அமெரிக்காவைப்பற்றி தெரியாத தகவல்கள் .
வாஷிங்டனை தலைநகராக கொண்டு செயல்படும் அமெரிக்கா, பொதுவாக அமெரிக்க
ஐக்கிய நாடுகள் (United States of America or USA or USA) என்றே
எல்லோராலும் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்க கண்டத்தின் மத்தியில்
அமைந்திருக்கும் இந்நாடு, கிட்டத்தட்ட 9.83 மில்லியன் சதுர கிலோ மீட்டர்
பரப்பளவு கொண்டது. பரபப்பளவை பொருத்தமட்டில் உலகின் நான்காவது மிகப்பெரிய
நிலப்பரப்பை கொண்ட இத்தேசம், ஐம்பது மாநிலங்களையும் ஒரு ஐக்கிய
மாவட்டத்தையும் (Federal District) தன்னகத்தே கொண்டது. அமெரிக்காவின்
கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லைக்கு விமானத்தில் பயணப்பட்டால்
தோராயமாக ஐந்து மணி பிடிக்கும் இதனை கொண்டே அமெரிக்கா எவ்வளவு பெரிய
நிலப்பரப்பை கொண்ட தேசம் என்பது நாம் அறியலாம், அதுமட்டுமின்றி அதன் வடக்கு
எல்லையிலிருந்து தெற்கு எல்லைக்கு செல்ல கிட்டத்தட்ட நான்கு மணி நேரம்
ஆகும். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களிலிருந்து மேற்கு
பகுதி நகரங்களுக்கு விமானத்தில் சென்றால் கடிகாரத்தில் மூன்று மணி நேரத்தை
கூட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அமெரிக்க நாடு கிழக்கு
மேற்காக பரந்து விரிந்துள்ளது. நம் நாட்டிலிருந்து அமெரிக்காவின் மேற்கு
பகுதியில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோவிற்கு செல்பவர்கள் சிங்கப்பூர்
வழியாக சென்றால் பயண தூரம் குறைவு.
அமெரிக்காவின் கலிபோர்னியா
மாகாணத்தில் உள்ள பத்து பெரிய நகரங்களில் ஒன்று சான்பிரான்சிஸ்கோ. இது ஒரு
தீவு நகரம். இந்த நகரின் வீதிகளில் வளம் வரும் கேபிள் கார்கள் இந்நகரின்
போக்குவரத்தை எளிமையாக்குகின்றன. உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத இந்த
கேபிள் கார்கள் 1873-ம் ஆண்டு முதல் இங்கு இயங்குகின்றன. இந்த கார்கள்
தனிப்பட்ட சக்திகள் மூலம் இயங்கவில்லை, மாறாக மையப்படுத்தப்பட்ட ஒரு
இடத்திலிருந்து இயக்கப்படுகிறது. ஒவ்வொரு கேபிள் கார்களிலும் இரெண்டு
ஊழியர்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்திவிட்டு
கேபிள் கார்களில் நகரை சுற்றி வரலாம். ஒரு முறை செலுத்தும் கட்டணம் அந்த
நாள் முழுவதிற்கும் போதுமானது.
அமெரிக்காவில் உள்ள நகரங்களில்
நியூயார்க் நகரம் மட்டுமே 24 மணிநேரமும் தூங்காமல்
விழித்துக்கொண்டிருக்கும் நகரம், நம்ம மதுரையை போல. கடல் வழி, நில வழி,
ஆகாய வழி என்று மூன்று வழிகள் மூலமாகவும் மக்கள் வெள்ளம 24 மணி நேரமும்
நுழைந்து கொண்டிருக்கிறது. சாலையில் பல மை தூரத்திற்கு நீண்டு செல்லும்
மேம்பாலங்கள் ஆற்றின் உள்ளே போடப்பட்டு இருக்கும் சுரங்கப் பாதைகள்,
தரைக்கு கீழே செல்லும் ரயில் பாதைகள் நகரை சுற்றி ஓடும ஹட்சன் என்னும்
நதியில் இயங்கும் பெரி எனப்படும் சிறு கப்பல்கள் இப்படி நகர முழுவதும்
போக்குவரத்து வசதிகள் வியக்கும் வகையில் அமைந்துள்ளதால் சாலைகளில்
‘ட்ராபிக் ஜாம்’ பிரச்சனைகள் எல்லாம் அங்கு அறவே கிடையாது.
அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் உயர உயரமாய் கட்டிடங்களை கட்டுவதால் என்னவோ
இயற்கையன்னையும் அவர்களுக்கு உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான நயாகராவை
பரிசாக கொடுத்து இருக்கிறாள். நயாகரா என்ற சொல்லின் அர்த்தம் ‘நீரின்
இடியோசை’ என்பதாம். பணி மலைகளில் உருகிப் பெருகும் நீர் ‘இரிக்’ என்ற
ஏரியிலிருந்து ‘ஓண்டாரியோ’ என்ற ஏரிக்கு பாய்வதுதான் இந்த நயாகரா நீர்
வீழ்ச்சி. நீர் விழும் பகுதி குதிரை லாட வடிவில் இருப்பதால் இந்நதியை
‘ஹார்ஸ் ஷீ பால்ஸ்’ என்றும் அழைக்கிறார்கள். தண்ணீர் விழும் உச்சபச்ச உயரம்
170 அடி, இது அமெரிக்க எல்கையில் 1075 அடி அகலமும், கனடா நாட்டின்
எல்கையில் 2200 அடி அகலத்திலும் விரிந்து அருவியாய் கொட்டுகிறது.
கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு அழகான நகரம். சினிமா
உலகத்தின் தலைநகரமாக விளங்கும் ஹாலிவுட் என்னும் கனவு நகரம் இங்குதான்
அமைந்துள்ளது. இங்கு தான் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டூடியோ உள்ளது.
420-ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஸ்டூடியோவில் உலகத்தையே
இன்னும் சொல்லப் போனால் இந்த அண்டத்தையே அடக்கியுள்ளார்கள் என்று சொன்னால்
மிகையாகாது. பொது மக்கள் உள்ளே சென்று சுற்றி பார்க்கலாம், நுழைவு கட்டணம்
45-டாலர், நம் நாட்டு மதிப்பில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்.
ஸ்டூடியோவை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். யுனிவர்சல் ஸ்டூடியோவில்
குப்பைகளை போட ஆங்காங்கே கூடைகள் வைத்திருக்கிறார்கள். யாரவது இரெண்டு பேர்
ஓரிடத்தில் நின்று ஏதாவது தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தால்
அவர்களை நோக்கி குப்பை கூடை நகர்ந்து வந்து ‘என்னை உபயோகித்து கொள்ளுங்கள்’
என்று குரல் கொடுக்கும். அவர்கள் குப்பையை போட்டதும் குப்பை கூடைகள்
நகர்ந்து மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பிவிடும். சுற்றுலா பயணிகள்
இருக்கும் இடத்தை தூரத்திலிருந்து கண்காணிக்கும் துப்புரவு தொழிலாளிகள்
ரிமோட் மூலம் அந்த குப்பைக் கூடைகளை இயக்குகிறார்கள்.
சான்பிரான்சிஸ்கோ நகரம், நம் குஜராத்தை போல் ஒரு பூகம்ப பூமி.
200-ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தில் அப்போது அந்நகரமே முற்றிலும்
அழிந்து நாசமாகிவிட்டது. இரண்டாவது பூகம்பம் 1889-ல் ஏற்பட்டது. அதில்
1800-கட்டடங்கள் முற்றிலும் அழிந்து சேதமடைந்தன. இதனால் இங்குள்ள மக்கள்
பூகம்பத்திற்கு பயந்து கான்கிரிட் வீடுகளை அமைப்பதை தவிர்க்கிறார்கள்.
மரங்களை உபயோகித்து தான் வீடுகளை காட்டிக் கொள்கிறார்கள். வீடு முழுக்க
மரம் என்பதால் தீக்குச்சி பற்ற வைத்தால் கூட உடனே அலாரம் அடித்து
எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் சென்சார் கருவிகள்
அமைத்திருக்கிறார்கள். வீடுகளில் ட்யூப்லைட் உபயோகிப்பதில்லை, எல்லாம்
டேபிள் லேம்ப்தான்.
அமெரிக்க டாக்ஸி டிரைவர்களில் 99% பேர்
நாணயத்தோடு நடந்து கொள்பவர்கள். அவர்கள் தங்கள் பயணிகளை ஏமாற்றுவதில்லை.
நம் ஊரில் ஒரு டாக்ஸியில் ஏறிக்கொண்டு இந்த நகரில் ஒரு குறிப்பிட்ட
இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் பெரும்பாலான டாக்ஸி டிரைவர்கள்
வேண்டுமென்றே பல இடங்களை சுற்றிவிட்டு கடைசியாக நாம் குறிப்பிட்ட
இடத்திற்கு வந்தது நம் கைகளில் உள்ள பணத்தை கறந்து விடுவார்கள். ஆனால்
அமெரிக்காவில் நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் டாக்ஸி
டிரைவர்கள் தங்களிடம் உள்ள ரோடு மேப்பை காட்டி இந்த வழிகளில் சென்றால்
பயணக் கட்டணம் குறைவு என்று சொல்லி அறிவுறுத்திய பின்பே பயணத்தை
தொடர்கிறார்கள்.
நம் நாட்டில் சாலை விதிகள் பற்றி மக்களுக்கு
போதிய விழிப்புணர்வு இல்லை. அதேபோல் போதுமான பயிற்சி இல்லாமலேயே வாகனம்
ஓட்டுபவர்கள் அதிகம். காரணம் இங்குள்ள R.T.O-எனப்படும் விட்டார
போக்குவரத்து அலுவலகத்தில் பணம் கொடுத்தால் போதும் உரிமம் உடனடியாய்
கிடைத்துவிடும். அமெரிக்காவில் நம்மூர் R.T.O-வைப்போல D.M.V இருக்கிறது,
D.M.V-என்றால் DEPARTMENT OF MOTOR VEHICLES. இங்கு ஒருவர் டிரைவிங்
லைசென்ஸ் எடுக்க வேண்டுமென்றால் மோட்டார் வாகன சட்டம் என்ற புத்தகம் ஒன்றை
முழுமையாய் படித்து ஒரு பரிச்சை எழுத வேண்டும்.
அந்த பரிச்சையில்
தேறியவர்கள் இரெண்டு மாத காலம் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து வாகனம் ஓட்டப்
பழக வேண்டும். பின்பே சோதனை ஓட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள். D.M.V-யின்
சோதனை ஓட்டத்தில் 36-திறன்களை மதிப்பீடு செய்வார்கள். இதில் 6 - தவறுகள்
இருக்கலாம் 30-ஐ நாம் சரியாய் செய்தால் மட்டுமே லைசென்ஸ் தரப்படும்,
நம்மூரை போல் பணம் கொடுத்து லைசென்ஸ் பெறுவதெல்லாம் இங்கு கனவிலும் நடக்காத
செயல். பொதுவாக அமெரிக்காவில் உள்ள போலீஸ் காரங்களுக்கு லஞ்சம் கொடுக்க
நீங்க முயற்சித்தால் விசாரனையே இல்லாமல் உங்களுக்கு சங்குதான்
தொகுப்பு ----- ஜெகதீஷ்
No comments:
Post a Comment