Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 31, 2013

2013 இல் உலகில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்




2013 இல் உலகில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் உங்களிடையே ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது.
உங்களது, ஊர் அல்லது உங்களது மாநிலம் என்ற வகையில் இல்லாது மேற்குலகம் சார்ந்த அல்லது உலக நாடுகள் சார்ந்த சில முக்கிய சம்பவங்களின் தொகுப்பே இவை.

குறித்த சம்பவங்கள் நிகழ்ந்த போது அன்றைய தினங்களில் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த பதிவுகளையும் உங்களுக்கு தருகிறோம். 


ஜனவரி 17, 2013 :   உலகின் மிகவும் மதிக்கத்தக்க, மிகப்புகழ்பெற்ற சைக்கிள் வீரரான லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங், தான் ஊக்கமருந்து பாவித்து வந்த உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் அதுவரை பெற்ற அனைத்து பதக்கங்களும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன.
ஜனவரி 24, 2013 :  யுத்த களத்தில் பெண் இராணுவ வீராங்கணைகள் போர் புரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அரசு நீக்கியது
ஜனவரி 27, 2013 : பிரேசிலின் நைட்கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டனர்.
பெப்ரவரி 11, 2013  : அப்போது பாப்பரசராக இருந்த 7வது பெனடிக்ட் தான் திடீரென ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். (வத்திகான் வரலாற்றில் 600 வருடங்களில், இப்படி தானே முன்வந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த தைரியமான முதல் பாப்பரசர் இவர்)
பெப்ரவரி 14, 2013 : உலகின் செயற்கை கால்களுடன் ஓடும் அதிவேக மின்னர் ஓட்ட வீரர் எனப் போற்றப்படும் ஒஸ்கார் பிஸ்டாரியஸ், தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
பெப்ரவரி 15, 2013 : பூமியில் மிக வேகமாக வந்து வீழ்ந்தது எரிநட்சத்திரம் : ரஷ்யாவிலிருந்த பலரால் நேரடியாக அவதானிக்கப்பட்டது.
பதிவு : அதெப்படிங்க : ரஷ்யாவில் எரிநட்சத்திரம் வீழந்ததை அவ்வளவு தெளிவாக படம்புடிச்சாங்க?

மார்ச் 13, 2013 : உலகின் புதிய பாப்பரசராக பிரான்ஸிஸ் தெரிவானார்
பதிவு : வத்திக்கானில் வெண்ணிறப் புகை - புதிய பாப்பரசராக தெரிவானார் ஆர்ஜெண்டீனாவின் கார்டினல்

ஏப்ரல் 15, 2013 : அமெரிக்காவின் புகழ்பெற்ற பாஸ்டன் மரதன் போட்டிகளின் போது அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு நிகழ்ந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நாள் இதில் 3 பேர் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் போயினர்.
பதிவு : உலகப்புகழ் பெற்ற பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு : அதிர்ச்சியில் அமெரிக்கா 

ஏப்ரல் 16, 2013 : இக்குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் ட்சார்னேவ் சகோதரர்கள் என அவர்களுடைய புகைப்படங்களுடன் அடையாளம் காணப்பட்டனர். தாமெர்லான் ட்சார்னேவ் எனும் மூத்த சகோதரர் கொல்லப்பட்டார். இளையவரான ட்ஷோகார் சுற்றுவளைப்பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தான் குற்றமற்றவர் என அவர் தொடர்ந்து வாதிட்டார்.
ஏப்ரல் 24, 2013 : பங்களாதேஷில் 8 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் கொல்லப்பட்டனர்.
மே 06, 2013 : நான்கு தசாப்த காலத்தின் பின்னர் அமெண்டா எனும் பெண்மணி தான் கடத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவரைப் போன்று பல பெண்களை கடத்தி சீரழித்த குற்றச்சாட்டில் அரியெல் கஸ்ட்ரோ எனும் நபருக்கு 1,000 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

மே 20, 2013 : அமெரிக்காவின் மூரில் டார்னார்டோ புயலால் 25 பேர் கொல்லப்பட்டனர்.

ஜூன் 9, 2013 : அமெரிக்காவின் புலனாய்வுத் துறை, பலரது ரகசிய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறது எனும் அதிர்ச்சி தகவல்களை முதன்முறையாக உலகுக்கு வெளியிடப்பட்டவர் நான் தான் என  எட்வார்ட் ஸ்னோவ்டன் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது.
ஜூன் 14 - 19, 2013 : இந்தியாவின் வட மாநிலங்களில் (உத்தரபிரதேசம்) பெய்த கடும் மழை மற்றும் அதனால் வேற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 6,000க்கும் அதிகமானோர் பலியானார்கள்
ஜூலை 03, 2013 : எகிப்து நாட்டின் அதிபர் மோர்ஸி, இராணுவ புரட்சி மூலம் திடீரென பதவியிறக்கப்பட்டார்.
ஜூலை 13, 2013  : அமெரிக்காவின் கறுப்பினத்தவரான எனும் நபரின் படுகொலையில் ஜோர்ச் சிம்மெர்மேன் எனும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது
ஜூலை 22, 2013 : இங்கிலாந்தின் வருங்கால இளவரசரும், இளவரசர் வில்லியம்ஸ், கேட் தம்பதியினரின் புதல்வருமான ஜோர்ஜ் பிறந்த தினம்
பதிவு : கேட் வில்லியம் தம்பதியரின் புதிய அரச வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்

ஆகஸ்டு 21, 2013 : அமெரிக்கா இராணுவம் ஈராக்கில் மேற்கொண்ட மனித உரிமை மீறல் குற்றங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மேன்னிங்கிற்கு 35 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
பதிவு : கேட் வில்லியம் தம்பதியரின் புதிய அரச வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்

ஆகஸ்டு 21, 2013 : சிரிய போரின் போது இடம்பெற்ற  நச்சுவாயுத்தாக்குதலில் 1,429 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவார்கள். இத்தாக்குதல் தம்மால் நிகழ்த்தப்படவில்லை என சிரிய அதிபர் அசாத்தின் படைகள் மறுப்பு தெரிவித்தன.
பதிவு : சிரியா மீது போர் தொடுக்க மேற்குலக நாடுகள் திட்டம்:ஈரான் கண்டனம்

செப்டெம்பர் 13, 2013 : இந்தியாவை அதிரச்செய்த  டெல்லி மருத்துக் கல்லூரி மாணவியின்  பேருந்து பாலியல் பலாத்காரம் தொடர்பிலான  குற்றவாளிகள் நால்வருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடத்திற்கும் ஒரு தடவை ஒரு பெண் பாலியல் ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார், அல்லது ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்.
பதிவு : டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்தது நீதிமன்றம்

செப்டெம்பர் 16, 2013 : அமெரிக்க வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்
பதிவு : வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி

செப்டெம்பர் 21, 2013 : கென்யாவின் வர்த்தக மையத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர்
பதிவு : வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி

அக்டோபர் 4, 2013 : இந்தியாவின் ஆந்திர பிரதேஷ், ஒடிசாவில் ஏற்பட்ட மிகப்பயங்கரமான பைலின் புயலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 1999ம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட புயலின் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாவது மிகப் பாரிய புயலாக உருவான போதும்,  முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பத்திரமாக இடம்பெயரச் செய்யப்பட்டதால் பலர் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்டது.  
அக்டோபர் 17, 2013 : அமெரிக்க அரச அதிகாரிகளின் 16 நாள் திடீர் வேலைப் புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததுடன், அமெரிக்க அரசு மறுபடி இயங்கத் தொடங்கியது
பதிவு : அமெரிக்க அரசு துறை முடக்கம் : மலேசியா, பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்தார் ஒபாமா!

நவம்பர் 5, 2013 : செவ்வாய்க்கிரகத்தை நோக்கி இந்தியா அனுப்பிய மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்ட நாள். ரூ.450 கோடி செலவில், இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கிய இத்திட்டத்தின் படி செவ்வாய்க்கு செலுத்தப்பட்ட விண்கலம், 9 மாத பயணத்தின் பின்னர், செப்டெப்ம்பர் 24, 2014 இல் செவ்வாய்க் கிரகத்தை சென்றடையவுள்ளது. இது வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்தால் நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்பவற்றை அடுத்து செவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நான்காவது விண்வெளி நிலையமாக இந்தியாவின் இஸ்ரோ புதிய சாதனை படைக்கும். இப்போதே குறித்த விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு உலகளவில் கடும் விமர்சனமும் எழுந்திருந்தது.
வெறுமனே பணத்தை வீணடிக்கும் முயற்சி இது. இத்திட்டத்திற்கு செலவழித்த பணப் பெறுமதியை இஸ்ரோ தனது, தொலைத்தொடர்பாடல், ஒளிபரப்பு, காலநிலை முன்னறிவிப்பு, இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான எச்சரிக்கை, கடல்  கண்காண்பிப்பு எச்சரிக்கை, கல்வி, பாதை வடிவமைப்பு போன்ற செய்மதிகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்கின்றன அந்த விமர்சனங்கள். காரணம், இஸ்ரோவின் வருடாந்திர பட்ஜெட் ஒரு பில்லியன் டாலர், ஆனால் நாஸாவின் வருடாந்திர பட்ஜெட் 17.7 பில்லியன் டாலர்களாக இருப்பதுடன்,  ரஷ்ய ஏஜென்ஸியின் பட்ஜெட் 7.9 பில்லியன் டாலர்களாக உள்ளது.
பதிவு : செவ்வாயை நோக்கி மங்கல்யான் சற்று முன்னர் வெற்றிகரமாக தமது பயணத்தை தொடங்கியது!

நவம்பர் 8, 2013 : பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட ஹையான் தைபூனில் 6,000 பே கொல்லப்பட்டனர்.
பதிவு : பிலிப்பைன்ஸ் ஹையான் புயல் : 10 ஆயிரத்துற்கும் மேற்பட்டோர் பலி?

நவம்பர் 23, 2013 : 1979ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா - ஈரான் இடையே முதன்முறையாக அணு ஒப்பந்தம் ஒன்று நேரடி பேச்சுவார்த்தையின் பின்னர் கையெழுத்தானது.

டிசம்பர் 05, 2013 : 20ம் நூற்றாண்டின் Living Legend என அழைக்கப்பட்ட மாபெரும் கறுப்பினத் தலைவரும், நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட தென் ஆபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார்.
டிசம்பர் 8, 2013 : டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து  மாநிலத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகின. காங்கிரஸ் கடும் பின்னடவைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியத் தலைநகர் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக டெல்லியில் ஆட்சி அமைத்தது. அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வரானார். 

No comments:

Post a Comment