அழகை விரும்பாத மனிதர்களை நாம் காண முடியாது. இன்று அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்றை வாங்கி சிலர் முகத்தில் பூசிக்கொள்கின்றனர். பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் பல விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர். அழகை பாதுகாக்கவும் மேலும் நம்மை அழகாக்கி கொள்ளவும் இயற்கை மூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே தயாரிக்கலாம் அழகு சாதன பொருட்களை. எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்
கிச்சிலிக் கிழங்குபொடி-100கிராம்
உலர்ந்த மகிழம் பூ-200கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்
கோரைக்கிழங்கு பொடி-100கிராம்
உலர்த்திய சந்தனப்பொடி-150கிராம்
உலர்ந்த மகிழம் பூ-200கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்
கோரைக்கிழங்கு பொடி-100கிராம்
உலர்த்திய சந்தனப்பொடி-150கிராம்
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சுத்தமான பன்னீர் சேர்த்து அடித்து சிறிய உருண்டைகளாக சேகரித்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ளவும். தினமும் குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பால் கலந்து முகத்தில் தடவி அரைமணிநேரம் ஊறிய பின் குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவலாம். கழுவிய பின் சோப்பு எதுவும் போடக்கூடாது. இவ்வாறு செய்து வந்தால் முகத்திற்கு மென்மையும் பளபளப்பும் கூடும்.
இன்றைய காலத்தில் அழகுக்காக மக்களை கவர்ந்திருக்கும் பல விதமான சோப்புகள், பவுடர்கள் வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் முகம், கை, கால்களில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிப்படையும்.. மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் போதிய அளவு சத்துகள் இல்லாததாலும் தேவையான அளவு தண்ணீர் பருகாததாலும் மிகசிறிய வயதில் முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. பல வித சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலே இயற்கை குளியல் பொடிகளை தயார் செய்து பயன்படுத்தினால் பாதுகாப்பும் அழகும் நம் வசமே இருக்கும்.
சோம்பு-100கிராம்
கஸ்தூரி மஞ்சள்-100கிராம்
வெட்டி வேர்-200கிராம்
அகில் கட்டை-200கிராம்
சந்தனத்தூள்-300கிராம்
கார்போக அரிசி-200கிராம்
தும்மராஷ்டம்-200கிராம்
விலாமிச்சை-200கிராம்
கோரைக்கிழங்கு-200கிராம்
கோஷ்டம்-200கிராம்
ஏலரிசி-200கிராம்
பாசிபயறு-500கிராம்
கஸ்தூரி மஞ்சள்-100கிராம்
வெட்டி வேர்-200கிராம்
அகில் கட்டை-200கிராம்
சந்தனத்தூள்-300கிராம்
கார்போக அரிசி-200கிராம்
தும்மராஷ்டம்-200கிராம்
விலாமிச்சை-200கிராம்
கோரைக்கிழங்கு-200கிராம்
கோஷ்டம்-200கிராம்
ஏலரிசி-200கிராம்
பாசிபயறு-500கிராம்
இவை அனைத்தையும் தனி தனியாக காயவைத்து அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்து தினமும் குளிக்கும் போது உங்களுக்கு தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து பால் அல்லது தண்ணீர் சேர்த்து குழைத்து உடல் முழுவதும் பூசி 15 நிமிடத்திற்கு பின் குளித்தால் உடல் தூற்நாற்றம் நீங்கி உடல் நறுமணம் வீசும். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் தேமல், படர்தாமரை,சொறி, சிரங்கு, கரும்புள்ளி, முதலியவை மறையும். இதை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment