இதனைத் தலைப்பாக்கி ஓர் இணைய தளம், நச்சென்று நாம் எப்படி தண்ணீரைக் காப்பாற்ற வேண்டும் என ஒரு சில படங்களில் அறிவுறுத்துகிறது. இந்த தளம் பிரிட்டன் நாட்டு மக்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயங்கினாலும், நீர் ஆதாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் இந்த உலகின் அனைத்து மக்களையும் பார்த்து நகைச்சுவை கலந்து, தகவல்களைத் தந்து எச்சரிக்கை செய்தியை வழங்குகிறது. இந்த அருமையான தளம் இயங்கும் முகவரி:
http://everylastdrop.co.uk
நம்முடன் தகவலைத் தந்து பேசும் இந்த தளத்தில் நுழைந்து, பின்னர், நாம் கீழாகச் செல்கையில், இதன் மேற்பகுதி மாறுகிறது. பகலாக இருப்பது இரவாகிறது. நமக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும், அன்றாட வாழ்க்கை முறையிலும், தொழிற்சாலைகளிலும், நாம் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்று காட்டப்படுகிறது. நம் வாழ்வியல் முறைகளை மாற்றினால், எப்படி தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. எடுத்துக் காட்டாக, நாம் வழக்கமாகக் குளிப்பதைக் காட்டிலும், ஷவர் மூலம் குளித்தால், எவ்வளவு தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. அதே போல, ஆடைகளைத் தயாரிப்பதிலும், சாப்பிடும் முறைகளை மாற்றுவதிலும், மிச்சப்படுத்தும் தண்ணீரின் அளவு தெரிவிக்கப்படுகிறது. இதே திரையில் இன்னும் வேகமாக ஸ்குரோல் செய்து சென்றால், ஒன்றரை நிமிடம் இயங்கும் வீடியோ குறும்படம் காட்டப்படுகிறது. இதில் தண்ணீரை எவ்வாறெல்லாம் மிச்சப்படுத்தலாம் என்று பல தகவல்கள் தரப்படுகின்றன. இதை எல்லாம் பார்த்த பின்னர், ஒவ்வொருவரும் தண்ணீரை மிச்சப்படுத்தும் பல வழிகளைக் கடைப்பிடிப்பார்கள் என்பது உறுதி. பல் துலக்கும்போதும், துணிகளை சலவை செய்திடும்போதும் நிச்சயம் தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்திட முயற்சிப்போம். இந்த அருமையான இணைய தளம் இயங்கும் முகவரி : http://everylastdrop.co.uk
No comments:
Post a Comment