ஹோம்பேஜில், வானிலை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை அளித்து, வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேடல்களை மிகவும் எளிமைப்படுத்தியுள்ளது கூகுள்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சில தகவல்களை ஒருவர் இணையதளத்தில் இனி தனியே தேட வேண்டி இருக்காது. அவற்றை கூகுள் ஹோம் பேஜிலேயே காண முடியும்.
கூகுள் உற்பத்தி மேலாண் இயக்குநர் (ஜப்பான்), கென்டாரோ டொகுசேய் இதுதொடர்பான நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார் அப்போது அவர் கூறியதாவது:
வானிலை முன்னறிவுப்புகள், போக்குவரத்து நெரிசல் போன்ற சில தகவல்களை ஏராளமா னவர்கள் தினமும் பார்க்கின்றனர். அவர்கள் அத்தகவலை இனி தனியே தேட வேண்டியதில்லை. மேப் வசதி ஏற்கெனவே எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. டேப்லட்டுகளில் பயன்படுத்தத் தக்கவகையில் மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேப்களில் எக்ஸ்ப்ளோர் என்ற சிறப்பம்சத்தைப் பயன்படுத்து
வதன் மூலம் வார்த்தைகளை தட்டச்சு செய்யாமல், உணவு விடுதி, மதுபான அருந்தகங்கள், இதர அருந்தகங்கள், தங்குமிடம், விளையாடுவதற்கான இடம், கடைகள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய முடியும் என்றார்.
யூ டியூப் சேவைகள் குறித்து அப்பிரிவின் தலைவர் டேவிட் மெக்டொனால்ட் கூறுகையில், சமையல் குறிப்புகள், வீட்டுக்குள் செய்யும் உடற்பயிற்சிகள் போன்ற வீடியோக்கள் சேர்க்கப்ப
டுகின்றன. இது தொடர்பான சமீபத்திய வரவுகள் குறித்து அறிந்து கொள்ள சந்தாதாரர் ஆகும் வசதியும் இணைக்கப்படுகிறது” என்றார்.
ஆஃப்லைனில் மொழிபெயர்ப்பு வசதி, நாலெட்ஜ் கிராப், புத்தகங்கள் உள்ளிட்ட வசதிகளும் இணைக்கப்படுகின்றன. இதுபோன்ற வசதிகள், கூகுள் பயன்படுத்துபவர்களின் வசதியை மேலும் அதிகரிக்கின்றன.
No comments:
Post a Comment