Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 3, 2013

இலங்கை ஆட்டு எலும்பு ரசம்


இந்த ரசம் உடம்பு ரயட்டாக இருக்கும் போது அருந்தினால் கொஞ்சம் தெம்பாக இருக்கும்.
 
தேவையானப் பொருட்கள்
  • ஆட்டு எலும்பு – 250g
  • பழ புளி – சிறிய உருண்டை
  • தேசிக்காய் – பாதி
  • மஞ்சள் – 1/2 தே.கரண்டி
  • உப்பு – தேவைக்கு ஏற்ப
  • அரைப்பதற்கு:
  • காய்ந்த சிவப்பு மிளகாய் – 4
  • தனியா – 2 மே.கரண்டி
  • சோம்பு – 1 தே.கரண்டி
  • சீரகம் – 1 1/2 மே.கரண்டி
  • கராம்பு – 1
  • உள்ளி – 3 பல்லு
  • பெருங்காயம் – சிறு துண்டு
  • மிளகு – 5அல்லது 6
  • இஞ்சி – சிறு துண்டு
செய்முறை
  • ஆட்டு எலும்பை சுத்தம் செய்து, மஞ்சள்,உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.
  • பின்பு புளியை 3/4 லீற்றர் தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்து அதனுள் எலும்பை போட்டு அளவான தீயில் நன்றாக அவிய விடவும்.
  • பின்பு அரைக்க வேண்டிய பொருட்களை அரைபதமாக அரைத்து அவிந்து கொண்டிருக்கும் எலும்பினுள் இட்டு மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி தேசிப்புளி விட்டு சுடச் சுட பரிமாறவும்.

No comments:

Post a Comment