இந்த சோலார் மோட்டார் பற்றி மாணவன் தியாகராஜ் கூறுகையில், "இந்த சோலார் மோட்டார் சைக்கிள் ஏற்கனவே உள்ள சோலார் மோட்டார் சைக்கிளை விட வித்தியாசமானது இதில் பொருத்தபட்டுள்ள சோலார் பேனல் ஆட்டோமேட். அதனால எந்தா திசையிலும் சூரிய ஒளியை வாங்கி ஆற்றலை சேகரிக்கும் சூரிய ஒளி நேரடியாகபடாவிட்டால் 25 முதல் 30% ஆற்றலை சேமிக்கும். .
ஹரி மற்றும் அனிருத் கூறுகையில், "நெட்ல படிதோம் கொஞ்சம் ஐடியா கெடச்சது அப்புறம் புக் மூலமாகவும் விவரங்கள் சேகரிச்சோம். எங்களுக்கு ரொம்ப நாளாவே இது மாதிரி ஏதாச்சும் செய்யணுமின்னு இன்ரெஸ்ட்.
இது பேசிக் மாடல்..3950 ரூபாய்தான் இது கம்மியான செலவு. எல்லோரும் பயணம் செய்ய முடியாது. ஆனால் ரூ15,000 செலவு செஞ்சா போதும் இன்னும் அட்வான்ஸ் மோட்டார் சைக்கிளை தயாரிக்கலாம் இத செய்ய மூணு வாரம்தான் ஆச்சு .
சோலார் டிரேசிங் சர்க்கியூட் , சோலார் பேனல், ஆற்றல் சேமிக்கும் பேட்டரி, டி.சி.,மோட்டார், வீல் சேர்ந்த ஒரு கண்டக்டர். இது ரன் ஆகும் . இந்த சோலார் சைக்கிளுக்கு கொஞ்சம் சன் லைட் இருந்தா போதும் ரன் ஆகிவிடும்" என்றனர்.
மேலும் மேலும் முயற்சி செய்வோம் என்றார் தியாகராஜ்.
வேகமாகவும், குறைந்த ஆற்றலிலும் இயக்க வேண்டும் என்பதற்காக இம் மாணவர்கள் இவ் வாகனங்களை எடை குறைவாக செய்யும் முனைப்பில் ஈடுபட உள்ளனர்.
-சே.சின்னத்துரை
-சே.சின்னத்துரை
படம்: மீ.நிவேதன் ( மாணவ பத்திரிகையாளர்கள்)
இவர்களைப் போன்ற மாணவர்களுக்கு ஆய்வு செய்ய நல்ல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் சிறந்த அறிவியல் அறிஞர்கள் கிடைப்பார்கள்
ReplyDeleteExcellent effort
ReplyDeleteCongratulations for the students scientific invention.