சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தாததால் தான் மாதாந்திர செலவு அளவு எகிறுகிறது. பின்வரும் விஷயங்களில் கவனமாக இருங்கள்...
• தேவையில்லாத கட்டணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக உங்கள் வங்கி ஏ.டி,எம் களிலிருந்து பணம் எடுப்பதைத் தவிருங்கள். உங்கள் வங்கி ஏ.டி.எம் சேவைக்கு கட்டணம் வசூலித்தால் அது போன்ற கட்டணம் இல்லாத கணக்குக்கு மாறுங்கள் அல்லது வங்கியை மாற்றுங்கள்.
• உங்கள் வீட்டுக்குள் கடன் வாங்கியிருந்தால் வட்டி விகிதத்தை குறைக்கும் திட்டங்களுக்கு உங்கள் கடனை மாற்ற முடியுமா என்று பாருங்கள்.
• கிரெடிட் கார்டு பில், வங்கி ஸ்ரேட்மென்ட் போன்றவற்றை அப்படியே குப்பையில் போடாதீர்கள். பின்னால் கணக்கு வழக்குத் தெரியாமல் குழம்புவீர்கள். அவற்றை தனித்தனி பைல்களில் குறிப்பிட்ட காலம் வரை போட்டு வையுங்கள்.
• உங்களுக்கு தேவையில்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்தை அடைத்து கொண்டிருக்கும் பழைய சாமான்களை விறு விடுங்கள். தற்போது இணையதளங்கள் மூலமும விற்கலாம்.
• உபயோகப்படுத்தாத நேரங்களில் விளக்குகளை அணையுங்கள்.
• உங்கள் வீட்டில் டெலிவிஷனுக்கு கேபிள் இணைப்புக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்று கணக்குப் பாருங்கள். 100 சேனல்களை வைத்துக் கொண்டு சில சேனல்களை மட்டும பார்த்து கொண்டிருந்தால் குறைந்த பட்ச திட்டத்திற்கு உங்கள் இணைப்பை மாற்றி பணத்தை மிச்சப்படுத்துங்கள்.
• செல்போனில் குறைவாகப் பேசுங்கள். குறிப்பாக எஸ்.எம்.எஸ். அனுப்பும் முன் எவ்வளவு கட்டணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். சில டிவி சேனல்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களின் கட்டணம் அதிகம்.
• விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் முன் அதன் விலை விவரங்கள், சலுகை மற்றும் தள்ளுபடிகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து எந்த கம்பெனியில் குறைவான விலை என்று பார்த்து வாங்குங்கள். இதற்கு உதவும் இணைய தளங்களில் வாடிக்கையாளர்களின் கருத்துக்களும் இருப்பதால் நிறுவனங்களின் சேவை தரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
• கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்கும் போது சலுகைகள் மற்றும் கூடுதல் வசதிகள் தரும கார்டுகளை வைத்துக கொள்வது நல்லது.
• பசியுடன் இருக்கும் போது ஷாப்பிங் செய்யாதீர்கள். கண்ணில் படும் அத்தனை சாப்பாடு பொருட்களையும் வாங்க தோன்றும்.
• கிரெடிட் கார்டு பில் தொகையை மொத்தமாகச் செலுத்த முடியவில்லை என்றால், அதை மாதாந்திர தவணைத் தொகையாகப் பிரித்துச் செலுத்தலாம். இந்த வசதியை பல வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அளிக்கின்றன. மேலும் பல வசதிகளையும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்குகின்றன.
விசாரித்துப் பார்த்தால் தெரியும். கிரெடிட் கார்டை பயன்படுத்தத் தொடங்கும் முன், அதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள், அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திடம் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். பின்னர், 'எனக்கு இந்த விஷயம் தெரியாது, எனவே இந்தக் கட்டணம் விதிக்கக் கூடாது' என்று கூற முடியாது.
• பழைய விஷயமாக இருந்தாலும், எப்போதும் மாறாதது, 'சம்பளம் வாங்கியதும் நிதி ஆலோசனை முதல் செலவாக சேமிப்பை வைத்துக்கொள்வது'. சம்பளத்திலிருந்து பணத்தை நேரடியாக சேமிப்பில் போடுங்கள்.
தெரிந்தவர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்று ஒன்றில் இறங்காமல், நன்கு விசாரித்து, நல்ல முதலீட்டு ஆலோசகர்களிடம் கேட்டுத் தெரிந்து முதலீட்டில் இறங்குங்கள்.
கவனமாகவும், முறையாகவும் மேற்கொண்டால், 'மண்' பொன்னாக கொட்டிக் கொடுக்கும். ஆம், ரியல் எஸ்டேட் முதலீட்டைத்தான் கூறுகிறோம். புத்திசாலித்தனமான முதலீடுகளை இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, உங்கள் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கிக் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment