மழை சீசனை, மலேரியா சீசன் என்பர். மழைக்கால மலேரியாவைத் தடுக்க, லெமன் கிராஸ் எண்ணெய்யைப் பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனை கேரளாவில் புல் தைலம் என்பர். இந்த எண்ணெய் நம் நுரையீரலையோ, சுற்றுச்சூழலையோ பாதிக்காது.
எலுமிச்சை மணமுள்ள ஒரு புல்லில் இருந்து எடுக்கப்படுவதே, லெமன் கிராஸ் எண்ணெய். இதனை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து படுக்கையறைகளில் ஸ்பிரே செய்தால், கொசு வராது. கேரளா மற்றும் தமிழகத்தின் மலைவாசஸ் தலங்களில் லெமன் கிராஸ் ஆயில் கிடைக்கும். தமிழகத்தில் கெமிக்கல் கடைகளில், லெமன் கிராஸ் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது. மழைக்காலத்தில் இது அதிகளவு விற்பனையாகும். லெமன் கிராஸ் ஆயிலை துணி துவைக்கும் பவுடர் மற்றும் பாத்திரம் துலக்கும் பவுடரிலும் கலக்குவர்.
No comments:
Post a Comment