எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக க்ரில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாமா? வீட்டில் செய்வது எளிதா? எந்தக் காய்கறிகளை க்ரில் செய்யலாம்?
ஆலோசனை சொல்கிறார் செஃப் தாமோதரன்...
எண்ணெயில் பொரித்த உணவுகளில் இருக்கும் சுவை க்ரில் செய்யப்பட்ட உணவுகளிலும் கிடைக்கும். உடலுக்கு நல்லது. நேரமும் மிச்சமாகும். அதற்கு வீட்டில் OTG (Oven Toaster Griller) அடுப்பு இருக்க வேண்டும். சாதாரணமாக சமைக்கும் முறையில், எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக க்ரில் செய்தால் போதும். கடினமான காய்கறிகளை இப்படிப் பயன்படுத்தலாம். கேரட், காலிஃபிளவர், உருளைக்கிழங்கில் தேவையான அளவு உப்பு, மசாலா பொருள்கள் சேர்த்து க்ரில் செய்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.
க்ரில் செய்வதற்கு முன்னர் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்வது நல்லது. அசைவ உணவுகளை க்ரில் செய்து சாப்பிடுவது சிறந்தது. மசாலா பொருட்களை சேர்த்து, நன்கு ஊற வைத்து பிறகு க்ரில் செய்தால் டேஸ்ட் அபாரமாக இருக்கும். காலை நேரங்களில் விரைவாக சமைக்க சரியான வழி இது!
No comments:
Post a Comment