாமலோ குளிர்
வெப்பநிலையில் வைக்கப்படாமலோ இருந்தால்
- வெப்பநிலை மற்றும ஈரப்பதம் சரியான அளவு பயன்படுத்தப்படாவிடின்
- அடைகாப்பான், குஞ்சு பொரிப்கம் சரியாகச் சுத்தம்
செய்யப்படாவிடின்
முட்டையானது உயிருள்ள ஒரு பொருள் அது தூய புதிய ஆக்ஸிஜனை அதன் ஓட்டின் வழியே
எடுத்துக் கொண்டு கார்பன் மோனாக்ஸைடு வாயுவை வெளியேற்றுகிறது. எனவே தினமும்
தவறாமல் போதுமான அளவு தூய காற்று அடைகாப்பானுள்ளும், குஞ்சு பொரிப்பகத்திற்குள்ளும்
காற்று செலுத்தப்படவேண்டும். இதற்கு அடிக்கடி அதனைத் திறந்து மூலமாகவோ, செயற்கைக்
காற்றோட்ட விசிறியைப் பொருத்துவதன் மூலமோ காற்று கிடைக்கச் செய்யலாம்.
அடைகாத்தல்
அடைக்காப்பானில் பொரிக்கவைக்கப்படும் குஞ்சுகள் 6 வார வயது வரை
அடைகாக்கப்படுகிறது. தட்பவெப்பநிலையைப் பொறுத்து இக்காலம் மாற்றி அமைக்கப்படலாம்.
வெப்பநிலை மிதமானதாக இருந்தால் ஓரிரு வாரங்கள் ஆன குஞ்சுகளை சிறிது வெளியே உலவ
அனுமதிக்கலாம். பறவையை அடைகாக்கும் இடத்திற்கு எடுத்து வருமுன் மஞ்சள் கரு அல்லது
தொப்புள் கொடியை ஏதேனும் நோய் தாக்கியுள்ளதா என்பதை சோதித்து அறிந்து
கொள்ளவேண்டும். அயோடின் பயன்படுத்துவது சிறந்தது.
செயற்கை அடைகாப்பு முறையில் குஞ்சுகளுக்கு கீழ்க்கண்ட தேவைகள் பூர்த்தி
செய்யப்படவேண்டும்.
- வெப்பம்
- நீர்
- உணவு / தீவனம்
- காற்றோட்டம்
- ஒளி
- கூளம்
வெப்பம்
சரியான அளவு இடத்தில் சரியான வெப்பநிலையில் குஞ்சுகள் அடைகாக்கப்படவேண்டும்.
குஞ்சுகளின் வெப்பநிலை ஏற்றுக் கொள்ளும் திறனே இதை அறிய சிறந்த வழிகாட்டி. அதிக
மற்றும் குறைந்தளவு வெப்பநிலையை அளவிட ஒரு வெப்பநிலைமானி பொருத்தப்படவேண்டும்.
இவ்வெப்பநிலைமானி அடைகாக்கும் வீட்டின் வெப்பநிலை மாற்றங்களை குறிப்பாக இரவில்
ஏற்படும் மிகக்குறைந்த வெப்பநிலையை அளவிட உதவுகிறது. குஞ்சுகள் வளரும் போது
வெப்பநிலையைச் குறைத்து விடலாம். கீழ்க்கண்ட வெப்பநிலை அட்டவணை குஞ்சுகளுக்கு
அளிக்கவேண்டிய வெப்பத்தை அதன் வயதிற்கு ஏற்றாற் போல காட்டுகிறது.
