Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 3, 2013

கொலஸ்ட்ரால்

இதய நலம் தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்தக் கொலஸ்ட்ரால் பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.
கொலஸ்ட்ரால் என்ற வார்த்தை இன்றைக்கு ஆரோக்கியம் தொடர்பான விவாதங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் கொலஸ்ட்ரால் பற்றிய உண்மைகளைவிட வதந்திகளே அதிக அளவு பரவியுள்ளன. கொலஸ்ட்ராலை குறிப்பிட்ட அளவில் சேர்த்துக்கொள்வது உடலுக்குப் பல வகைகளில் நன்மையாக அமையும்.
ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் சேர்க்கப்படும்போதுதான உடல் நலத்துக்குக் கேடாக அமைந்துவிடுகிறது. கதாநாயகனாகச் செயல்பட்டு நன்மை புரியும் கொலஸ்ட்ராலானது அளவுக்கு அதிகமான நிலையில் கொடூரமான வில்லனாக மாறி பல தீமைகளை விளைவித்திவிடுகிறது.


சரி, கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள். உடல் நலம் காக்கவும் உடலின் சில முக்கியதான பணிகளைச் செய்யவும் நமது உடலே குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து கொள்கிறது.
கொலஸ்ட்ரால் (CHOLESTEROL) என்பது கோலி (STEROL) என்ற இரண்டு கிரேக்கச் சொற்கள் சேர்ந்து உருவான ஒரு வார்த்தை. கோலி என்ற கிரேக்கச் சொல்லுக்கு பித்த நீர் என்று பொருள். ஸ்ட்ரால் என்ற சொல்லுக்குக் கெட்டியான பொருள் என்று அர்த்தம். கல்லீரலானது இந்தப் பொருளை உருவாக்குவதால் இதற்கு இப்படி ஒரு பெயர் வழங்கப்பட்டது.
அளவோடு இருந்தால் கொலஸ்ட்ரால் ஒரு கதாநாயகன் என்று சொன்னேன் இல்லையா, அது ஒன்றும் மிகை அல்ல. கொலஸ்ட்ரால் நம் உடலுக்குப் பல நன்மைகள் உண்டு. கொலஸட்ராலானது ஆண் இன ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரானையும் (TESTOSTERONE) பெண் இன ஹார்மோனாகிய ஈஸ்ட்ரோஜனையும் உற்பத்தி செய்ய துணைபுரிகிறது.
செல்களில் மென் திசுக்களை உருவாக்க மற்ற கொழுப்புகளுடன் கொலஸ்ட்ராலும் இணைந்து செயல்படுகிறது. மேலும் மூளை, நரம்பு அமைப்புகள் உருவாகத் துணைபுரிகிறது. முக்கிய உயிர்ச்சத்தான வைட்டமின் டி&யின் (VITAMIN D) உற்பத்தியைத் தூண்டுகிறது.
இவ்வளவு நல்லவனாக இருக்கும் கொலஸ்ட்ரால் ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் எந்த அளவு இருக்க வேண்டும் என்பது நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
உடலில் உள்ள 100 மில்லி ரத்தத்தில் 150 மில்லிகிராம் முதல் 200 மில்லிகிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும்போதுதான் உடல் நலம் சீர்குலைகிறது. 75 கிலோ உள்ள ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் சுமார் 5 அவுன்ஸ் அல்லது 75 முதல் 150 கிராம் அளவுள்ள கொலஸ்ட்ரால் இருக்கும். மனித மூளையின் மொத்த எடையில் 3 சதவீதம் கொலஸ்ட்ரால்தான். தோல், கல்லீரல் ஆகியவற்றின் மொத்த எடையில் 0.3 சதவீதம் கொலஸ்ட்ரால் உள்ளது.
சிறுநீரக மேல் சுரப்பிகள், சினைப்பைகள், விதைப்பைகள் போன்ற உறுப்புகளில் கொலஸ்ட்ராலானது 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உடலில் உள்ள மொத்த அளவு கொலஸ்ட்ராலில் 20 சதவீதம் ரத்தத்தில் இருக்கிறது.
கொலஸ்ட்ராலை அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதம் (Low Density Lipo Protein) என்று இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றின் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதத்தைத் தீமை தரும் கொலஸ்ட்ரால் என்றும், அடர்த்தி மிகுந்த கொழுப்புப் புரதத்தை நன்மை தரும் கொலஸ்ட்ரால் என்றும் பிரித்துள்ளனர்.
நன்மை தரும் கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களில் படியும் தீமை தரும் கொலஸ்ட்ராலை அகற்றி அவற்றை ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று அழிக்கின்றன. இவ்வாறு ரத்தக் குழாய்களில் குறிப்பாக இதயத் தமனிகளில் படிந்திருக்கும் கொழுப்புப் படிவங்களை அகற்றி, ரத்தக் குழாய்களில் ரத்தமானது தடையில்லாமல் ஓட துணை புரிவதால் அதாவது ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் சிறப்பான பணியைச் செய்வதால் இவற்றை நன்மை தரும் கொலஸ்ட்ரால் என்கிறார்கள். ரத்தத்தில் இவ்வகையான கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதயத்துக்கு மிகவும் நல்லது.
இதற்கு மாறாக ரத்தத்தில் தீமை தரும் கொலஸ்ட்ரால் அதிகமாவதால் இதயத்துக்குப் பல்வேறு கேடுகள் ஏற்படுகின்றன.
கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளைத் தேவைக்கு அதிகமாக தொடர்ந்து அதிக அளவு உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவானது அதிகமாகிறது. இதன் காரணமாக அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதத்தின் படிவங்கள் காலப்போக்கில் ரத்தக் குழாய்களில் குறிப்பாக இதயத் தமனிகளின் சுவர்களிர் கொஞ்சம் கொஞ்சமாகப் படிகின்றன. இவற்றை உரிய காலத்தில் தடுக்கவில்லை என்றால் இதயத் தமனிகளின் உள்விட்டம் குறுகிக்கொண்டே வரும். மேலும் இதயத் தமனிகளின் சுருங்கி விரியும் தன்மையும் பாதிக்கப்பட்டு தடித்துவிடும்.
இதயத் தமனிகளின் உள்விட்டமானது இப்படிப் பல்வகைகளில் குறுகுவதால் இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. சில சமயங்களில் இதயம் தமனிகள் முழுமையாகத் தடைபடுவதால் இதயத் தசைகள் அவை இயங்குவதற்குத் தேவையான ரத்தத்தைப் பெற முடியாமல் மடிந்துவிடுகின்றன. இறுதியில் மாரடைப்பால் (Heart Attack) பாதிக்கப்படும் நிலைக்கு நோயாளி தள்ளப்படுகிறார்.
எனவே நம் உடலில் தீமை தரும் கொலஸ்ட்ரால் அதிகமாகச் சேர்வதை நாம் தடுக்  வேண்டும். எ,ந்தெந்த பொருள்களில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொண்டால் எதைத் தவிர்க்கலாம் என்பதம் புரிந்துவிடும்.
பொதுவாக டவிலங்கினங்களிடம் இருந்து கிடைக்கும் உணவு வகைகளிலும் பால், பால் பொருள்கள் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உள்ளது. 30 கிராம் எடை உள்ள ஆட்டு மூளையில் 1600 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இதே எடையுள்ள கல்லீரலில் சுமார் 410 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. 30 மில்லி கிராம் எடையுள்ள ஆட்டு சிறுநீரகத்தில் சுமார் 330 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. வெண்ணெய் அகற்றப்பட்£த ஒரு கப் பாலில் சுமார் 35 மில்லிகிராம் கொலஸ்ட்ராலும், வெண்ணெய் அகற்றப்படாத ஒரு கப் தயிரில் சுமார் 35 கிராம் கொலஸ்ட்ராலும் உள்ளது.
காய்கறி வகைகள், கனிகள், பலவகையான தானிய வகைகளில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவான அளவில் உள்ளது. வெண்ணெய் நீக்கப்பட்ட ஒரு கப் மோரில், 9 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகச் சேராதபடி உணவுப் பழக்கத்தை அமைத்துக்கொண்டால் இதயத்தைப் பாதுகாக்கலாம். இன்னொரு வழிமுறையையும் நீங்கள் பின்பற்றலாம்.
20 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தங்களுடைய உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால் இதயத்தைப் பாதுகாக்கலாம். இன்னொரு வழிமுறையையும் நீங்கள் பின்பற்றலாம்.
20 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தங்களுடைய ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப, தங்களுடைய உணவு முறையைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்த தற்பாதுகாப்பு முறை. ஒவ்வொருவரும் தங்களுடைய ரதத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்து 150 மில்லி கிராம் அளவுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் சிறந்த பாதுகாப்பு முறை எனலாம்.
கொலஸ்ட்ரால் நமது இதய நலனைப் பாதிக்காதவாறு நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள் என்ன?
உடலின் எடையை சீரான அளவில் வைத்துச் சேர்த்து கொள்ளுங்கள்.
நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்-.
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்ச செய்யுங்கள்.
தினசரி உணவில் கொழுப்புச் சத்துகள் மிகுந்த உணவு வகைகளான வெண்ணெய், ஆட்டு இறைச்சி, கொழுப்பு அகற்றப்படாத பால், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை உங்களுடைய ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment