Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 23, 2013

பிரமாண்டமாய் ஓர் உலகம்-5


Dragon Mart:
dr1
துபாயில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று டிராகன் மார்ட் (Dragon Mart). துபாய்க்கு வெளியில், ஏறத்தாழ 40 கி.மீ தூரத்தில் இண்டர் நேஷனல் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருக்கிறது. அதன் கட்டிட அமைப்பே டிராகன் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது ஒரு வியப்பாகத் தானிருக்கிறது. 4000க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், ஷோ ரூம், 2500 கார்கள் நிறுத்தும் அளவுக்கு கார் பார்க்கிங் என பறந்து விரிந்து காணப் படுகிறது. இதன் மொத்த நீளம் 1.2 கி.மீ என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன் பிரமாண்டத்தை. இது 2004ல் கட்டி முடிக்கப் பட்டது.

dr3
அனைத்துமே சைனாப் பொருட்களின் விற்பனை நிலையங்கள். பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் அதி நவீன கண்டுபிடிப்புகள். உண்மையில் தொழில் நுட்பச் சந்தையில் சைனா நம்மை பின் தள்ளி எங்கோ சென்று விட்டது எனலாம்..
dr4dr5
ஏதோ சைனாவே துபாயை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டது போல மௌனமாக தன் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான கடைகள் அனைத்திலும் சைனா முகங்கள் தான்.
வழக்கம் போல் அங்கும் ஆளாளுக்கு வேறு பாடு காட்டப் படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
நாம் கொஞ்சம் அதிகமாக விவரங்கள் கேட்டால், ஒருவித அலட்சியப் போக்கு அவர்களிடம் காணப் படுகிறது அதே வேளை ஒரு அரபியோ, வெள்ளையரோ கேட்டால் அவர்களுக்கு ஒரு தனி மரியாதை கலந்த வரவேற்பு, கனிவான பேச்சுக்கள் எல்லாம்.
20131120_125703
அனைத்து கடைகளையும் பார்த்து முடிக்க நிச்சயமாக ஒரு நாள் போதாது தான். இடை இடையே Food Court எனும் சாப்பாட்டு கடைகள் வேறு. என்ன விலை தான் கொஞ்சம், கொஞ்சமென்ன அதிகமாகவே இருக்கிறது.
இங்கு கடை விரித்திருக்கும், வேலை பார்க்கும் சைனாக் காரர்களுக்கு அருகிலேயே அருமையான வில்லாக்கள், பல மாடி கட்டிடங்கள் சகல வசதிகளுடன் அமைத்திருக்கிறார்கள். இன்னும் இதை விரிவாக்கும் பணியும் நடந்து வருகிறது. டிராகன் மார்ட் இரண்டு, 175,000 sq.m பரப்பளவில் இதன் அருகிலே ஓமன் சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஹைப்பர் மார்க்கெட், திரையரங்கங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள், மொத்த, சில்லரை வளாகங்கள் என பிரமாண்டமாக அமைக்கப் படுகின்றன.
டேய்ரா, ரசீதியா போன்ற இடங்களில் இருந்து இங்கு போய் வர RTA பஸ் வசதியும் உண்டு. என்னால் பாதியளவு கூட பார்க்க முடியவில்லை. இன்னொரு தடவை செல்ல வேண்டும்.
மொபைல் கடைகள் பாதிக்கு மேல் ஆக்ரமித்திருக்கின்றன. அதி நவீன செல் போன்கள் கடைக்கு கடை குவித்திருக்கிறார்கள்.பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. வண்ண சர விளக்குகள், மின் சாதனங்கள், துணி வகைகள், இயந்திரங்கள் என தனித் தனி பிரிவாக அமைத்திருக்கிறார்கள். எங்கும் சைனா மயம். எதை வாங்குவது என்று தெரியாத அளவுக்கு பொருட்கள் குவிந்து கிடைக்கின்றன. என்ன சட்டைப்பையை கொஞ்சம் நிறைத்து செல்ல வேண்டும் அவ்வளவு தான். நம்மைப் போல் விஸிட்டில் வருபவர்கள் காசை எண்ணித் தான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
20131120_114056[1]
ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அனைத்து கடைகளிலும் பேரம் உண்டு. கண்ணை மூடிக் கொண்டு சொன்ன விலைக்கு வாங்கி விடாதீர்கள். நன்றாக பேரம் பேசி வாங்குங்கள். ஒரு பொருளுக்கு கடைக்கு கடை விலை கூட குறைய இருக்கிறது. கவனம். ஆனால் வெளி மார்க்கெட்டை விட இங்கு விலை கம்மி தான். மொத்தமாக வாங்குபவர்களுக்கு இன்னும் சௌகரியம்.
துபாய், சார்ஜா போன்ற இடங்களில் உள்ள சிறு வியாபாரிகளும் இங்கிருந்து தான் பொருட்களை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். எதிலும் பிரமாண்டங்கள் எனும் வரிசையில் இந்த டிராகன் மார்ட்டுக்கும் ஒரு இடம் உண்டு.

No comments:

Post a Comment