பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு
பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி.
மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு
வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை
உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. விட்டு
விட்டு வருகின்ற காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய்
இலை, துளசியிலை, இலவங்கம், இவை யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு
கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.
தொண்டைக் கம்மல்,
வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50
கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30
நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று
வேளை அருந்தி வர நல்ல பலன் தரும். மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை
ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து
1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வாந்தி பேதி நிற்கும்.
பொதுவாக
உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம்
முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை இவை ஒவ்வொன்றையும் சம
அளவாக எடுத்து தண்ணீரில் நன்கு கழுக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி
அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, தணண்ணீர் சூடானதும் சூடான நீரில் நல்ல
துணியை நனைத்து ஒத்தடம் மிட நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு
தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை முடி புழுவெட்டு
என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து
முடி புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகை
அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை
இழுத்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச
தலைவலி தீரும்.
No comments:
Post a Comment