செயற்கை
அடைகாப்பு முறை
வயது
(நாட்களில்) |
வெப்பநிலை
குஞ்சுகளுக்கு டிகிரி செல்சியஸில் |
1-7 |
30+ |
7-14 |
28 |
14-21 |
26 |
21-28 |
24 |
நீர்
பிறந்த குஞ்சுகளுக்கு தண்ணீர்த் தொட்டியைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக
இருக்கும். இவ்வாறு தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் சில குஞ்சுகள் தாகத்தால் இறந்து
விடும். எனவே குஞ்சுகள் எளிதில் கண்டுணரக் கூடிய வகையில் நல்ல பளிச்சென்ற
நிறங்களில் நிறைய தண்ணீர்ப் பாத்திரங்கள் வைத்து அதில் எப்போதும் சுத்தமான
குளிர்ந்த நீர் நிரப்பி இருக்குமாறு பாாத்துக் கொள்ள வேண்டும்.
தீவனம்
முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு குஞ்சுகளுக்கு சிறிது சிறிதாக தீவனம்
அளிக்கவேண்டும். அப்போது தான் அவைகள் தீவனங்களை அலகினால் கொத்தி உண்ணப்பழகும். இளம்
பறவைகளுக்கு 18 சதவிகிதம் புரதம் நிறைந்த புதிய நல்ல தரமான தீவனமளித்தல் வேண்டும்.
இது நன்கு அரைக்கப்பட்டு, துகளாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இதோடு சிறிது
சிறிதாக நறுக்கப்பட்ட லுயூசர்ன், கிக்குயா போன்ற பசும் புற்களை கொட்டிலில்
தூவிவிடவேண்டும். ஈமுக்கள் புற்களின் பச்சை நிறத்தால் ஈர்க்கப்படுவதால் நன்கு
கொத்தி உண்ணும்.
காற்றோட்டம்
ஈமு குஞ்சுகள் நன்கு ஆரோக்கியத்துடன் வளர அவற்றின் நல்ல காற்றோட்டம்
அவசியம். குஞ்சுகள் எளிதில் குளிர்ந்து விடுவதால் எக்காரணம் கொண்டும் வறட்சியைத்
தாங்கிக் கொள்ளாது. சூடான காற்று வீசும் போது 300-450 செ.மீ உயரம் கொண்ட அடைப்புப்
பலகை ஒன்றைத் தயார் செய்து வைக்கலாம். குஞ்சு வளர வளர இப்பலகையின் தூரத்தை
அதிகப்படுத்தி உள்ளே நல்ல காற்றும் இடவசதியும் இருக்குமாறு செய்தல்
வேண்டும்.
ஒளி
இப்பறவைக்கேற்ற ஒளி அளிக்கும் முறை இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் ஒரு
முறையான ஒளி வழங்கப்படின் குஞ்சுகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. இது
இரவிலும் கூட குஞ்சுகள் கொட்டிலுக்குள் உலாவி நீர் மற்றும் தீவனத்தை எடுத்துக்
கொள்ளப் பயன்படுகிறது. 40 வாட்ஸ் விளக்கு அல்லது அதற்கு ஈடான் 50 லக்ஸ் ஒளித்திறன்
கொண்ட ஒளியை 23 மணி நேரம் கொடுப்பது நல்ல வளர்ச்சியைத் தருவதாகக்
கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் குஞ்சுகளுக்கு சிறிது இருட்டும் தேவைப்படும். இது
பறவைகள் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு இருப்பதால் மூச்சுத் திணறலைத் தவிர்க்க
உதவுகிறது.
கூளங்கள்
கூளங்கள் பயன்படுத்துவது பற்றி பலவகைக் கருத்துக்கள் நிலவுகின்றன. எனினும்
ஈமு கோழியில் பயன்படுத்தும் கூளமானது குஞ்சுகளின் (அனைத்துத் ) தேவைகளையும்
பூர்த்தி செய்யுமாறு இருக்கவேண்டும். அதற்கேற்றவாறு கூளம் சுத்தமானதாகவும்,
இராசயனங்களற்ற, மென்மையான, உறிஞ்சக்கூடிய துகள்கள் / தூசுகளற்றதாக இருக்குமாறு
பயன்படுத்தவேண்டும். பைன் மரத்துண்டுகளின் செதில்கள், மணல், மரத்துகள் போன்ற
பொருட்களை கூளங்களாகப்
பயன்படுத்தலாம்.
