Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 20, 2013

பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!


1.கலோரி குறைவானது பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.

2.அதிகப்படியான வைட்டமின்களைக் கொண்டது பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகளதன சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.



3.நார்ச்சத்து நிறைந்தது தினமும் ஒரு கப் பசலைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும்.

4.ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பது பசலைக்கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும்.

5.புற்றுநோயைத் தடுக்கும் பசலைக்கீரையில் ஃப்ளேவோனாய்டு என்னும் அத்தியாவசிய பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.


6.இரத்த அழுத்தம் இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.


7.ஆரோக்கியமான இதயம் ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

8.கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.


9.அழகான சருமம் பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், சருமத்தில் எண்ணெய் பசையைத் தக்க வைத்து, சரும வறட்சியில் இருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமின்றி, இது சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் சுருக்கங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.

10.பார்வைக் கோளாறைத் தடுக்கிறது பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

11.ஆரோக்கியமான நரம்பு மண்டலம் பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.

12.எலும்புப்புரை/ஆஸ்டியோபோரோசிஸ் ஒரு கப் வேக வைத்த பசலைக்கீரையில் வைட்டமின் கே வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியோகால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது.

13.மூட்டுவலி/ஆர்த்ரிடிஸ் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக் குணப்படுத்தும்.

14.இரத்த சோகை பசலைக்கீரையில் இரும்புச்சத்து வளமாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

இங்கு அந்த பசலைக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இந்த கீரையை உணவில் சேர்க்காமல் இருக்கமாட்டீர்கள்.

No comments:

Post a Comment