Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 30, 2013

கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌ம் வே‌ண்டா‌ம்!

கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (Cancer)என்று தான் எந்த ஒரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயம். கர்ப்பப் பையில் வருகின்ற கட்டிகள் புற்றுநோய் கட்டியாக வளரலாம். 


ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் கர்ப்பப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும். இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கர்ப்பப் பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.

இது அரிதாக ஏற்படுகின்ற நோயும் இல்லை. இது மிகவும் பொதுவாக அதாவது 45 வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம். 

ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் அதற்கான அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது. 

இது புற்று நோயும் அல்ல. மேலும் இந்த கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவு. யாருக்காவது பைவ்ரோயிட் (Fibroid)எனப்படும் கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை. 

பொதுவாக 40 முதல் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம். இதற்கான அறிகுறிகள்:

• மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்
• அடிவயிற்றிலே ஏதோ இருப்பது போன்ற உணர்வு
• அடிவயிறு வீங்குதல்
• அதிகம் சிறுநீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்
தீர்வு காண: இயற்கை உணவு உலகம் தளத்தினை அணுகினால் இதற்கான மருந்தும், ஆலோசனையும் பெறலாம்.
முகவரி: www.naturalfoodworld.wordpress.com

No comments:

Post a Comment