ஃபேஸ்புக்ல என்னதான் நீங்க கருத்தா, ஸ்டேட்டஸ்
போட்டாலும் அதிக லைக்ஸ் விழ மாட்டேங்குதா? டோன்ட் வொர்ரி! இதோ.. இந்த
ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க, நீங்க போடுற ஒவ்வொரு ஸ்டேட்டஸுக்கும் லைக்ஸ்
அள்ளும். ( பி.கு: இது முழுக்க முழுக்க, வளர நினைக்கும் மற்றும் வளர்ந்துவரும் ஃபேஸ்புக் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பொருந் தும்.)
முதல்ல, உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல களையெடுக்கணும். அதாவது... யார் ஒருவர் எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் 500-க்கு குறையாமல் லைக்ஸ் விழுதோ, அந்த ஆட்களை எல்லாம் நம்ம முதல்வர் மாதிரிக் கண்ணை மூடிக்கிட்டு அன்ஃப்ரெண்ட் பண்ணிடுங்க... ஏன்னா, அவங்களை மாதிரி ஆட்கள் உங்களை மாதிரி லைக்ஸ் குறைவா வாங்குற ஆட்களை மதிக்க மாட்டாங்க. லைக்ஸும் போட மாட்டாங்க... ஸோ முழுக்க முழுக்க வளர்ந்து வரும் கலைஞர்களாப் பார்த்து, அதாவது ஒரு நாளைக்கு மணி மணியா நாலு ஸ்டேட்டஸ் போட்டாலும் ஒரு ஸ்டேட்டஸுக்கு 10 லைக்ஸ் வாங்குறதுக்கே முக்கிக்கிட்டு இருக்கிற ஆட்களாபார்த்து ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல வெச்சிக்குங்க.. அவங்கதான் நமக்கு முக்கியம். அவங்க போடுற எல்லா ஸ்டேட்டஸ்களுக்கும் (எவ்வளவு கேவலமா இருந்தாலும் சரிதான்!) கண்ணை மூடிக்கிட்டு லைக்ஸ் போடுங்க. முடிஞ்சா நச்சுன்னு நாலு வரிக்கு மிகாமல் கமென்ட் போடுங்க. இதனால, அந்த சக கலைஞருக்கு உங்க மேல ஸ்பெஷல் அன்பு கூடும். இப்படி ஒரு 15 பேரை கரெக்ட் பண்ணி வெச்சுக்கிட்டீங்கன்னா போதும், உங்க ஒவ்வொரு ஸ்டேட்டஸ¨க்கும் குறைஞ்சது 10 லைக்ஸ் கிடைக் கிறது உறுதி
பல பேருக்கு அதிக லைக்ஸ் கிடைக்காமல் போறதுக்குக் காரணமே, நீங்க போட்ட ஸ்டேட்டஸ் நிறையப் பேர் கண்ணுல படாமல் போறதுதான். அதுக்காக நீங்க போடுற ஒவ்வொரு ஸ்டேட்டஸுக்கும் ஊர்ல உள்ள எல்லோரையும் டேக் பண்ணிவிடுறதோ, இல்லை 'ஸீ மை ஸ்டேட்டஸ்’னு மெசேஜ் பாக்ஸ்ல போய் கெஞ்சுற வேலையையோ வெச்சுக்காதீங்க. அப்புறம் விழுற அஞ்சாறு லைக்ஸுக்கும் ஆப்பு விழுந்துடும். ஸோ, நீங்க என்ன பண்றீங்கன்னா, ஸ்டேட்டஸ் போடுறதுக்கு முன்னாடி, உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிறவங்கள்ல யார் யாரெல்லாம் இப்போ ஆன் லைன்ல இருக்காங்கனு ஒரு தடவை வேவு பார்த்துடுங்க. அப்படி ஆன் லைன்ல இருக்கிறவங்க ப்ரொஃபைல்கள் ஒவ்வொண்ணா பொறுமையா ஓப்பன் பண்ணி, கண்ணை மூடிக்கிட்டு வரிசையா லைக்ஸ் போட்டுவிடுங்க. இதுக்கப்புறம் நீங்க ஸ்டேட்டஸ் போட்டீங்கன்னா, அவங்க எல்லோருடைய ஹோம்பேஜ்லேயும் முதல் வரிசையில் உங்க ஸ்டேட்டஸ் போய் நிக்கும். அவங்களுக்கும் கொஞ்சமாவது மனசுல ஈரமும் நன்றிக் கடனும் இருந்தா, உங்க ஸ்டேட்டஸுக்குக் நிச்சயம் லைக் போடுவாங்க.
