தற்போது 20, 30 வயதுகளிலேயே... Ôசர்க்கரை வியாதி வந்துவிடுமோÕ என்கிற பயத்துடனேயே திரிகிறார்கள் பலரும். 30 வயது கடந்த நிலையிலேயே பலரும் அந்த நோய்க்கு ஆட்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஏன்... குழந்தைகள் கூட இப்போதெல்லாம் சர்க்கரை நோய் (டைப் 2) தாக்குதல் காரணமாக பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது! ஆனாலும்கூட கருப்பட்டியின் மகத்துவத்தை இன்னமும் உணராமல்தான் இருக்கிறார்கள் நம்மவர்கள்!
கருப்பட்டி பயன்படுத்துவது ஒரேயடியாகக் குறைந்து போக... அதன் உற்பத்தியும் பெருமளவு குறைந்து விட்டது. என்றாலும்... பாரம்பரியத்தை மறக்காத பகுதிகளில் கருப்பட்டி உற்பத்தி சுறுசுறுப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது.
நாலரை லட்சம் பனை மரங்கள்!
வட்டன்விளை கிராமத்தைச் சேர்ந்த பனைபொருள் உற்பத்தியாளர் ராமச்சந்திரனை, அவரது பனை மரத் தோப்பில் சந்தித்தபோது...இருபது வருஷங்களுக்கு முன்ன சுமார் 790 ஹெக்டேர் பரப்பளவுல, சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பனைமரங்கள் கற்பகவிருட்சமா பயன் தந்திட்டிருந்துச்சு. உள்ளூர் ஆட்கள் தவிர, திருநெல்வேலி, கன்னி-யாகுமரி மாவட்டங்கள்ல இருந்தும் பனைஏறும் தொழிலாளிகள் வந்து தங்கியிருந்து, மரம் ஏறுவாங்க. ஒரு நாளைக்கு ஒவ்வொரு மரத்துலயும் மூணு தடவை ஏறுவாங்க. அந்தக் காலத்துல ‘கள்‘ இறக்கறதுக்கு அனுமதி இருந்ததால... கள் வியாபாரம் அமோகமா நடந்துச்சு. பனை ஏறுற தொழிலை மட்டுமே நம்பி கிட்டத்தட்ட ரெண்டாயிரம் குடும்பங்கள் இருந்துச்சு. திரும்பிய திசையெல்லாம் கருப்பட்டித் தொழில் கமகமத்த காலம் அது என்று பனை பெருமை பேசினார்.
No comments:
Post a Comment