அடைகாப்பு முறைகள்
இரண்டு விதமான அடைகாக்கும் முறைகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதியில்
சூடுபடுத்தும் வகை பல அடைகாப்பான்கள் இவ்வகையைச் சார்ந்தவை. இதில் அகச்சிவப்பு
விளக்குகள், வாயு சூடாக்கிகள் அல்லது மின்சார சூடாக்கிகள் சூடேற்றப்
பயன்படுகின்றன.
அகச்சிவப்பு
அடைப்பான்கள்
இவை எளிமையானவை. முதலீடும் குறைவு அதோடு குறைந்த அளவு கவனமே போதும். 100
வாட்ஸ் கொண்ட இரு பல்புகள் குறைந்த எண்ணிக்கையிலான குஞ்சுகளுக்குப் போதுமானது.
இவ்விளக்குகளை கூளத்திற்கு மேல் 450-600 மிமீ உயரத்தில் பொருத்தவேண்டும். ஒரு
விளக்கு அணைந்து விட வாய்ப்புண்டு. எனவே எப்போதும் இரண்டு விளக்குகள்
பயன்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் ஒளி மற்றும் வெப்பம்
கடத்தக்கூடிய எதிரொளிப்பான் இருப்பது அவசியம். எனினும் இம்முறை குளிர்ப்
பிரதேசங்களில் வளர்க்கும் ஈமுக்களுக்கு சரியான பலனைத் தருவதில்லை.
இவ்வகை அடைகாக்கும் பகுதியில் சரியான பலனைத் தருவதில்லை. உயரத்தில்
காற்றோட்டத்திற்காக ஒரு திடப்பகுதியில் சூழப்பட்டு இருக்கும். அடைகாப்பான்
மூடியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் உள்ளே வெப்பநிலை சரியாக
பராமரிக்க முடியும். குளிர்க் காலங்களில் சற்று அதிக வெப்பநிலை அளிக்கப்படவேண்டும்.
அவ்வப்போது மூடியைத் திறந்து புதிய காற்று உள்ளே உலவச் செய்ய வேண்டும். இல்லையெனில்
ஆஸ்பெர்ஜில்லோசிஸ் காளான் நோய் பரவவிடலாம்.
வாயு
அடைப்பான்கள் மற்றும் மின்சார சூடாக்கிகள்
பெயருக்கேற்றார் போல் இம்முறையில் மின்சாரம் மூலமாகவோ, அகச்சிவப்புக்
கதிர்கள் மூலமோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெப்பமூட்டப்படுகிறது. இவை உருவத்திலும்
சூடேற்றும் திறனிலும் வேறுபடுகின்றன. அகச்சிவப்பு முறை போன்று தான் இம்முறையும்
பின்பற்றப்படுகிறது. எனினும் அகச்சிவப்பு விளக்கு முறையை விட சிறந்தது.
முழு
இடமுறை
இம்முறையில் அடைகாப்பான் முழுவதும் சீராக வெப்பப்படுத்தப்படுகிறது. இவ்வாறு
வெப்பப்படுத்த வாயுக்களையே மின்சாரம், எண்ணெய் அல்லது கெரசின் போன்ற பொருட்களையோ
பயன்படுத்தலாம். இவை அடைகாப்புக் கொட்டகையில் நிலையாகப் பொருத்தப்படுகிறது. ஒரு
குறப்பிட்ட வெப்பநிலை எல்லா இடங்களிலும் சீராகப் பரவி இருக்கவேண்டும். பொதுவாக அதிக
எண்ணிக்கையில் குஞ்சுகள் பொரிக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது. கொட்டகை முழுவதும்
நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஆஸ்பர்ஜில்லோசஸ் – நோய்
அறிவியல் பெயர் : ஆஸ்பர்ஜில்லஸ் ஃபிளேவஸ் இது
பிறந்த குஞ்சுகள எளிதில் பாதிக்கும் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. நோய்
முற்றும் போது தான் குஞ்சுகள் சுறுசுறுப்பின்றி சோர்ந்து காணப்படும்.
