ஐந்து நிமிடங்களில் உலகம் அழிகின்றதாக அறிவிப்பு : அணு விஞ்ஞானிகளின் விழிப்புணர்வு எச்சரிக்கை Doomsday Clock
'Dooms Day Clock' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உலகம் எப்போதெல்லாம் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை விடுக்கும் முகமாக இந்த Doomsday Clock ஐ ஞாபகப்படுத்தி விடுகிறார்கள் அணு விஞ்ஞானிகள்.
1953ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையில் அணு ஆயுதச் சோதனை நடைபெற்ற போது 2 நிமிடங்களுக்கு Dooms Day Clock பொருத்தப்பட்டிருந்தது. 1963ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் என்பன தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பரிசீலிக்க ஒப்பந்தம் மேற்கொண்ட போதும், 1972ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் SALT, Anti-Ballastic ஒப்பந்தங்களை மேற்கொண்ட போதும், 1984ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் தமது அணுவாயுதங்கள் பாவணை தொடர்பிலான பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள முயற்சித்த போதும், 1991ம் ஆண்டு அமெரிக்கா - ரஷ்யா இடையிலான அணுவாயுதங்களை குறைப்பது தொடர்பிலான ஒப்பந்தங்கள் பயனின்றி போன போதும் இறுதியாக 2012ம் ஆண்டு, அணுவாயுதங்களை கட்டுப்படுத்த உலகத் தலைவர்கள் தவறவிட்ட போதும், காலநிலை மாற்றத்திற்கு முறையான விதத்தில் பதில் அளிக்கத் தவறிய போதும் இந்த Dooms Day Clock பொருத்தப்பட்டிருந்தது.
இம்முறை நேற்று நள்ளிரவு ஜனவரி (14) நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் Dooms Day Clock பொருத்தப்பட்டிருக்கிறது. அணுவாயுதங்கள் பயன்பாடு குறைப்பில் போதுமான நடவடிக்கை இன்னமும் எடுக்கப்படவில்லை, காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காது இருத்தல், சர்வதேச ரீதியில் நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்தல், புதிய தொழில்நுட்த்தின் ஆக்கிரமிப்பால் மனிதப் பண்பாடுகள் அழிவடைந்து வருதல் என்பவற்றை கண்டித்து இம்முறை Doomsday Clock பொருத்தப்பட்டிருக்கிறது.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் அணு விஞ்ஞானிகள் குழுவினரால் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. அதாவது நேற்று நள்ளிரவு 11.55 மணியிலிருந்து அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு Dooms Day Clock உலகெங்கும் இயங்கியுள்ளது. அதாவது அடுத்த ஐந்து நிமிடத்தில் உலகம் அழிந்துவிடப் போகிறது எனும் ஓர் போலியான பய உணர்ச்சியை வழங்கி இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்திட்டமே இந்த Doomsday Clock.

No comments:
Post a Comment