அப்புறம் நீங்க எப்பல்லாம் வெட்டியா இருக் கீங்களோ, அப்பல்லாம் ஆன் லைன்ல இருக்கிற ஒவ்வொருத்தரையும் மிஸ் பண்ணா மல் நலம் விசாரிச்சு, 'ஃபேஸ்புக்ல எனக்கு கிடைச்ச ஒரே உண்மையான ஃப்ரெண்ட் நீங்க மட்டும்தான். தேங்க் காட்!’னு ஒருத்தர் விடாமல் காப்பி பேஸ்ட் போட்டு அடிச்சு விடுங்க.
'ஓப்பனிங் நல்லா இருந்துச்சுப்பா... ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த பத்து நிமிஷத்துல அஞ்சாறு லைக்ஸும், ரெண்டு மூணு கமென்ட்ஸ்கூட வரிசையா வந்து விழுந்துச்சு. அதுக் கப்புறம் '18 ஹவர்ஸ் எகோ’ ஆகியும் எக்ஸ்ட்ராவா ஒரு லைக்கூட விழலை’னு கவலைப்படுறீங்களா? கவலைப்படாதீங்க. இப்ப அந்த ஸ்டேட்டஸ்ல நீங்களே ஒரு ஸ்மைலி பொம்மையை கமென்ட்டா போட்டு விடுங்க. இல்லைனா, அந்த ஸ்டேட் டஸுக்கு வந்திருக்கிற கமென்ட் களுக்கு நீங்க லைக் போட்டிருப்பீங்க இல்லையா? அதுல ஏதாவது ஒரு கமென்ட்டுக்குப் போட்ட ஒரு லைக்கை மட்டும் அன்லைக் பண் ணிட்டு திரும்பவும் லைக் போட்டு விடுங்க. இப்ப அந்த ஸ்டேட்டஸ் திரும்பவும் 'உலகம் சுற்றும் வாலிபன்’ எம்.ஜி.ஆர் மாதிரி திரும்ப ஃப்ரெஷ்ஷா ஃபேஸ்புக்கை ஒரு ரவுண்ட் சுத்தி வரும். லைக்குகளும் கிட்டும். இது ஃபேஸ் புக்கைக் கண்டுபிடிச்ச மார்க் ஸ¨க்கர் பெர்க் குக்கே தெரியாத ஆல் நியூ ஐடியா.
சரி, குறைந்தபட்ச லைக்ஸ் களுக்கு உத்தரவாதம் ரெடி பண்ணி யாச்சு... என்ன ஸ்டேட்டஸ் போடு றதுனு யோசிக்கிறீங்களா? அது ரொம்ப ரொம்ப ஈஸி பாஸ். கையில, ஒரு நியூஸ் பேப்பர் எடுங்க, கண்ணை மூடிக்கிட்டு ஒரு பக்கத்தை ஓப்பன் பண்ணுங்க. அங்கே, ஏதாவது ஓர் அரசியல் தலைவர் உங்களுக்காகவே ஏதா வது வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியிருப்பார். அதை அப்படியே டைப் பண்ணி, அதுக்கு கீழே ஒரு # சிம்பள் போட்டு பக்கத்துல ஒரு வடிவேல் அல்லது சந்தானம் டயலாக்கைப் போட்டுவெச்சீங்கனா, ஒரு ஸ்டேட்டஸ் ரெடி. உதாரண மாக...
பொறுமைக்கும் எல்லை உண்டு - கலைஞர்
# பீ கேர்ஃபுல்! நான் என்னைச் சொன்னேன்...
இவ்வளவுதான் சூடான ஒரு அரசியல் ஸ்டேட்டஸ் ரெடி. மேட்டர் ஃபினிஷ்! இப்போ இந்த யாவாரம் தான் ஃபேஸ்புக்ல ஓடிக்கிட்டுருக்கு.
'அட போப்பா..! கேவலம் நாலு லைக்ஸ் வாங்குறதுக்காக இவ் வளவு தில்லாலங்கடி வேலைகள் பண்ணனுமா?’னு கேட்குறீங் களா? உங்களுக்கு அந்த போதை பிடிக்கலையா? ரொம்ப நல்ல விஷயம், ஒழுங்கு மருவாதியா ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை கேன்சல் பண்ணிட்டு வேற வேலை யைப் பாருங்க!

Truth.
ReplyDelete