Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, January 18, 2014

ஏவியானிக்சில் உலக சாதனை



உலகிலேயே மிக சிறந்த, குட்டி உளவு விமானத்தை கண்டுபிடித்த தமிழன், செந்தில் குமார்: நான், சென்னையில் உள்ள, எம்.ஐ.டி., பொறியியல் கல்லுாரியில், இணை பேராசிரியராக பணியாற்றுகிறேன்.

ஏவியானிக்ஸ் எனும், வான் பயண மின்னணுவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை ஒன்றிணைக்கும் விதமாக, தக்ஷா என்ற குழுவை, கல்லுாரியில் உருவாக்கினோம்.இக்குழுவில்உள்ள மாணவர்களின், பல நாள் முயற்சிக்கு பின், ஆட்கள் இல்லாமலே பறக்கும், 1.8 கிலோ எடையுள்ள, ஒரு குட்டி விமானத்தை உருவாக்கினோம். அதன் அடிபாகத்தில், கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் பொருத்தினோம். ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த விமானம், வானத்தில் பறந்தபடியே, போட்டோ, வீடியோ எடுத்து அனுப்பினால், கீழே உள்ள, லேப்டாப்பில் பார்க்கும் வசதி உள்ளது.இவ்விமானத்தை நில அளவீடுகள், விண்வெளி, புவியியல் ஆராய்ச்சி, ராணுவம், இயற்கை பேரிடர், கலவரம் மற்றும் மக்கள் நெரிசலை கண்காணிக்க என, பலவற்றிற்கு பயன்படுத்தலாம்.அண்மையில், ஒரு நினைவு நாள் நிகழ்ச்சியின் போது, மதுரையில் பதற்றம் நிலவியது. அப்போது, நாங்கள் உருவாக்கிய ஆளில்லா குட்டி உளவு விமானம் மூலம், போலீசார் எளிமையாக கண்காணித்து பதற்றத்தை தணித்தனர். 2012ல், அமெரிக்க ராணுவத்தின் அங்கமான, டார்பா ஆளில்லா விமானங்களுக்கான, சர்வதேச போட்டியை நடத்தியது.மொத்தம், 150 நாடுகளுடன் போட்டியிட்டு, ஆறு நாடுகள் பங்கேற்கும் இறுதி சுற்றுக்கு முன்னேறினோம். 150 அடி உயரமுள்ள மரங்களுக்கு இடையில், எங்களை விட்டு விட்டு, 5 கி.மீ., தொலைவில் உள்ள சாலையில் நடக்கும் நிகழ்வுகளை, கீழே உள்ள லேப்–டாப்பில் காண்பிக்க கூறினர்.அமெரிக்க கடற்படை விமானம் உட்பட, மற்ற நாடுகளின் குட்டி விமானங்கள் கீழே விழ, எங்கள் விமானம், பேட்டரி தீரும் வரை, மேலேயே பறந்தது.மேலும், அமெரிக்க ராணுவத்தினர் கூறிய அனைத்தையும் சரிவர செய்து, உலகின்மிக சிறந்த குட்டி உளவு விமானம் என, அமெரிக்க ராணுவத்தின் டார்பா, சான்றுஅளித்து பாராட்டியது.

No comments:

Post a Comment