Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, October 23, 2013

கூந்தல் பள பளக்க... முட்டை, மீன் சாப்பிடுங்க


ஒவ்வொரு பெண்களும் மென்மையான அடர்த்தியான பளபளப்பான கூந்தலை வளர்க்க விரும்புவார்கள். ஷாம்புகள், கண்டிசனர்கள் மற்றும் கூந்தல்  அழகு சாதனை பொருட்களை பயன்படுத்துவதால் மட்டுமே கூந்தலை பெறமுடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. கூந்தல் வளர்ச்சியை  ஊக்கப்படுத்த புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள்,  வைட்டமின்கள் மற்றும் தாதுசத்து ஆகியவை அவசியம்.


கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள் புரதத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து  பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும்  என விரும்புபவர்கள் புரதசத்து நிறைந்த உணவு வகையான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு, வகைகளை சாப்பிடலாம்.

கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைட்ரேட் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கார்போஹைட்ரேட் சத்து  அதிகம் நிரம்பிய  ஒட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
உடலுக்கு நல்ல கொழுப்பு சத்துகள் தேவை.

கூந்தல் வறண்டு போதல் கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை கொழுப்பு சத்து தடுக்கின்றன.  எண்ணெய் தன்மை உள்ள மீன்கள்,  பருப்பு வகைகள், ஆலிவ்,  சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல  கொழுப்பு சத்து கிடைக்காவிட்டால் மருத்துவர்களின் ஆலோசனை பெறவேண்டும்.

மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின்  ஆகியவை தலைக்க தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதி செய்து தலைமுடி போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவி புரிகிறது-. நெல்லிக்காய்,  கொய்யா, சிட்ரஸ் பழங்கள் ஸ்ட்ராபெர்ரி அன்னாசி, தக்காளி, குடைமிளகாய், மற்றும் கீரை வகைகள், ஆகியவற்றில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து  கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

பச்சை காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து தலையில் ரத்த ஒட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.  கூந்தல்,சருமம், மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் பயோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின்  உற்பத்திக்கு உதவுகிறது.

கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது- முட்டை, மஞ்சள் கரு, கல்லீரல் அரிசி மற்றும் பால் பொருட்களில் பயோட்டின்  நிறைந்துள்ளது. கூந்தலுக்கு ஆக்ஸிஜனை எடுத்து செல்ல இரும்புசத்து உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் அவை  உடைந்து உதிர தொடங்கும்.  பச்சை காய்கறிகள் உலர்ந்த பழங்கள், முட்டை தர்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள  வேண்டும்.

கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு ஈரப்பதம் முக்கியமானது. எனவே கூந்தலின் வறண்ட தன்மை நீக்க தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  முறையான உடற்பயிற்சி உடலின் அனைத்து செல்களுக்கும் ரத்த ஒட்டத்தை சிராக்குகிறது-. எனவே வாரத்திற்கு 3 நாட்கள் அரைமணி நேரம்  முறையாக உடற்பயிற்சி செய்வது நல்லது. டீ காபி மற்றும் மது அருந்துவது உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துகளை வெளியேற்றி  விடுகிறது. அவை உணவில் இருந்து ஊட்டசத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. டீ, காபி, குடிப்பவர்கள் தினமும் ஒரு கப் என குறைத்து கொள்ள  வேண்டும். அதற்கு பதிலாக பழச்சாறு குடிக்கலாம்.

No comments:

Post a Comment