பாதிக்கப்பட்ட குஞ்சுகள் மூச்சு விடுவதற்கு சிரமப்படும். நெஞ்சு அடைத்துக்
கொள்வதால் வாய் வழியே மூச்சு விட ஆரம்பிக்கும். இதுவே நேர்ய முற்றிய நிலை. இதன்
பின் குஞ்சு இறந்து விடும். இறந்த குஞ்சுகளை சோதனைச் சாவடிக்கு அனுப்பி இந்நோயை
உறுதி செய்து கொள்ளலாம்.
ஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு
முறைகள்
ஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் வந்த பின்பு குணப்படுத்த
இயலாது. ஆகையால் வருமுன் காப்பது சிறந்தது. அதற்கு 3 முக்கிய முறைகள்
பின்பற்றப்படவேண்டும். அவை
பூஞ்சை
/ காளான் வளர்தளத்தை நீக்குதல்
ஈரமான, பூஞ்சை படர்ந்த வைக்கோல், கூளங்கள் மரத்துகள்கள் போன்ற பொருட்களை
அடிக்கூளமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதே போல் கெட்டுப் போன, தீவனங்களையோ
அசுத்தமடைந்த நீரையோ பறவைகளுக்கு கொடுக்கக்கூடாது.
அடை
காக்கும் இடத்தில்
தூசுகளை நீக்குதல்
அடைகாக்கும் இடம் இளஞ்குஞ்சுகளின் கொட்டகைக்கு அருகில் இருப்பதால் அங்கு
எந்தவிதத் தூசிகளுமின்றிப் பராமரித்தல் அவசியம்.கீழே கிடக்கும் கூளங்களை
எடுப்பதாலோ, நீக்கும் போதோ நிறையத் தூசிகள் மேலெம்புகின்றன. எனவே கூளங்களை சற்று
அழுத்திப் போடுதல் நல்லதாகும்.
நல்ல கூளங்களைப் பயன்படுத்துவதும் பலன் தரும். பைன் மரத்துகள் செதில்கள்
போன்றவற்றைக் கூளமாக உபயோகிக்கலாம். மிகவும் தூளாக உள்ள கூளங்கள் எளிதில் தூசியாக
மாறிவிடுவதால் பிரச்சனை ஏற்படுத்தும்.
சுகாதாரம்
அடைகாக்கும் போதிலிருந்தே முறையான சுகாதார நடவடிக்கைகள் எடுப்பதும்
இந்நோய்ப் பரவரைத் தடுக்க உதவும்.முட்டைகள் சரியான தொற்று நீக்கிக் கொண்டு
முட்டைகள் கழுவியோ, புகையூட்டியோ சுத்தப்படுத்தலாம். அதே போல் அடைகாப்பான் குஞ்சு
பொரிப்பகம் போன்றவையும் சுத்தப்படுத்தப்படவேண்டும்.
குளுட்டரால்டிஹைடு, ஏன்டெக் விக்ரான் எஸ் மற்றும் ஏன்டெக் ஃபார்ம் ஃபுளூயிட்
எஸ் போன்ற தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தி இனப்பெருக்கப் பருவத்திற்கு சற்ற முன்னரே
கொட்டில்களையும் தூய்மை செய்து விடுதல் நல்லது.
நுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல்
(சால்மோனெல்லோசிஸ்)
இந்நோய் சால்மோனெல்லா என்னும் பாக்டீரிய வகையினால்
பரவுகிறது. அறிகுறிகள்
-
இந்த நோய் முதிர்ந்த பறவைகளிலும் ஏற்பட்டாலும் குஞ்சுகளைப் போல் இவற்றில்
பாதிப்பு அதிகமில்லை. முட்டைகளையும் இந்நோய் தாக்குகிறது.
