Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 20, 2013

இஞ்சியின் பயன்

உணவுகளில் சிலர் இஞ்சி உபயோகிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் பயன் பற்றி தெரியாது இருக்கலாம். இஞ்சியின் பயன் பற்றி பாட்டிகளை கேட்டால் அதன் மருத்துவ குணம் பற்றி சொல்லுவார்கள்.


இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும். உடலில் எந்தக் கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான்.

இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள். சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு

No comments:

Post a Comment