Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 4, 2013

தீபாவளி ஸ்பெஷல் - பால் அல்வா


இனிப்பில்லாத தீபாவளியா? சுலபமாகவும், சீக்கிரமும் செய்யக் கூடிய ஸ்வீட் இது.
(நான்கு பேருக்கான அளவு)
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
ரவை - 1 சிறிய கப்
நெய் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
பாலில் ஊறவைத்த குங்குமப்பூ - சிறிது.
செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்

செய்முறை:
முதலில் ரவையை சிறிது நெய் ஊற்றி நன்றாக வறுக்கவும்.
பிறகு, அதில் காய்ச்சி ஆறவைத்த பாலை கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றி நன்றாக
கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
அவ்வப்போது நெய்யை கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றவேண்டும்.
இப்பொழுது ரவை நன்றாக வெந்து கெட்டியாக இருக்கும். இதில் சர்க்கரையை போட்டு விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது நேரத்தில் வாணலியில் ஒட்டாமல் அல்வா கெட்டியாக சேர்ந்துவரும். இப்பொழுது பாலில் ஊறவைத்த குங்குமப்பூவை போட்டு ஒரு கிளறு கிளறவும்.
நெய்யில் வறுத்த முந்திரி,பிஸ்தா,பாதாம் தூவி அலங்கரிக்கவும். ரசித்து சாப்பிட, சுவையான பால் அல்வா தயார்!
கவனம்: பாலை தாராளமாக ஊற்றினால் மட்டுமே பால்அல்வா சுவை தனித்து தெரியும். பால் அளவு குறைந்தால் ரவா கேசரி போலிருக்கும். அடுப்பு கண்டிப்பாக சிறுதீயில் மட்டும் இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment