Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, October 25, 2013

கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!


மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்து வலி இருக்கிறதே..! அது வந்து அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்.

தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலி இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சி தூங்குறத நிறுத்துங்க. சமதளமா தரையில பாய் விரிச்சி தூங்குங்க.

அடுத்ததா நொச்சி இலையை நல்லெண்ணையில போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளியுங்க. ஒருநாள் நொச்சி இலை குளியல்னா மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வச்சி குளியுங்க, அடுத்த நாள் வாதமடக்கி (வாத நாராயணன்) இலையை கொதிக்க வச்சி உடம்புக்கு ஊத்துங்க.

காலை டிபனுக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவுல கலந்து சாப்பிடுங்க. மத்தியான வேளையில மிளகு ரசம் இல்லன்னா கண்ட திப்பிலி ரசம் வச்சி சாப்பிடுங்க. முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைச்சா இஞ்சி பூண்டு காரமா சேர்த்து சாப்பிடுங்க.

ராத்திரி வேளையில நறுக்குமூலத்தை (கண்டதிப்பிலி) இடிச்சி பால், தண்ணி சேர்த்து வேக வச்சி பனங்கல்கண்டு இல்லைன்னா சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. கழுத்து வலி வந்த வழியை பார்த்து ஓடிப்போயிரும். இதே வைத்தியத்த உடம்பு வலி, கை-கால் அசதி இருந்தாலும் செய்யலாம்.

No comments:

Post a Comment