சவூதி அரேபியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைத்து நடத்துவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி சவூதி அரேபியா பொது முதலீட்டு பொறுப்புக் கழகத்தின் (SAGIA), உரிமம் பெற்ற வெளிநாட்டினர், பெட்ரோல் நிலையங்கள் அமைத்து நடத்துவதற்கு சவூதி அரேபியா அரசாங்கம் அனுமதி வழங்கும்.
சாலையோரங்களில் உணவகம் நடத்தவும் சவூதி அரேபியா சுற்றுலா மற்றும் கலாச்சார ஆணையம் (SCTA) உரிமம் வழங்கும்.எண்ணை எடுத்தல் மற்றும் எண்ணை உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழில்கள் தவிர மற்ற தொழில்களில் வெளிநாட்டினர் முதலீட்டு செய்வதை சவூதி அரேபியா அந்நிய நேரடி முதலீட்டு சட்டம் அனுமதிக்கும்.50 சதவிகிதம் முதலீட்டுத் தொகை சவூதி அரேபியா தொழில் வளர்ச்சி நிதியும் கடனாக வழங்கும். முதலீட்டிற்கு உட்பட்ட பணப் பறிமாற்றங்கள, கடன் கொடுக்கல், வாங்குதல், லாபம் போன்ற எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பெறுவதற்கோ, அனுப்புவதற்கோ, மாற்றுவதற்கோ தடை கிடையாது.தகவல் தி.ரஹ்மத்துல்லாநன்றி : கடையநல்லூர்.org
No comments:
Post a Comment