Ingredients
- கோழி - 1/2 கிலோ
- தக்காளி,பச்சை மிளகாய் - 2
- சின்ன வெங்காயம் - 6
- தனி மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- சோம்பு,பட்டை,சீரகம் - சிறிதளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
- நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
தயார் செய்ய வேண்டியவை: 1. கோழியை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி,குக்கரில் மஞ்சள் தூள்,சிறிது சீரகம்,உப்பு சேர்த்து 4 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 2.சின்ன வெங்காயத்தை சிறிது சீரகம் சேர்த்து எண்ணையில் வதக்கி மிக்சியில் விழுதாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2-3 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடாகியதும் பட்டை,சோம்பு சேர்த்து பொரிந்து வரும் பொழுது தக்காளி,பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும்
பின்பு அதனோடு அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் சேர்த்து,தக்காளி கூழாகும் வரை வதக்கவும்.
இவற்றோடு வேக வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.
கடைசியாக தனி மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீரோடு சிக்கன் 4-5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
No comments:
Post a Comment