Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 2, 2013

சத்துப்பட்டியல்: புளி


பெரும்பாலான குழம்புகளில் புளி சேர்க்கப்படுவதில் இருந்து அதன் மகத்துவத்தை உணரலாம். உணவுப் பொருட்க ளுக்கு புளிப்பு சுவையுடன், நறுமணமும் தரும். கெட்டுப்போகாமல் இருக்கவும் உதவும். இதிலுள்ள அத்தியாவசிய சத்துக்களை பார்க்கலாம்... 


* ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல பயிர் புளி. தெற்கு ஆசியாவில் அதிகமாக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. புளிய மரம் 80 அடி உயரம் வரை வளரும். வெவ்வேறு நீளங்களில் காய்கள் காய்த்து பழுக்கும். 

தடித்த ஓடுக்குள் புளி பாதுகாக்கப்படுகிறது. அதன் உள்ளே கடினமான விதைகளும் இருக்கும். விதை நீக்கிய புளி சந்தையில் விற்கப்படுகிறது. 'தாமரின்டஸ் இண் டிகா' என்ற அறிவியல் பெயர் கொண்ட புளி 'பபேசி யேசி' தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. 

* புளிப்பு சுவையுடைய புளியம்பழத்தில் என். எஸ்.பி. எனப்படும் நார்ச்சத்துப் பொருள் மிகுதியாக உள்ளது. 100 கிராம் புளி சதைப்பற்றில் 13 சதவீதம் என்.எஸ்.பி. நார்ப்பொருள் உள்ளது. உணவுப் பொருட்களை உப்பி பருக்கச் செய்வதில் என். எஸ்.பி. பங்கெடுக்கும். 

* மலச்சிக்கலை தடுக்கும் ஆற்றலும் என்.எஸ்.பி. நார்ப் பொருளுக்கு உண்டு. புற்றுநோய் மற்றும் பெருங்குடல் சதைகளை பாதிக்கும் நச்சுப் பொருட்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். 

* மூல வியாதியை உருவாக்கும் ஒருவித உப்புப் பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் என்.எஸ்.பி. பங்கெடுக்கிறது. கெட்ட கொழுப்புக்களையும் இது கட்டுப்படுத்துகிறது. 

* எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் மிகுந்திருப்ப தைப்போல புளியில் அதிக அளவு டார்டாரிக் அமிலம் உள்ளது. இது உணவுக்கு புளிப்பு சுவையைத் தரு கிறது. மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் டார்டாரிக் அமிலம் செயலாற்றும். தீங்கு விளை விக்கும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து உடலை காக்கும். 

* புளியம்பழத்தில் லிமோனென், ஜெரனியால், சபரால், சின்னாமிக் அமிலம், மீதைல் சாலிசிலேட், பைராசின், அல்கைல்தையாசோல் போன்ற துணை ரசாயன பொருட்களும் உள்ளன. இவை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. 

* அத்தியாவசிய தாதுக்களான தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் புளியில் இருக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வல் லது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கு வகிக்கும். 

* வைட்டமின் ஏ, போலிக் அமிலம், ரிபோபிளேவின், தயாமின், நியாசின், வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும் புளியம் பழத்தில் உள்ளன. இவை நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுபவை. நோய் எதிர்ப்பு பொருட்களாகவும் செயலாற்றும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும். 

No comments:

Post a Comment