Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 19, 2013

இணையதளங்கள் முடக்கப்படுவதை தடுக்க முடியுமா?


கொலை, கொள்ளை செய்திகளைப்போல இணையதளங்கள் செயலிழந்து போவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன. இந்தியாவின் தீவிர பாதுகாப்பு பகுதியான ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) இணையதளத்துக்குள் புகுந்து சீனாவைச் சேர்ந்த சிலர் தகவல்களை திருடினர். இதை தாமதமாக கண்டுபிடித்த அதிகாரிகள் அதை சரிசெய்யவே நீண்ட நாட்களானது. 


சிங்கப்பூர் பிரதமரின் இணையதளத்துக்குள்ளும் கடந்த மாதம் புகுந்து அதை செயலிழக்க செய்துவிட்டனர். அமெரிக்காவின் பென்டகன் இணையதளமும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், அதிமுக கட்சியின் இணையதளம், பிரபலமான இரண்டு தொலைக்காட்சி சேனல்களின் இணையதளங்களை முடக்கிவிட்டனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த ஓர் அதிகாரி கூறியதாவது:
பணம் சம்பாதிக்க, எதிர்ப்பை தெரிவிக்க, விளையாட்டுக்காக, எதிராளியின் தொழிலை முடக்க என பல்வேறு காரணங்களுக்காக அடுத்தவரின் இணையதளத்துக்குள் புகுந்து சேட்டை செய்கின்றனர். அடுத்தவரின் இணையதளங்களுக்குள் நுழைபவர்கள் வெள்ளை, கருப்பு, சாம்பல் மற்றும் ஊதா நிற தாக்காளர்கள் (ஹேக்கர்ஸ்) என 4 நிறங்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் தலையானவர் என்பதை காட்ட எலைட் என்ற பிரிவும் இதில் உள்ளது.
இவர்கள் தர்மத்தோடு செயல்படு பவர்கள். தமது தேவைக்காக மட்டும் அடுத்தவரின் இணையதளத்துக்குள் புகுந்து, சில தகவல்களை திருடிவிட்டு வெளியே வந்து விடுவார்கள்.
இவர்கள்தான் குற்றவாளிகள். லாப நோக்கத்துக்காக அடுத்தவரின் இணைய தளத்துக்குள் புகுந்து தகவல்களை திருடுவதும், செயலிழக்க வைப்பதும் இவர்களின் வேலை. சமூகம், மதம், அரசியல் தொடர்பாக தங்களின் எதிர்ப்பைக் காட்ட ஈவிரக்கம் இல்லாமல் அடுத்தவரின் இணையதளத்தில் நாச வேலை செய்வதும் இவர்கள்தான்.
கணினி நிறுவனங்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை இது "ப்ளூ ஹேக்கர்ஸ்". ஒவ்வொரு நிறுவனமும் எதிராளி நிறுவனத்தின் இணையதளத்துக்குள் புகுந்து தங்கள் திறமையை காட்டுவார்கள்.
மிகச் சிறந்த அறிவாளிகள். கம்ப்யூட்டர் புரோகிராம் உள்பட எல்லாம் தெரிந்தவர்கள். இவர்கள் அடுத்தவரின் இணையதளத்துக்குள் நுழைந்து எதுவும் செய்யமுடியும். இவர்களை கண்டுபிடிப்பதும் மிகவும் கடினம்.
தடுக்கும் வழிகள்
நம்மை இப்போது கஷ்டப்படுத்திக் கொண்டு இருப்பது கருப்பு நிற தாக்காளர்கள்தான். இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எளிதான சில வழிமுறைகளை உள்ளன.
1) இணையதள பாதுகாப்புக்காக மைக்ரோசாப்ட் அப்டேட் வெப்சைட் டவுன்லோடு உள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் வரும் புதுப்புது பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை பதிவிறக்கம் செய்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
2) பயர்வால் ரெகுலர் சாப்ட்வேர்களை அப்டேட் செய்வது நல்லது.
3)பாதுகாப்புக்காக மல்டிபிள் சாப்ட்வேர்களை பயன்படுத்த வேண்டும்.
4)ஆன்டிஸ்பைவேர் என்னும் சாப்ட்வேர்களை வைத்திருந்தால், தேவையில்லாத விளம்பரங்கள் மூலம் நமது இணையதளத்துக்குள் நுழைபவர்களை தடுக்க முடியும்.
5) வைரஸ், கம்ப்யூட்டர் வார்ம் இந்த இரண்டின் மூலமே அடுத்தவரின் கம்ப்யூட்டருக்குள் அதிகமாக நுழைகின்றனர். இவற்றை தடுப்பதற்கான சாப்ட்வேர்கள் நிச்சயம் இருக்க வேண்டும்.
6) நமது இணையதளத்தின் பாதுகாப்பு பகுதிக்குள் மற்றொருவர் நுழைந்தால் உடனே எச்சரிக்கை விடுக்கும் சாப்ட்வேர்களும் இப்போது வந்துவிட்டன.
7) இணையதளத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகளைத் தாண்டியே உள்ளே புகுந்து நாசவேலை செய்கின்றனர். அந்த பாதுகாப்பை மட்டும் சரியாக வைத்திருக்க தனிநபர் மற்றும் நிறுவனத்தின் வசதிக்கு ஏற்ப சில ஆயிரம் முதல் சில கோடி வரையிலான சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment