பிரேசில் திராட்சை மரம் (Aboticaba Tree) தெற்கு பிரேசில் பசுமையாகவும் மிகவும் அடர்த்தியாகவும் வளரும் மரம் இது. இந்தமரம் உலகின் பல வெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக உள்ளது. இதன் இலைகள் சிறு ஈட்டி போல் உள்ளது. இது அதன் சொந்த நாட்டில் சுமார் 12 மீட்டர் உயரத்திற்கு வளர்கிறது. உலகின் பல பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் போது 3-5 மீட்டர் வரை வளர்கிறது.
இலைகள் ஒரு இனிமையான வாசனை மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. தண்டு மற்றும் மரத்தின் கிளைகள் ஒரு பிங்க் நிறம் மற்றும் சாம்பல் புள்ளிகளால் ஆன வெளிறிய தோலால் மூடப்பட்டிருக்கும். வசந்த மற்றும் கோடை காலத்தில், மரத்தின் அடிமரம், தண்டு மற்றும் முக்கிய கிளைகளில் நேரடியாக பல சிறிய வெள்ளை மலர்களால் மூடப்பட்டிருக்கும்.
தண்டு மற்றும் முக்கிய கிளைகளில் பூ மொட்டுக்கள் உருவாகும் இந்த செயல்முறை கொக்கோ மற்றும் ஏனைய வெப்பமண்டல பழ மரங்கள் சில வற்றில் காணலாம்.
இது வசந்த காலம் முடிந்தவுடன் இலையுதிர் காலத்தில் பழங்கள் 3-4 வாரங்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஆரம்ப காலத்தில் பழங்கள் கருப்பு, சிவப்பு, மற்றும் பச்சையாக இருக்கும். பழுத்த பழங்கள் திராட்சை பழங்களை ஒத்திருக்கின்றன. அவை மிகவும் இனிப்பாக இருக்கும். பழுத்த பழம் 4 அல்லது 5 நாள் வரைதான் கெடாமல் இருக்கும்.
குளிர்காலத்தில் இந்த மரத்தின் இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும், பின்னர் இளஞ்சிவப்பு இதழ்கள் துளிர் விட்டு வழக்கமான கரும் பச்சை நிறமாக வசந்த காலத்தில் தோன்றும்.
100 கிராம் பழத்தில் 22 மி.கி. வைட்டமின் சி, 0 கிராம் கொழுப்பு, 1 கிராம் புரதம், 13 கிராம் கார்போஹைட்ரேட், 6 மிகி கால்சியம், 0.01 மிகி thiamin, 9 மிகி பாஸ்பரஸ், 0.6 கிராம் நார்ச்சத்து, கொண்டிருக்கிறது.
இதன் பழத்தில் ஜெலி மற்றும் ஐஸ்கிரீம் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். பிரேசிலில் மிகவும் ருசியானது மது பாணம் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment