Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 3, 2013

கறி குழம்பு



 
தேவையானப் பொருட்கள்
  • கறி – அரைக்கிலோ
  • சோம்பு – ஒரு தேக்கரண்டி
  • சீரகம் – அரைத் தேக்கரண்டி
  • மிளகு – ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
  • பூண்டு – 6 பல்
  • வெங்காயம் – ஒரு கப்
  • கறிவேப்பிலை – சிறிது
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • பட்டாணி – 50 கிராம்
  • காரட் – ஒன்று
  • தக்காளி – 2
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  • கறியை நன்கு சுத்தம் செய்து கொண்டு, விரும்பியவாறு நறுக்கிக் கொள்ளவும்.
  • சோம்பு, மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் தனியே வைத்துக் கொள்ளவும். அதே போல் இஞ்சி, பூண்டு இரண்டினையும் சேர்த்து தனியே அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை பட்டாணி, நறுக்கின காரட் அனைத்தையும் கறியுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • பிறகு சோம்பு சீரக விழுது, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இப்போது, நறுக்கின தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன் பின் கறி, காய்கள் அனைத்தையும் கொட்டி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • குழம்பு நன்றாக கொதித்ததும், கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment