Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 29, 2013

அக்குள் கருமையை போக்க வழிகள்


பெரும்பாலானோரது அக்குள் கருமையாக இருக்கும். அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு விருப்பமான ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியமாட்டார்கள். அப்படியே அணிந்தாலும், கைகளை மேலே தூக்கமாட்டார்கள். ஏனெனில் அக்குள் கருமையாக இருந்தால், அது மிகவும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.


இத்தகைய அக்குள் கருமையைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. மூலிகைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். இவற்றில் சில பொருட்கள் ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதால், அக்குளில் பயன்படுத்துவதற்கு முன்னர், இதனை ஒருமுறை கைகளில் சோதித்துக் கொள்ள வேண்டும். அக்குள் கருமையைப் போக்கும் சில வைத்தியங்களைப் பார்க்கலாம்.

• கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

• எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதன் சாற்றினைக் கொண்டு, கருமையான அக்குளை மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் அக்குள் கருமை மறையும். ஆனால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், எலுமிச்சையை பயன்படுத்தக்கூடாது. இதனால் எரிச்சல் ஏற்படுவதோடு, சருமம் மேலும் பாதிக்கப்படும்.

• ரோஸ் ஒரு அருமையான நறுமணமிக்க மலர். அத்தகைய மலரின் இதழ்களை அரைத்து அக்குளில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருமை மறையும்.

• மஞ்சளுக்கு சருமத்தின் கருமையை போக்கும் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி உலர வைக்க வேண்டும். குறிப்பாக இந்த முறை சென்சிடிவ் சருமத்திற்கு ஏற்றது.

• அதிமதுர வேரை தண்ணீர் ஊற வைத்து அரைத்து, அதனை கருமையாக இருக்கும் அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். இதனால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

• சருமத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை போக்குவதில் வேப்பிலை ஒரு சிறந்த மூலிகைப் பொருள். அந்த மூலிகைப் பொருள் சருமத்தை வெள்ளையாக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. ஆகவே வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை அரைத்து, அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

No comments:

Post a Comment