-
இந்நோயில் இறப்பு விகிதம் அதிகம். குஞ்சு பொரித்த 2-3 நாட்களில்
பாதிக்கப்பட்ட குஞ்சுகள் இறக்க ஆரம்பிக்கும். இது 3 வாரங்கள் வரை தொடரும்.
பாதிக்கப்பட்ட குஞ்சுகள் சோர்ந்து, தலையைத் தொங்கவிட்டபடி எங்கும் செல்லாமல்
ஓரிடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும். அவை தீவனம் உண்ணாது. ஆனால் நீர் அதிக
அளவு அருந்தும். நீர்ம நிலையில் வயிற்றுப் போக்கு இருக்கும். கண் குருடாதல் /
பாதிக்கப்படுதல், மூட்டில் பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற அறிகுறிகளும் காணப்படும்.
மேலும் பாராடைபாய்டு காய்ச்சல் ஏற்படுவதும் உண்டு.
-
இறந்த கோழிகளை சோதனைச் சாவடிக்கு அனுப்பி இந்த பாக்டீரிய நோய்த் தாக்கத்தை
உறுதி செய்து கொள்ளலாம்.
சிகிச்சைகள்
எதிர்ப்பொருள் சிகிச்சை அளிக்கலாம். நைட்ரோ ஃபியூரான் மருந்துகள்
அளிக்கப்படலாம். எனினும் அவை சிறிது நேரத்திற்கே ஆறுதல் தரும். சோதனைச்
சாவடியிலிருந்து மாதிரிகளின் முடிவை வாங்கி கால்நடை மருத்துவர் உதவியுடன் தகுந்த
மருந்தை அளிப்பதே சிறந்தது.
நோய் அதிகம் பரவும் வாய்ப்புள்ள இடங்களான தொற்று நீக்கி கொண்டு
சுத்தப்படுத்துதல் வேண்டும்.
-
ஃபார்மால்டிஹைடு வாயுக்கொண்டு தினசரி சேகரிக்கும் முட்டைகளை புகையூட்டம்
செய்யவேண்டும்.
-
கரைசல் கெர்ணடு கழுவுவதை விட புகையூட்டம் செய்வதே சிறந்தது. ஏனெனில் 43-49
டிகிரி செ வெப்பநிலையில் ஒரு தொற்று நீக்கக் கரைசல் கொண்டு கழுவும் போது ஓடுகள்
ஈரமாக்கப்படும். பின்பு உடனே சூடான காற்று கொண்டு முட்டையை உலர்த்த வேண்டும்.
முட்டை ஓட்டின் உட்சவ்வுகள் சுருங்குவதற்கு வாய்ப்புள்ளது.
-
கைகள் மூலமாகவும் பாக்டீரியாக்கள் எளிதில் பரவக்கூடும். எனவே முட்டைகளைக்
கையாளும் போது கையுறை அணிந்து கொள்வது சிறந்தது.
-
பொரிப்பகத்தையும் விரிக்கான் எஸ் வாயு
ஃபாாமால்டிஹைடு அல்லது ஆர்த்தோசான் குளூட்டரால்டிஹைடு போன்ற தொற்று நீக்கிகள்
கொண்டு ஒவ்வொரு குழு குஞ்சு பொரிப்பு முடிந்தவுடன் பொரிக்காத முட்டைகளையும்,
ஓடுகளையும் அகற்றிவிட்டு சுத்தம் செய்தல் அவசியம்.
-
குஞ்சுகள் இறக்க ஆரம்பித்த உடனே சோதனைச் சாலைக்கு அனுப்பி நோயினை தெரிந்து
கொண்டு அதற்கேற்ப மருந்து கொடுத்தல் அவசியம்.
-
எதிர்ப்புப் பொருள் அளிக்கும் சிகிச்சையைக் குஞ்சுகளுக்கு நோய்பரவுவதற்கு
முன்பே செய்தல் நலம்.
தொடரும்.... Engr.Sulthan |
No comments:
Post a Comment