பொதுவாக கீரை வகைகள் கண்களுக்கும் உடல் அரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதுபோல் கீரை வகைகளில் ஒன்று தான் மணத்தக்காளி. இதற்கு மணித்தக்காளி, மிளகு தக்காளி எனவும் அழைப்பதுண்டு. இந்தக் கீரையில், புரதச் சத்தும், இரும்புச் சத்தும் நிறைய உள்ளன.
பல மகத்துவங்களை கொண்ட இந்த மணத்தக்காளியை நாம் வீட்டிலேயும் வளர்க்கலாம். இப்போது இதன் பயன்களை பற்றி பார்ப்போம்.
இந்த மணத்தக்காளி கீரையைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் முற்றிலும் குணமாகும்.
கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும், சேர்த்து கொதிக்கவைத்து சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவை குணமாகும்.
மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட வாத நோய்கள் தீரும்.
ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, 30 மி.லி. அளவுக்குத் தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். பெருவயிறு, வாய்ப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும்.
மணத்தக்காளிக் கீரையோடு, பூண்டு (4 பல்), நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால், இதய நோய்கள் குணமாகும்.
மணத்தக்காளிக் கீரையைச் சுத்தம் செய்து ,கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, அதில் எலுமிச்சம் பழத்தைப் (பாதி அளவு) பிழிந்து, சின்ன வெங்காயத்தை போட்டு அரைத்துச் சாறு எடுக்கவும். இதைக் காலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டால், பெருவயிறு போன்றவை குறையும்.
|
No comments:
Post a Comment