இரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்குத்தான் இரத்த அழுத்தம் என்று (Blood pressure) பெயர்
உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதற்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension) என்று பெயர். இதில் பரம்பரை மரபு அணுகோளாறும் அடங்கும். மற்ற காரணங்களால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension) என்று பெயர்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க சில வழிகள்!!!
*மன அழுத்தத்தை குறைக்கவும்: இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவது மன அழுத்தம். இதனால் ஏற்பட போகும் பாதிப்புகளை தவிர்க்க மன அழுத்தத்தை எப்படி குறைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக இதனை யோகா, தியானம், இசை போன்ற வழிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
*உடல் எடை கூடக்கூட உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பும் கூடுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள சுமார் 50% பேர் ஒன்று அளவுக்கு மீறி எடையுள்ளவர்களாகவோ அல்லது இரத்தத்தில் உயர் கொழுப்புத் தன்மை உடையவர்களாகவோ இருக்கின்றனர் என்று கண்டறிந்துள்ளனர்.
* மதுபானம் குடிப்பதை குறைக்கவும்: மதுபானத்தை குறைந்த அளவில் குடிக்கும் போது, அது உடலுக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் அதிக அளவில் குடிக்கும் போது இரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு மற்றும் மூளை பாதிப்பு போன்றவைகள் ஏற்படும். ஆகவே ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமானால் மதுபானத்தை தவிர்க்கவும்
* புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள் மதுபானத்தை போலவே, புகைப்பிடிக்கும் பழக்கமும் உடலுக்கு மிகவும் தீங்கானது. புகைப்பிடிப்பதால் இரத்த அழுத்தம், வாதம், புற்றுநோய் போன்ற பல கொடிய வியாதிகள் வந்தடையும்.
.
உணவு பழக்கம்:
*எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும். வயிறு புடைக்க உண்பதைத் தவிர்ப்பது நல்லது. முதலில் உண்ட உணவு செரிக்கும் முன்பே அடுத்தவேளை உணவு அருந்துவதும், நீண்ட பட்டினி கிடப்பதும் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக அமையும்.
*எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மாமிச கொழுப்பு வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு, அசைவ உணவுகள், பருப்பு வகைகள் வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
* உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறி வேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காலை உணவை காண்டிப்பாக சாப்பிட வேண்டும். சிற்றுண்டியாக இருத்தல் நல்லது. உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உணவு அருந்திய உடனே தூங்கச் செல்லக்கூடாது. பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு.
சீரான முறையில் உடல் பரிசோதனை:
*குடும்ப மருத்துவரை அணுகி சீரான இடைவேளையில் உடல் பரிசோதனை செய்து கொண்டால், முக்கியமான நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். ஆரோக்கியமான உடலை பெற ஒழுக்கமான வாழ்வு முறை அவசியமான ஒன்றாகும். அதிலும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட, உடல் பாதிப்படைய தொடங்கும். ஆகவே சிறிய வயதிலிருந்தே இதில் எல்லாம் கவனமாக இருந்தால், வருங்காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

No comments:
Post a Comment