செய்முறை
- முதலில் கறியை கழுவி சிறியதாகவும் இல்லாமல் பெரியதுமாகவும் இல்லாமல் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும்.
- வெங்காயத்தை இரண்டிரண்டாக குறுக்கில் நறுக்கி வைக்கவும்.
- அரைக்க வைத்துள்ளவற்றில் தேங்காயை தனியாகவும், மற்ற சாமான்களை தனியாகவும் அரைத்து வைக்கவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு இலை, அன்னாசிப்பூ தாளிக்கவும்.
- பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி கறி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
- பிறகு மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த சோம்பு மசாலா விழுது போட்டு இரண்டு நிமிடம் கிண்டி அரை டம்ளர் தண்ணிர் விட்டு குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும்.
- வெந்ததும் குக்கரைத் திறந்து தேங்காய் விழுது சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் மூடாமல் வேக வைக்கவும்.
- அடுப்பில் வானலியை வைத்து மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போடவும்.
- குக்கரில் உள்ள கறிக் கலவையை கொட்டி மூடி, அடுப்பை அனைத்து விடவும்.
|
No comments:
Post a Comment