Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 30, 2013

சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ்


கர்ப்பகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த காலத்தில் ஒரு பெண் தனது உடல் நிலையை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் தனது வயிற்றில் வளரும் சிசுவையும் சேர்த்து பராமரிக்க வேண்டும்.
 

உங்களுக்கு கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்திருந்தால், உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுபடுத்துதல் தான் சிறந்த கர்ப்பகால டிப்ஸ் ஆகும். கர்ப்பகால சர்க்கரை நோய் உங்கள் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாது உங்கள் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். 

உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும். இதனை செய்தால் கருச்சிதைவு, குறைபிரசவம், பிறப்பு குறைபாடு, அதிக வளர்ச்சி மற்றும் பிற பிரச்சனைகளை குறைக்கச் செய்யும். கர்ப்பகால தொடக்கத்திலேயே சர்க்கரை நோயை கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

ஏனெனில், இந்த சமயத்தில் தான் சிசுவின் இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல், போன்றவை வளரத் தொடங்கும். இந்த நேரங்களில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். 

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் இரத்தத்தின் க்ளுகோஸ் அளவை அடிக்கடி பரிசோதிப்பது மிகவும் அவசியமானதாகும். அதனை கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமான உடல்வளத்தை பெறுங்கள். 

கர்ப்பமாக இருக்கும் போது அதிகமான அல்லது கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ள கூடாது. ஆனால், நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப்பெண்ணாக இருந்தால், சிறிது நேர நடைபயிற்சி, எளிமையான உடற்பயிற்சிகள் போன்றவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். 

வழக்கமான பரிசோதனைகளுக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும். இது உங்கள் கர்ப்பகால சர்க்கரை நோயை கண்காணிக்க உதவும். நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண்ணாக இருப்பதால், உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை பரிசோதிக்க இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நீங்கள் வாழும் வாழ்க்கையையும், வாழ்க்கை முறையையும் குறிக்கின்றது. ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்றவை கர்ப்பகாலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமானவற்றுள் சிலவாகும். 

உங்கள் வாழ்கையை நேர்மறையான நோக்குடன் பார்க்க வேண்டும். இது உங்கள் வாழ்வில் நேர்மையான மாற்றங்களை உருவாக்க உதவும்.
மாலைமலர்

No comments:

Post a Comment